மாதங்களில்
சிறந்தது மார்கழி. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று
பகவத்கீதையில் கூறி இருக்கிறார் கிருஷ்ணர். இது சிவனுக்கும் பெருமாளுக்கும்
உரிய மாதம். திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலிக்கும் காலம், அரியும்
அரனும் ஒன்று
என்று சிறப்பிக்கும் மாதம். இம்மாதத்தில் சிவனடியார்கள் சிவனைத் தரிசித்து
கைலாயம் அடைய ஆருத்ரா
தரிசனமும், வைணவர்கள் பெருமாளின் பரமபதத்தை அடைய சொர்க்க வாசல் திறக்கும்
வைகுண்ட ஏகாதசியும்
ஒருங்கே இருப்பது சிறப்பு.
ஆடல் வல்லானின் அழகுத் திரு நடனத்தையும் ஆருத்ரா தரிசனத்தையும்
கண்டு உபவாசமிருக்கும் சிவனடியார்கள் மாலையில் பிரதோஷ காலம் முடிந்ததும் காப்பரிசியை
உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அதன் பின் களி, ஏழுதான் குழம்பு போன்றவற்றை உணவாகக்
கொள்ளலாம்.