எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 டிசம்பர், 2023

11.வெஜ் லெமன் சேமியா

11.வெஜ் லெமன் சேமியா



தேவையானவை:- சேமியா - 1 பாக்கெட்பெரிய வெங்காயம் - 1, காரட் -சின்னம் 1, பட்டாணி - ஒரு கைப்பிடிபச்சைமிளகாய் - 1,உப்பு - அரை டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎலுமிச்சைச் சாறு - அரை மூடிதாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகுஉளுந்து தலா - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெங்காயம்பச்சைமிளகாய்காரட்டை நீளமாக நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகுஉளுந்து தாளித்து வெங்காயம்பச்சைமிளகாய்பட்டாணிகேரட்டைத் தாளிக்கவும்நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்உப்புச்  சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவைச் சேர்த்துக் கிளறி தீயை அடக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு இரு நிமிடங்கள் வேகவிடவும்அடுப்பை அணைத்து மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு கலக்கித் திரும்ப மூடி வைக்கவும்தக்காளி சாஸ் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

10.கோங்குரா துவையல்/சட்னி

10.கோங்குரா  துவையல்/சட்னி


தேவையானவை:- புளிச்சகீரை - 1 கட்டுவரமிளகாய் - 10, பெரிய வெங்காயம் - 1, புளி - ஒரு நெல்லி அளவுஉப்பு - அரை டீஸ்பூன்வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன்வெந்தயம் - கால் டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய்வரமல்லிவெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்பெரிய வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணெயில் உப்புப் புளியோடு வதக்கவும்வெங்காயத்தை எடுத்தபின் அதே வாணலியில் சுத்தம் செய்து ஆய்ந்து கழுவிய புளிச்சகீரையை நன்கு பிரட்டி வதக்கவும்எல்லாவற்றையும் ஆறவைத்து மிக்ஸியில் முதலில் மிளகாய்வரமல்லி வெந்தயத்தைப் பொடித்து அதன் பின் வெங்காயம் கீரையைப் போட்டுக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்இதை ஒரு பௌலில் வழித்து எடுத்து வைக்கவும்அதன் மேல் எண்ணெயைக் காய்ச்சிக் கடுகு போட்டுப் பொரிந்ததும் ஊற்றவும்சுவையான கோங்குரா சட்னி தயார்இதை இட்லி தோசைசாதத்தோடு பரிமாறவும்.

திங்கள், 25 டிசம்பர், 2023

9.பைனாப்பிள் ரசம்

9.பைனாப்பிள் ரசம்


தேவையானவை:- பைனாப்பிள் – ஒரு துண்டு, பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 கப், புளி – ஒரு சுளை, உப்பு – அரை டீஸ்பூன், ரசப்பொடி அல்லது மிளகாய் – 1 மல்லி – சிறிது , சீரகம், மிளகு தலா அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்கவும். நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை.

செய்முறை:- ஒரு கப் பருப்புத் தண்ணீரில் பைனாப்பிளை வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும். மீதி பருப்புத் தண்ணீரில் ஒரு சுளை புளியைக் கரைத்து உப்பைப் போடவும். இதில் ரசப்பொடியைப் போட்டு நன்கு கரைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, கருவேப்பிலை தாளித்துப் புளி கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதி வரும்போது பைனாப்பிள் கரைத்த தண்ணீரை ஊற்றி நுரைத்ததும் இறக்கவும்..

புதன், 20 டிசம்பர், 2023

8.காலிஃப்ளவர் சொதி

8.காலிஃப்ளவர் சொதி



தேவையானவை:- காலிஃப்ளவர் சின்னம் - 1, பெரிய வெங்காயம் - 1,  தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 6, வரமல்லி - 1 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், தாளிக்க - எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, இலை, பூ, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.  கருவேப்பிலை - இணுக்கு , உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- காலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாகப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு வடிக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கீறிய பச்சைமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை வெதுப்பவும். இத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை இலை பூ, கிராம்பு, ஏலக்காய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவையும் போட்டுத் திறக்கவும். இத்துடன் காலிஃப்ளவரைச் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். இன்னும் ஐந்து நிமிடங்கள் வெந்ததும் பொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி இறக்கவும்.

செவ்வாய், 19 டிசம்பர், 2023

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி



தேவையானவை:- முருங்கைக்காய் - 2., 3 இன்ச் துண்டுகளாக நறுக்கவும், கத்திரிக்காய் - 4 குறுக்கே கிராசாக நறுக்கவும்., சின்ன வெங்காயம் - 8 உரித்து நெட்டாக நறுக்கவும்., பச்சை மிளகாய் - 2 . ரெண்டாக வகிரவும், வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு, வரமிளகாய் - 2 இரண்டாக கிள்ளிவும், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- ஒரு பானில் வெந்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக்காய்., கத்திரிக்காய்., சின்ன வெங்காயம்., பச்சைமிளகாய்., மஞ்சள் பொடி., சாம்பார் பொடி., பெருங்காயம் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் உப்புடன் கரைத்து காய்கள் வெந்ததும் சேர்க்கவும். 3 நிமிடம் கொதித்து சேர்ந்ததும் ஒரு இரும்புக் கரண்டியில் ( தாளித்துக் கொட்டும் கரண்டி) எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். தாளித்ததை பச்சடியில் கொட்டி சூடாக சாதத்தோடோ., தயிர்சாதத்தோடோ., இட்லி., தோசையோடோ பரிமாறவும்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

6. பரங்கிக்காய் புளிக்கறி

6. பரங்கிக்காய் புளிக்கறி



தேவையானவை :- பரங்கிக்காய் – 1 கீத்து, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப் பூண்டு – 4, வரமிளகாய் – 4, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து -  1 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை:- பரங்கிக்காயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டை உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். புளியை உப்புப் போட்டு அரைகப் தண்ணீரில் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வெள்ளைப் பூண்டைப் போட்டு வதங்கியதும் பரங்கிக்காயைக் கழுவிச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி சாம்பார் பொடி போட்டு புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறி விட்டுக் கொதி வந்ததும் அடக்கி வைத்து மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வேக விடவும். வெந்ததும் இறக்குமுன் வெல்லம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

5.உப்புப் புளி ரசம்

5.உப்புப் புளி ரசம்


தேவையானவை :- சின்ன வெங்காயம் - 15, வரமிளகாய் - 4, கருவேப்பிலை -  1 இணுக்குதண்ணீர் - 2 கப்புளி - 1 நெல்லி அளவுஉப்பு - 1/2 டீஸ்பூன்பெருங்காயம் - 1 சிட்டிகைசீரகம் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:- புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும்இதில் பெருங்காயத்தூள்சீரகத்தை உள்ளங்கையில் கசக்கிச் சேர்க்கவும்வரமிளகாயை விதை நீக்கிக் கிள்ளிப் போடவும்கருவேப்பிலையையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும்சின்ன வெங்காயத்தை உரித்து நைஸாக அரிந்து போடவும்.எல்லாவற்றையும் சேர்த்துக் கையால் பிசைந்து விடவும்இரு நிமிடங்கள் வைத்திருந்து சூடான இட்லிகளுடன் அல்லது தோசைகளுடன் பரிமாறவும்

வியாழன், 14 டிசம்பர், 2023

4.உருளை எலுமிச்சை சப்ஜி

4.உருளை எலுமிச்சை சப்ஜி


தேவையானவை:- உருளைக்கிழங்கு - 2 வேகவைத்துத் தோலுரித்து மசிக்கவும்., பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., பச்சை/சிகப்பு மிளகாய் - 3, 1 இன்ச் துண்டாக நறுக்கவும்., இஞ்சி - 1 இன்ச் துண்டுபொடியாக நறுக்கவும்., மஞ்சள் பொடி - 1 சிட்டிகை., எலுமிச்சை ரசம் - 1/2 டேபிள் ஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்கு,, எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை இலை - 1

செய்முறை:- பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும்அது வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் கடலைப்பருப்புசோம்பு பட்டை இலை போடவும்இஞ்சிகருவேப்பிலைபச்சைமிளகாய்வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு . மஞ்சள் தூளும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்கவும்அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் வேகவைத்து சப்பாத்திநான்புல்காவோடு பரிமாறவும்.

புதன், 13 டிசம்பர், 2023

3.கருணைக்கிழங்குப் புளி மசியல்

3.கருணைக்கிழங்குப் புளி மசியல்


தேவையானவை :- கருணைக்கிழங்கு - 3, சின்ன வெங்காயம் -15 பொடியாக நறுக்கவும்பூண்டு - 10 பொடியாக நறுக்கவும்சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள்பொடி - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்புளி -1 நெல்லி அளவுஉப்பு -1 டீஸ்பூன்கடுகுஉளுந்துசோம்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- கருணைக்கிழங்கை நன்கு கழுவிக் குக்கரில் இரண்டு விசில் வேகப்போடவும்வெந்ததும் தோலுரித்து மசித்து வைக்கவும்புளியை அரை கப் நீரில் கரைத்து மஞ்சள் பொடிசாம்பார் பொடி போட்டு கருணைக்கிழங்கையும் போட்டுப் பிசைந்து வைக்கவும்எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்துசோம்பு தாளித்து வெங்காயம் பூண்டைப் போட்டு இரு நிமிடங்கள் வதக்கவும்இதில் கருணைக்கிழங்கு மசியலைப் போட்டு நன்கு கிளறவும்தீயைக் குறைத்து வைத்துப் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நன்கு கிளறி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

2.மாவத்தல் குழம்பு

2.மாவத்தல்  குழம்பு


தேவையானவை.:- மாவற்றல் துண்டுகள்   -  15, சின்ன வெங்காயம் - 6, வேகவைத்த துவரம் பருப்புஉப்பு - 1 டீஸ்பூன்சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை., கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும்மஞ்சள் பொடிமல்லிப்பொடிமிளகாய்ப் பொடிஉப்பு  ஆகியவற்றைக் கலந்து வைக்கவும்., ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, மாவற்றல்  , சிவெங்காயம் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம்மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும்மூன்று விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து தேவையான தண்ணீர் ஊற்றி மசாலாப் பொடிகளைப் போடவும்.  5 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும்அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம்பெருங்காயப் பொடிவரமிளகாய்கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடான  சாதம்வெண்டிக்காய் அல்லது உருளைக் கறியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

1.க்ரீன் ஆப்பிள் மோர்க்குழம்பு

1.க்ரீன் ஆப்பிள் மோர்க்குழம்பு


தேவையானவை:- க்ரீன் ஆப்பிள் – 1, தயிர் – 1 கப்தேங்காய் – அரை மூடிபச்சை மிளகாய் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகைஉப்பு – ஒரு டீஸ்பூன்தாளிக்க:- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்சீரகம்வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்குவரமிளகாய் – 1

செய்முறை:- ஆப்பிளைத் தோல் சீவாமல் மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேகவிடவும்இதில் தேங்காய்பச்சை மிளகாய்சீரகத்தை அரைத்து ஊற்றவும்லேசாகக் கொதித்ததும் தயிரை நன்கு கடைந்து ஊற்றி நுரைக்கும்போது உப்பு சேர்த்து இறக்கவும்தேங்காய் எண்ணெயில் கடுகுசீரகம்வெந்தயம்கருவேப்பிலைஇரண்டாகக் கிள்ளிய  வரமிளகாய்  தாளித்து மோர்க்குழம்பில் சேர்க்கவும்.

வியாழன், 7 டிசம்பர், 2023

தக்காளி இல்லாத சமையல்

 இந்த ரெஸிப்பீஸ் 10.8.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 


தக்காளி இல்லாத சமையல்



1.
க்ரீன் ஆப்பிள் மோர்க்குழம்பு

2.மாவத்தல் குழம்பு

3.கருணைப் புளி மசியல்

4.உருளை எலுமிச்சை சப்ஜி

5.உப்புப் புளி ரசம்

6.பரங்கிக்காய் புளிக்கறி

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

8.காலிஃப்ளவர் சொதி

9.பைனாப்பிள் ரசம்

10.கோங்குரா  துவையல்/சட்னி

11.வெஜ் லெமன் சேமியா

12.ஆரஞ்சு சப்பாத்தி

13.மாம்பழ சாம்பார்

14.வர மிளகாய்த் துவையல்

15.இஞ்சிப்புளித் தொக்கு

16.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

17.தால் தட்கா

18.மோருகறி

19.பச்சைப்புளியஞ்சாதம்

20.பலகாய் மண்டி


புதன், 6 டிசம்பர், 2023

ரஸ்க் ரெஸிப்பீஸ்

இந்த ரெஸிப்பீஸ் குமுதம் சிநேகிதியில் வெளியானவை.


ரஸ்க் ரெஸிப்பீஸ்



1.ரஸ்க் ஆலு டிக்கி

2.ரஸ்க் மஷ்ரூம் கட்லெட்

3.ரஸ்க் மீல்மேக்கர் சாசேஜ்

4.பேகட் ரஸ்க் சாக்லேட் & நட்ஸ்

5.மெல்பா டோஸ்ட்

6.க்ரூட்டன்

7.மில்க் டோஸ்ட்

8.க்ரஞ்சி  கார்ன் சாலட்

9.க்ரிஸ்ப்  வெஜ் ரோல்ஸ்

10.மலாய் ரஸ்க்

11.ரஸ்க் ஜாமூன்

12.கேவ்ரா ரஸ்க்

13.அங்க்லாமேட்

14.ஹேகல்ஸ்லாக்

15.மியூஸ்ஜெஸ்

16.ரஸ்க் புதினா பகோடா

17.ரஸ்க் ஃப்ரூட் புட்டிங்

18.ரஸ்க் கஸ்டர்ட்

19.ரஸ்க் குல்ஃபி

20.ரஸ்க் பனீர் கோலா

செவ்வாய், 5 டிசம்பர், 2023

காய் கனி இனிப்பு ரெஸிப்பீஸ்

இந்த சமையல் குறிப்புகள் குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

 காய் கனி இனிப்பு


 

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

லெமன் பாஸ்தா

லெமன் பாஸ்தா



 

தேவையானவை :- மிக்ஸ்ட் பாஸ்தா – 2 கப், பெரிய வெங்காயம் – 1, கேரட் – 1, கொத்துமல்லித்தழை – கால் கப், பட்டர் – 1 டேபிள் ஸ்பூன், சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், மிளகுப் பொடி – கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்.

 

செய்முறை :- ஆறு கப் நீரைக் கொதிக்கவைத்து பாஸ்தாக்களை சேர்க்கவும். கொதித்ததும் தீயை நிதானமாக்கவும். பத்து நிமிடங்களில் பாஸ்தா மென்மையாக வெந்ததும் இறக்கி நீரை வடிகட்டி ஆலிவ் ஆயில் சேர்த்துக் குலுக்கி  ஆறவிடவும். பானில் பட்டர் & சீஸைப் போடவும். இரண்டும் உருகும்போது சீனி & உப்பைச் சேர்க்கவும். அதில் நீளமாக அரிந்த வெங்காயம், துருவிய கேரட் போட்டு நன்கு வதக்கி வெந்த பாஸ்தாக்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, மிளகுப் பொடி தூவிப் பரிமாறவும்.

சனி, 2 டிசம்பர், 2023

சன்னா வடை

சன்னா வடை



தேவையானவை :- வெள்ளைக் கொண்டைக்கடலை ( காபூலி சன்னா) – 2 கப், மைதா – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – கால் கப், வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன் , சீரகம், 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 5 பல், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளைக் கொண்டைக் கடலையைக் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து மிக்ஸியில் கொண்டைக் கடலை, மைதா, பெரிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய்த்தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வடைகளாகத் தட்டி வெள்ளை எள்ளில் புரட்டி வைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரிக்கவும். மயோனிஸுடன் பரிமாறவும்.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

தட்டுவடை செட்

தட்டுவடை செட்



 

தேவையானவை:- சிறிய தட்டை – 12, பெரிய வெங்காயம் – 1, கேரட் – 1, பீட்ரூட் – 1, மாங்காய் – பாதி, கொத்துமல்லி – 1 டேபிள் ஸ்பூன், சாட் மசாலா – 2 டீஸ்பூன், புதினா சட்னி – கால் கப், கார சட்னி – கால் கப், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- பெரியவெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட், பீட்ரூட், மாங்காயைத் தோல்சீவித் துருவி உப்புப் போட்டுக் கலந்து வைக்கவும். கொத்துமல்லியையும் பொடியாக அரியவும். ஒரு பெரிய ப்ளேட்டில் ஆறு தட்டைகளைப் பரப்பவும். முதலில் கால் ஸ்பூன் கார சட்னியைத் தடவி அதன் மேல் பீட்ரூட், கேரட், மாங்காய் கலவை ஒரு ஸ்பூன் வைக்கவும். அரை ஸ்பூன் வெங்காயம் வைத்து, கொத்துமல்லியையும் சாட் மசாலாவையும் தூவவும். எலுமிச்சை சாறை ஸ்ப்ரே செய்து புதினா சட்னி கால் ஸ்பூன் அதன் மேல் வைத்து இன்னொரு தட்டையால் மூடவும். இதை அப்படியே பரிமாறவும். 

புதன், 29 நவம்பர், 2023

மினி பஃப்ஸ்

மினி பஃப்ஸ்

 

தேவையானவை :- ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா – 2 கப், வேகவைத்த கொண்டைக் கடலை – கால் கப், மினி மீல்மேக்கர்/சோயா சங்க்ஸ் – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப் பொடி – அரை டீஸ்பூன், கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 டீஸ்பூன்.பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், டால்டா – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:-

 

மைதாவுடன் பேக்கிங் பவுடரையும் உப்பையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கடைசியில் டால்டா சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். சோயா சங்க்ஸை வெந்நீரில் போட்டு அலசிப் பிழிந்து வைக்கவும். ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொண்டக்கடலை சோயா சங்க்ஸ், உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு நன்கு வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்து இறக்கவும். அரிசி மாவில் 2 டீஸ்பூன் எண்ணெயும் தண்ணீரும் சேர்த்துக் குழைத்து வைக்கவும். பிசைந்த மைதாவில் ஒரு பெரிய உருண்டை எடுத்து மைதா மாவில் புரட்டி நன்கு பெரிய சப்பாத்தியாக சதுர அளவில் தேய்க்கவும். அதில் அரிசி எண்ணெய் பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி திரும்பத் தேய்க்கவும். திரும்ப அரிசி மாவு பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி நீளமாகத் தேய்க்கவும். அதை இரண்டாக வெட்டி உள்ளே மசாலாவை ஸ்டஃப் செய்து ஓரங்களை ஒட்டவும். கனமான தோசைக்கல்லைக் காயவைத்து 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு பஃப்ஸ்களையும் வேகவிடவும். அப்பளம் எடுக்கும் குறடினால் எல்லாப் பக்கமும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...