வியாழன், 28 செப்டம்பர், 2023

குனாஃபா

குனாஃபா

தேவையானவை:- சேமியா – 300 கிராம், வெண்ணெய் – அரை கப், பால் – ஒருகப் + கால் கப், சீனி – ஒரு டேபிள் ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் – அரை டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன், ஏதேனும் ஒரு சீஸ் – 100 கிராம், கேசரி கலர் – 1சிட்டிகை, சர்க்கரைப் பாகு தயாரிக்க :- தண்ணீர் – அரை கப், சீனி – அரை கப். பொடித்த பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- இரண்டு நான் ஸ்டிக் பேன்களில் தலா ஒரு டீஸ்பூன் வெண்ணெயைத் தடவி வைக்கவும். ஒன்றை விட மற்றொன்று பெரிதாக இருக்க வேண்டும். சேமியாவை ஒரு பெரிய பேஸினில் கொட்டி நான்கு டேபிள் ஸ்பூன் வெண்ணையை உருக்கி ஊற்றி கேசரி கலரையும் போட்டு நன்கு கிளறவும். சிறிய பேனில் தடவிய வெண்ணெயின் மேல் பாதி சேமியாவை நன்கு பரப்பி ஒரு கிண்ணம் அல்லது தட்டினால் நன்கு அமுக்கி வைக்கவும். ஒரு பானில் ஒரு கப் பாலைக் காய்ச்சி சீனி சேர்க்கவும். அது கொதிக்கும்போது கால் கப் பாலில் கார்ன்ஃப்ளோரைக் கரைத்து ஊற்றவும். அது கெட்டியாகும்போது சீஸைத் துண்டுகள் செய்து போட்டு ரோஸ் வாட்டர் கலந்து நன்கு கரைந்ததும் இறக்கவும். இதைப் பானில் பரத்திய சேமியாவின் மேல் பானின் ஓரங்களில் படாமல் பரப்பவும்.  எல்லாவற்றையும் ஊற்றிப் பரப்பி மிச்ச சேமியாவை அதன் மேல் போட்டு லேசாக சீராக அமுக்கவும். இதனைப் பானோடு அப்படியே அடுப்பில் ஒரு நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து அதன் பின் அடுப்பில் ஒரு அப்பளம் சுடும் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். ஒரு புறம் சிவந்ததும் வெண்ணெய் தடவிய இன்னொரு பானில் மாற்றி இதே போல் ஒருநிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து அதன் பின் அப்பள ஸ்டாண்டில் வைத்து சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். அரை கப் தண்ணீரில் அரை கப் ஜீனி போட்டுக் கம்பிப் பாகு காய்ச்சவும். குனாஃபாவினை அடுப்பிலிருந்து இறக்கியதும் அதில் இந்த ஜீராவை சீராக ஊற்றி பொடித்த பிஸ்தாவைத் தூவி அலங்கரித்துத் துண்டுகள் செய்து பரிமாறவும். 

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

லெமன் சேமியா

லெமன் சேமியா



தேவையானவை:- சேமியா - 1 பாக்கெட்பெரிய வெங்காயம் - 1, காரட் -சின்னம் 1, பட்டாணி - ஒரு கைப்பிடிபச்சைமிளகாய் - 1,உப்பு - அரை டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎலுமிச்சைச் சாறு - அரை மூடிதாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகுஉளுந்து, கடலைப்பருப்பு  தலா - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெங்காயம்பச்சைமிளகாய்காரட்டை நீளமாக நறுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகுஉளுந்துகடலைப்பருப்பைத் தாளித்து வெங்காயம்பச்சைமிளகாய்பட்டாணிகேரட்டைப் போடவும்.  நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்உப்புச்  சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவைச் சேர்த்துக் கிளறி தீயை அடக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு இரு நிமிடங்கள் வேகவிடவும்அடுப்பை அணைத்து மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு கலக்கித் திரும்ப மூடி வைக்கவும்தக்காளி சாஸ் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

திங்கள், 25 செப்டம்பர், 2023

சேமியா நெஸ்ட் கட்லெட்

சேமியா நெஸ்ட் கட்லெட்



தேவையானவை:- சேமியா – அரை கப், கேரட் – குச்சியாக நறுக்கியது ஒரு கப், கோஸ் – குச்சியாக நறுக்கியது -  1 கப், வெங்காயம் – 1 குச்சியாக நறுக்கவும். பச்சைமிளகாய் – 2 பொடியாக அரியவும். உருளைக்கிழங்கு – 2 வேகவைத்துத் தோலுரிக்கவும். இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன். மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், அவித்த பச்சைப் பட்டாணி அல்லது அவித்த வேர்க்கடலை – அரை கப், கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன். முட்டை வெள்ளைக்கரு – 2, மிளகு சீரகத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கேரட், கோஸ், ஆகியவற்றை வதக்கவும். இதில் மஞ்சள் பொடி, முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி உருளையை மசித்துப் போடவும். ஆறியவுடன் கொத்துமல்லித்தழையையும் வெண்ணையையும் சேர்த்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து நன்கு சேமியாவில் புரட்டிக் கிண்ணங்களாகச் செய்யவும். இன்னொரு கப்பில் முட்டை வெள்ளைக் கருக்களை எடுத்துக் கால் டீஸ்பூன் உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு அடித்து வைக்கவும். சேமியா கப்களை இதில் நன்கு முக்கி எடுத்துக் காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பறவைக்கூடு தயார். கார்ன்ஃப்ளோரில் உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும். வெந்த பட்டாணி அல்லது வேர்க்கடலையை இதில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து சேமியா நெஸ்டில் வைத்துப் பரிமாறவும்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

ஃப்ரூட் ஃபலூடா

ஃப்ரூட் ஃபலூடா



தேவையானவை:- சேமியா – 1 கைப்பிடி, ரோஸ் மில்க் சிரப் – 2 டேபிள் ஸ்பூன், ஜெல்லி – ஒரு கப், பொடியாக அரிந்த பழக்கலவை – ஒரு கப், சப்ஜா விதை – 1 டேபிள் ஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் – இரண்டு கப் , ஸ்ட்ராபெர்ரி – 4.

செய்முறை:- சேமியாவை வேகவைத்துக் குளிர்ந்த நீரில் வடிகட்டி வைக்கவும். ஜெல்லியை வெந்நீரில் கரைத்து சிறிது சீனி சேர்த்து வேகவைத்து துண்டுகள் செய்து வைக்கவும். சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊறப்போடவும். ஃபலூடா தயாரிக்கும் வரை ரோஸ் மில்க் மிக்ஸையும் பழங்களையும் ஜெல்லியையும் ஐஸ்க்ரீமையும் ஃபிரிட்ஜில் நன்கு குளிரவைக்கவும்.

உயரமான பலூடா க்ளாஸ்களில் முதலில் சேமியாவைப் போடவும். அதன்மேல் சிறிது பழங்களைத் தூவி இரண்டு டீஸ்பூன் ரோஸ் மில்க் சிரப் ஊற்றவும். அதன் மேல் ஜெல்லித்துண்டுகளைப் போடவும். அதன் மேல் ஒருடீஸ்பூன் ஊறிய சப்ஜா விதைகளைப் போடவும். பிறகு கொஞ்சம் பழத்துண்டுகள் தூவி அதன் மேல் ஒரு பெரிய ஸ்கூப் அளவு வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் ஒரு ஸ்ட்ராபெர்ரி வைத்துப் பரிமாறவும்.

புதன், 20 செப்டம்பர், 2023

சேமியா இட்லி

சேமியா இட்லி



தேவையானவை- சேமியா – 2 கப், வெள்ளை ரவா – கால் கப், தயிர் – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், முந்திரி – 15, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – கரகரப்பாகப் பொடித்தது அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, இஞ்சித் துருவல்- அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2 பொடியாக அரிந்தது. கருவேப்பிலை – 1 இணுக்கு, கொத்துமல்லித்தழை, கேரட்துருவல்- தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:- கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி முந்திரியைப் பொரித்து எடுக்கவும். அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பைத் தாளித்து எடுத்துக்கொண்டு அதன் பின் சேமியாவைப் போட்டு வறுக்கவும். அதிலேயே ரவையையும் போட்டு வறுத்து ஒரு பெரிய பேஸினில் போடவும். இதில் தாளித்தது உப்பு, தயிர், துருவிய இஞ்சி, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை,பெருங்காயத்தூள், மிளகு சீரகப் பொடி, கேரட் துருவல் சேர்த்து நன்கு கலக்கி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இட்லிப் பாத்திரத்தில் துணி பரப்பி இவற்றை இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொத்துமல்லி, தேங்காய், தக்காளிச் சட்னிகளுடன் பரிமாறவும்.

திங்கள், 18 செப்டம்பர், 2023

தஹி சேமியா

தஹி சேமியா



தேவையானவை :- சேமியா – 1 கப்புது தயிர் – 2 கப்நெய் – 1 டீஸ்பூன்முந்திரி – 10, கிஸ்மிஸ் – 10, பச்சை திராக்ஷை – 6, கறுப்பு திராக்ஷை – 6, ஆப்பிள் – 1 ஸ்லைஸ் தோலோடு துண்டு செய்யவும்வெள்ளரி – கால் பாகம் துண்டுகள் செய்யவும்.  செம்மாதுளை முத்துகள் – ஒரு டேபிள் ஸ்பூன்உப்பு – அரை டீஸ்பூன்கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.

செய்முறை :- சேமியாவை ஒரு கப் தண்ணீரில் வேகவைத்து உப்பு சேர்க்கவும்தயிரைக் கடைந்து அதில் விதை எடுத்த கறுப்பு திராக்ஷை , பச்சை திராக்ஷையை இரண்டாக கட் செய்து போடவும்ஆப்பிள் வெள்ளரிக்காயை பல் பல்லாக துண்டு செய்து போடவும்மாதுளை முத்துக்களையும் சேர்க்கவும்சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து சேமியாவில் போட்டு கலக்கவும்நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்து இதில் போட்டு கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

வெஜ் சேமியா சூப்

வெஜ் சேமியா சூப்


தேவையானவை:- சேமியா – கால் கப், பொடியாக அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் ) பால் – ஒரு கப், வொயிட் பெப்பர் பொடி – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், ஆல் பர்ப்பஸ் மாவு – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- சேமியாவையும் காய்கறிகளையும் இரண்டு கப் தண்ணீரில் வேகப்போடவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை உருகவைத்து அதில் ஆல்பர்ப்பஸ் மாவு போட்டுப் புரட்டவும். பாலை உடனே ஊற்றிக் கட்டியில்லாமல் கிளறி வேகவைத்து இறக்கவும். இதை வெந்த வெஜ் சேமியாவில் ஊற்றி தக்காளி சாஸ், கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கிச் சூடாகப் பரிமாறவும்.

புதன், 13 செப்டம்பர், 2023

ராகி இனிப்பு சேமியா

ராகி இனிப்பு சேமியா


தேவையானவை:- ராகி சேமியா – 1 பாக்கெட், தேங்காய்த்துருவல்- 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ராகி சேமியாவை மூன்று நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே இதில் துருவிய தேங்காய், தூள் வெல்லம், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ட்ரைகலர் கேப்ஸிகம் செமோலினா

ட்ரைகலர் கேப்ஸிகம் செமோலினா

தேவையானவை :- கோதுமை சேமியா - 1 பாக்கெட்பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கியது., பச்சை மிளகாய் - 1 வகிர்ந்ததுபச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய் – நீளமாக அரிந்தது – ஒரு கப், பூண்டு – 4 பொடியாக அரியவும். வெங்காயத்தாள் – 2 பொடியாக அரியவும். எண்ணெய் + வெண்ணெய் – 2  டேபிள்ஸ்பூன், ஜீனி – அரை டீஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், டொமாடோ சாஸ், க்ரீன் சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை :- கோதுமை சேமியாவை வெது வெதுப்பான நீரில் நனைத்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும்பானில் எண்ணெய் + வெண்ணையைக்  காயவைத்துப் பொடியாக அரிந்த பூண்டு ஜீனி சேர்த்து வதக்கவும். அதன் பின்  வெங்காயத்தாள், பச்சைமிளகாய், வெங்காயம், குடைமிளகாய்களைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.  இதில் சோயா சாஸ், டொமாடோ சாஸ், க்ரீன் சில்லி சாஸ் சேர்த்து வதக்கி சேமியாவைச் சேர்த்து வொயிட் பெப்பர் பொடியைத் தூவி குழையாமல் பிரட்டிக் கிளறி இறக்கவும். மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.

திங்கள், 11 செப்டம்பர், 2023

சாஃப்ரான் செமோலினா

சாஃப்ரான் செமோலினா


தேவையானவை:- சேமியா -1 கப், பால்- 2 கப், கல்கண்டு பொடித்தது – 2 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ -1 சிட்டிகை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் – தலா பத்து. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பாலைக் காய்ச்சி சிறிதளவு பாலில் குங்குமப்பூவை சூடாக இருக்கும்போதே போட்டுக்கரைத்து வைக்கவும். மிச்சப் பாலில் சேமியாவை வேகவிடவும். நன்கு வெந்ததும் பொடித்த கல்கண்டு சேர்த்து பாலில் ஊறிய குங்குமப்பூவைச் சேர்த்து வேகவிடவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை  குச்சியாகச் சீவி கிஸ்மிஸுடன் நெய்யில் பொரித்து சேமியாவின் மேல் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ்

ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ் 

 


1.ஜவ்வரிசி புரத போகா
2.ஐந்தரிசிப் பணியாரம்
3.பிசினரிசிப் புட்டு இனிப்பு
4.பிசினரிசிப் புட்டு உப்பு
5.ஜவ்வரிசி ஊத்தப்பம்
6.தவலை வடை
7.சாபுதானா கிச்சடி
8.ஜவ்வரிசி பொங்கல்
9.ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்
10.ஜவ்வரிசி ஃப்ரூட் கேக்

 


1.சாஃப்ரான் செமோலினா
2.வெஜ் சேமியா சூப்
3.ராகி இனிப்பு சேமியா
4.தஹி சேமியா
5.லெமன் சேமியா
6.ஃப்ரூட் ஃபலூடா
7.சேமியா இட்லி
8.சேமியா நெஸ்ட் கட்லெட்

இந்த ரெசிப்பீஸ் 9.2.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

 

வியாழன், 7 செப்டம்பர், 2023

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-



 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு (மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை இதில் எது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திச் செய்யலாம்.), அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காகதேங்காய்ப் பால் – 1 கப்சின்ன வெங்காயம் – 10உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ( மேற்கூறியுள்ள கீரைகளில் ஒன்றை ) ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் தாளித்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும். அதன் பின் வெங்காயத்தை வதக்கி கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும். இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். வயிற்றுப் புண், அல்சர் தீர கீரை மண்டியை அடிக்கடி செய்து அருந்தலாம். 


 

திங்கள், 4 செப்டம்பர், 2023

பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் ரசம்


 

தேவையானவை:- பைனாப்பிள் – 3 ஸ்லைஸ், துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், புளி – 2 சுளை, உப்பு – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 2, மிளகு – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், பூண்டுப்பல் – 2, கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்

 

செய்முறை:- பைனாப்பிளையும் பருப்பையும் குக்கரில் தனித்தனியாக வேகவைக்கவும். பருப்பை நன்கு மசித்து பைனாப்பிளை துண்டாக மசித்து சேர்க்கவும். அதில் புளியையும் உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். ( பைனாப்பிள் புளிப்பாக இருந்தால் புளி வேண்டாம் ). எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயத்தூள் தாளித்து மிளகாயை துண்டாக உடைத்துப் போடவும் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு பூண்டையும் தட்டிப் போடவும். மஞ்சள் தூள் போட்டு கரைத்த பைனாப்பிள் பருப்புக் கலவையை ஊற்றவும். நுரைத்து வரும்போது இறக்கவும். இது நாவறட்சியைப் போக்கும்.

 

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

ரோஜாப்பூ பன்னீர் ரசம்

ரோஜாப்பூ பன்னீர் ரசம்


 

தேவையானவை:- ரோஜாப்பூ – 2, பன்னீர் –  1 டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், மிளகாய் – 1, தனியா – ½ டீஸ்பூன், மிளகு  - 10 , சீரகம் – அரை டீஸ்பூன், புளி – 1 நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,எண்ணெய்/நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்

 

செய்முறை:- ரோஜா இதழ்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு மிளகாய், தனியா மிளகு சீரகத்தை லேசாக வெதுப்பி பொடித்து வைக்கவும். உப்புப் புளியைக் கரைத்து 2 கப் தண்ணீர் எடுக்கவும். இதில் மஞ்சள் தூள், பொடித்த ரசப் பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும். நுரைத்து வரும்போது நெய் அல்லது எண்ணெயில் கடுகு சீரகம் தாளித்து இறக்கவும். சிறிது சூடு அடங்கியதும் ரோஜாப்பூவிதழ்களைப் போட்டு பன்னீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்துப் பின் உபயோகிக்கவும்.