எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

PLANTAIN FLOWER KOLA. வாழைப்பூக் கோளா.



PLANTAIN FLOWER KOLA:-

NEEDED:-

PLANTAIN FLOWER - 1/2

SOAKED THUVAR DHAL- 1 CUP

BIG ONION - 1 CHOPPED
RED CHILLIES- 5 NOS

SOMPH - 1 TSP

JEERA - 1/2 TSP

PEPPER CORN - 5

COCONUT - 2 INCH PIECE

OIL - 75 ML

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

CURRY LEAVES - 1 ARK

SALT - 1 TSP


METHOD :-

REMOVE THE VEINS FROM EACH FLORET. GRIND RED CHILLIES., SOMPH., JEERA., PEPPER., SALT., COCONUT. SEPERATELY GRIND THE THUVAR DHAL COARSLY. LASTY GRIND THE FLORETS. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMS BROWN ADD CURRY LEAVES AND CHOPPED ONION. ADD THE GROUND MASALA AND SAUTE WELL. AFTER 3 MINUTES ADD THE GROUND FLORETS AND DHALL. STIRR WELL. KEEP IT IN SOME AND STIRR OFTEN. OTHR WISE ITS STIKY TO THE BOTTOM. COOK FOR 10 TO 15 MINUTES TILL DONE. REMOVE FROM FIRE AND SEVE HOT WTH SAMBAR RICE OR CURD RICE.


வாழைப்பூக் கோளா:-

தேவையானவை:-

வாழைப்பூ - 1/2

ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

சிவப்பு மிளகாய் - 5

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 5

தேங்காய் - 2 இன்ச் துண்டு

எண்ணெய் - 75 மிலி

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 இணுக்கு

உப்பு - 1 டீஸ்பூன்.


செய்முறை:-

வாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாக கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போடவும். அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு அரைத்த பூவைப் போடவும். பின் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும் . இல்லாவிட்டால் அடி பிடிக்கும். 10லிருந்து 15 நிமிடங்கள் வரை கிளறி உதிரியாக வெந்ததும் இறக்கி சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...