வெள்ளி, 13 நவம்பர், 2026

சின்ன வெங்காய கெட்டிச் சட்னி

சின்ன வெங்காய கெட்டிச் சட்னி


தேவையானவை:- சின்ன வெங்காயம் - 200 கி, தக்காளி – 2, சிவப்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன் ( 10 மிலி), கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்

செய்முறை:-சின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவி நைஸாக நறுக்கவும். தக்காளியைக் கழுவித் துண்டுகள் செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். பின் சிவப்பு மிளகாய்ப் பொடி, உப்பு போட்டுக் கிளறவும். பானின் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கி சூடாக இட்லி/தோசை/சப்பாத்தி/தயிர்சாதத்தோடு பரிமாறவும்.

 

வெள்ளி, 6 நவம்பர், 2026

ரோஜாப்பூ சட்னி

ரோஜாப்பூ சட்னி


தேவையானவை :-மிளகாய் – 30, சின்ன வெங்காயம் – 10, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- வரமிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கால் கப் தண்ணீரில் பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து வட்ட வட்டமாக நைசாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும். நைசாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு ஒரு நிமிடத்தில் இறக்கிவிடவும். இதில் சின்ன வெங்காயம் ரோஜா இதழ்கள் போல சிவப்பாக இருப்பது அழகு & ருசி.