திங்கள், 1 ஜூன், 2020

பேபிகார்ன் பஜ்ஜி/ஃப்ரிட்டர்ஸ்.

பேபிகார்ன் பஜ்ஜி/ஃப்ரிட்டர்ஸ்.

தேவையானவை:- பேபிகார்ன் - 6 பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 100 கி அல்லது கடலைமாவு - 1 கப் + அரிசிமாவு ஒரு டீஸ்பூன்+ மி.பொடி - கால் டீஸ்பூன் + உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலைமாவில் அரிசிமாவு மிளகாய்பொடி உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். பேபிகார்னை இரண்டாகவோ நான்காகவோ நீளவாக்கில் வெட்டி வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு நீரை வடிய வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து பேபிகார்ன் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்துப் போட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.

பஜ்ஜிமாவில் கொஞ்சம் மைதாவும் கார்ன்ஃப்ளோரும் கலந்து கொண்டால் க்ரிஸ்பியாக இருக்கும். இதுவே ஃப்ரிட்டர்ஸ்.

30 வகை மலர் சமையல். 30 TYPES OF FLOWER RECIPES.


30 வகை மலர் சமையல்.  30 TYPES OF FLOWER RECIPES.

1.வாழைப்பூ கோளா,
2.வாழைப்பூ வடை
3.வாழைப்பூ கட்லெட்.
4.வேப்பம்பூ வெல்லப் பச்சடி,
5.ரோஜாப்பூ பன்னீர் ரசம்,
6.முருங்கைப்பூ துவட்டல்
7.குங்குமப்பூ சாதம்
8.தாமரை விதைப் பாயாசம்
9.காலிஃப்ளவர் சாப்ஸ்
10.காலிஃப்ளவர் மஞ்சூரியன்
11.ரோஸ் மில்க் ( ரோஜாப்பூ )
12.வாழைப்பூ பஜ்ஜி
13.வாழைப்பூ பால் கூட்டு
14.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்,
15.காலிஃப்ளவர் குருமா,
16.ரோஜாப்பூ வனிலா பாயாசம்,
17.ப்ராகோலி புலவ்.
18.ப்ராகோலி சூப்
19.காலிஃப்ளவர் சூப்
20.காலிஃப்ளவர் மசாலா
21.காலிஃப்ளவர் சாப்ஸ்
22.ப்ராகோலி பிரட்டல்
23.செம்பருத்தி டீ
24.ஃப்ளவர் சாலட்.
25.ஜாஸ்மின் ரைஸ்
26.வெங்காயப் பூ தயிர்ப்பச்சடி
27.குல்கந்து
28.ஆவாரம்பூ கஷாயம்
29.குங்குமப்பூ பால் ப்ரெட்
30.தென்னம்பாளைப் பொடிமாஸ்