எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2012

DHALL BOLI. பருப்பு போளி:-

DHALL BOLI:-
NEEDED:-
MAIDA - 2 CUPS
CHANNA DHALL - 1 CUP
SUGAR - 1/2 CUP
GHEE - 2 TBLSPN
TIL OIL - 100 GMS
SALT - 1 PINCH
TURMERIC POWDER - 1 PINCH
BAKING SODA - 1/4 TSP ( OPTIONAL)
WHITE FLOUR - 1 TBLSPN FOR DUSTING.

METHOD:-
SEIVE MAIDA WELL AND ADD THE SALT,TURMERIC POWDER AND BAKING SODA . MAKE INTO A SOFT DOUGH WITH NEEDED AMOUNT OF WATER. DIVIDE THEM INTO 16 PARTS AND ROLL THEM AS A BALL. ARRANGE THEM IN A BOWL AND POUR THE OIL. KEEP ASIDE AND MARINATE FOR ONE HOUR.

WASH THE CHANNA DHALL AND PRESSURE COOK FOR 3 WHISTLES. TAKE IT OUT AND ADD THE SUGAR AND KEEP IT IN STOVE TILL THE SUGAR MELTS. GRIND IT FINELY IN A GRINDER. DIVIDE THEM INTO 16 PARTS AND ROLL THEM INTO BALLS.

SHAPE THE MAIDA BALLS INTO CUPS AND KEEP THE DHALL BALLS INSIDE EACH OF IT AND COVER IT.  SPREAD THEM AS CHAPPATIS BY DUSTING WITH WHITE FLOUR. HEAT TAWA AND ROAST BOTH SIDES OF BOLI BY SPRAYING GHEE. SERVE HOT.

பருப்பு போளி:-
தேவையானவை:-
மைதா - 2 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
ஜீனி - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 கி
உப்பு - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன் ( விரும்பினால்)
மைதா - 1 டேபிள் ஸ்பூன் தூவ

செய்முறை:-
மைதாவை சலித்து உப்பு, மஞ்சள் பொடி, பேக்கிங் பவுடரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மென்மையான மாவாக பிசையவும். 16 சம பாகங்களாகப் பிரித்து உருட்டவும். ஒரு பவுலில் அடுக்கி எண்ணெயை ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

கடலைப் பருப்பை கழுவி பிரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும். வெளியே எடுத்து அதனுடன் ஜீனியை சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஜீனி கரைந்ததும் எடுத்து கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும். இந்த பூரணத்தை எடுத்து 16 சமபாகங்களாகப் பிரித்து உருட்டி வைக்கவும்.

மைதா உருண்டைகளைக் கிண்ணங்களாகச் செய்து பூரணத்தை வைத்து மூடவும். மைதா மாவில் தொட்டு சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லைக் காயவைத்து நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சூடாக போளிகளைப் பரிமாறவும்.

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...