திங்கள், 30 ஜூலை, 2012

PAAL AVAL ( BEATEN RICE) - பால் அவல்.:-

PAAL AVAL:-

NEEDED:-
AVAL ( BEATEN RICE ) - 1 CUP
MILK - 1/2 CUP ( THICK)
SUGAR - 1 TBL SPN
GRATED COCONUT - 1 TBLSPN
CARDAMOM - 2 POWDERED.

METHOD:- CLEAN AND WASH THE BEATEN RICE. SOAK IT IN 1/2 CUP MILK FOR 5 MINUTES. ADD SUGAR AND GRATED COCONUT.STIRR WELL. SPRAY CARDAMOM POWDER AND SERVE. ITS A HEALTHY FOOD.

பால் அவல்:-
தேவையானவை:-
அவல் - ( ரோஸ் அவல்) - 1 கப்
பால் - 1/2 கப் ( கெட்டியானது)
சீனி - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 பொடித்தது.

செய்முறை:- அவலை சுத்தம் செய்து களையவும். அதில் அரை கப் பால் ஊற்றி 5 நிமிடம் வைக்கவும். அதில் சீனி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய் பொடியைத் தூவிப் பரிமாறவும். இது நல்ல ஆரோக்கியமான உணவாகும்.

திங்கள், 9 ஜூலை, 2012

MUTTON UPPUK CURRY. மட்டன் உப்புக் கறி

 MUTTON UPPUK CURRY:-
NEEDED :-
MUTTON - 1/2 KG ( PREFER LAMB)
RED CHILLIES - 10 NOS. REMOVE SEEDS AND MAKE INTO PIECES.
SMALL INION - 15 NOS
GARLIC - 10 PODS
SALT - 2 TSP
OIL - 1 TABLESPN
ORID DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
CURRY LEAVES - 1 ARK

METHOD:-
PRESSURE COOK THE MUTTON. IF IT IS LAMB THEN NO NEED OF PRESSURE COOKING.. WE CAN DIRECTLY COOK IT IN THE PAN. HEAT OIL IN A PAN . ADD ORID DHAL, ANISEEDS. THEN ADD THE RED CHILLIES AND THEN THE CLEANED HALVED SMALL INION AND GARLIC. SAUTE FOR 2 MINUTES. WASH THE MUTTON PRESSURE COOK AND ADD. SAUTE FOR 2 MINUTES AND SPRAY LITTLE WATER AND COOK FOR 2O MINUTES IN A LOW FIRE . STIRR OCCSIONALLY. ADD SALT AND COOK FOR 2 MINUTES. STIRR WELL AND SERVE HOT WITH RICE AND CHAPPATI.

மட்டன் உப்புக் கறி:-
தேவையானவை:-
மட்டன் - 1/2 கிலோ ( இளம் ஆட்டுக் கறி )
சிவப்பு மிளகாய் - 10. இரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்க்கவும்.
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும். இளம் ஆட்டுக் கறியாக இருந்தால் பானிலேயே வேகவைக்கலாம். ப்ரஷர் குக் செய்ய தேவையில்லை. பானில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும். அதில் தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும். அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்

வியாழன், 5 ஜூலை, 2012

GREEN GRAM SUNDAL .பாசிப்பயறு சுண்டல்.

GREEN GRAM SUNDAL:-
NEEDED:-
GREEN GRAM - 1 CUP
SALT- 1/2TSP
GRATED COCONUT - 1 TBL SPN
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH ( OPTIONAL)
RED CHILLY - 1 NO. HALVED
CURRY LEAVES - 1 ARK

METHOD:-
WASH AND SOAK GREEN GRAM FOR 10 MINUTES. PRESSURE COOK FOR 2 WHISTLES. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA POWDER ,HALVED RED CHILLY AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE AND ADD THE COOKED GREEN GRAM WITH SALT. STIRR WELL AND ADD THE GRATED COCONUT. REMOVE FROM FIRE AND SERVE IT .

பாசிப்பயறு சுண்டல்:-
தேவையானவை:-
பாசிப்பயறு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் -1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும். 
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
பச்சைப் பயறைக் கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வேகவிடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயப்பொடி, வரமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். அதில் வெந்த பயறு, உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கிளறிப் பரிமாறவும்.

புதன், 4 ஜூலை, 2012

MILK BENI.பால் பேணி

MILK BENI:-
NEEDED:-
MILK BENI - 1 CUP
HOT MILK - 1/3 CUP OR
CONDENSED MILK - 1 TBL SPN WITH 1/4 CUP HOT WATER OR
WARM COCONUT MILK - 1/3 CUP
SUGAR - 2 TSP

METHOD:-
PLACE THE MILK BENI IN A SERVING BOWL. ADD 2 TSP SUGAR WITH HOT MILK OR WITH COCONUT MILK, OR CONDENSED MILK WITH QUARTER CUP HOT WATER. SERVE IT.

பால் பேணி:-
தேவையானவை:-
பால் பேணி - 1 கப்
சூடான பால் - 1/3 கப் அல்லது
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டேபிள் ஸ்பூன்+ 1/4 கப் வெந்நீர் அல்லது
 வெதுவெதுப்பான தேங்காய்ப் பால் - 1/3 கப்
சீனி - 2 டீஸ்பூன்

செய்முறை:-
பேணியை ஒரு பரிமாறும் கிண்ணத்தில் வைக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் சீனியைத் தூவவும். அதன் மேல் சூடான பால் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப் பால் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் ஒரு டேபிள் ஸ்பூனை கால் கப் வெந்நீரில் கலக்கி ஊற்றவும். பரிமாறவும்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

BEATEN RICE UPMA .அவல் உப்புமா

BEATEN RICE UPMA:-
NEEDED :-
BEATEN RICE - 1 CUP
WATER - TO WASH AND SOAK
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
RED CHILLY - 1 NO. HALVED
GREEN CHILLY - 1 NO. SLIT OPEN
BIG ONION - 1 NO. CHOPPED
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/4TSP.

METHOD:-
WASH THE BEATEN RICE. DRAIN AND KEEP ASIDE. THE WATER REMAINS IN IT IS ENOUGH FOR SOAKING. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD RED CHILLY, GREEN CHILLY, BIG ONION AND CURRY LEAVES. SAUTE FOR 2 MINUTES. ADD THE SOAKED BEATEN RICE WITH SALT. STIRR WELL FOR 2 MINUTES AND SERVE HOT AS A EVENING TIFFIN WITH COCONUT CHUTNEY OR IDLIE PODI.

அவல் உப்புமா:-
தேவையானவை :-
அவல் - 1 கப்
தண்ணீர் - அவலைக் கழுவ மற்றும் நனைக்கத் தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளவும்.
பச்சை மிளகாய் - 1 ரெண்டாக வகிரவும்.
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:-
அவலை தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். அதில் மிச்சமிருக்கும் தண்ணீரே அது ஊறப் போதுமானது. பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், வரமிளகாய், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் ஊறவைத்த அவலையும் உப்பையும் போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி சூடாக தேங்காய் சட்னி அல்லது இட்லிப் பொடியுடன் மாலை உணவாகப் பரிமாறவும்.

திங்கள், 2 ஜூலை, 2012

MASALA PUFFED RICE - மசாலா பொரி

MASALA PUFFED RICE:-
NEEDED :-
PUFFED RICE - 1 CUP
BIG ONION - 1 NO. PEELED AND CHOPPED
TOMATO - 1 NO. SMALL ( OPTIONAL) CHOPPED FINELY
CORRIANDER LEAVES - ONE HANDFUL WASHED CLEANED AND CHOPPED
HOT AND SWEET TOMATO CHILLI SAUCE - 1 TABLE SPN

METHOD :-
PLACE THE PUFFED RICE IN A BOWL AND SPRAY THE FINELY CHOPPED ONION , TOMATO AND CORRIANDER LEAVES. POUR ONE TABLE SPN FULL OF HOT AND SWEET TOMATO CHILLI SAUCE. AND HAVE IT AS A HEALTHY EVENING SNACK.

மசாலா பொரி:-
தேவையானவை.:-
பொரி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்.
தக்காளி - 1 சிறியது ( விரும்பினால்) பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கவும்.
ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
பொரியை ஒரு பவுலில் பரப்பவும். அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம் , கொத்துமல்லித்தழை, தக்காளியைத் தூவவும். அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸை ஊற்றவும். மாலை உணவாகப் பரிமாறவும்.