எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

சித்திரையில் சில்லென்று சில ஜூஸ்கள் . JUICES & MILK SHAKES

இந்த நிவேதனங்கள்  மே 1 - 15 , 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
1. க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்.

தேவையானவை :-
திராக்ஷைச் சாறு  - 2 டீஸ்பூன் = ஒரு கைப்பிடி பழத்தை அரைத்து வடிகட்டவும்
ஆரஞ்சுச் சாறு  - 1/3 கப் ( இரண்டு பழங்களைப் பிழியவும்.

பால் பவுடர் - 4 டீஸ்பூன்
பொடித்த ஜீனி - 4 டீஸ்பூன்

செய்முறை:-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  அரை  கப் தண்ணீர் அல்லது கால் கப் தண்ணீரும் 4 ஐஸ்துண்டங்களும் போட்டு நன்கு அடித்து கண்ணாடி டம்ளர்களில்  ஊற்றிக் கொடுக்கவும்.

2. மாங்கோ மில்க் ஷேக் :-

தேவையானவை :-
மாம்பழச் சாறு  - 1 கப் ( இரண்டு மாம்பழங்களில் இருந்து சாறு எடுத்து வடிகட்டவும்.)
பால் - 1 கப் ( கெட்டியாகக் காய்ச்சி ஆறவைத்தது )
ஜீனி - 4 டீஸ்பூன்.
அலங்கரிக்க சில துண்டு மாம்பழங்கள்.+ மாம்பழ ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்.

செய்முறை :-
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஐஸ்துண்டங்கள் போட்டு அடித்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மாம்பழத் துண்டுகள் + ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறவும்.

3. ஆப்பிள் மில்க் ஷேக் :-

தேவையானவை :-
ஆப்பிள் துண்டுகள் - 2 கப் ( தோல் விதை எடுத்தது ).
பால் - 2 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
வனிலா எசென்ஸ் - சில துளிகள்

 செய்முறை :-
ஆப்பிள் , பால் , ஜீனி மூன்றையும் ஐஸ்துண்டங்களோடு சேர்த்து அடித்து எசன்ஸ் கலந்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்கவும்.

4. சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை :-
சப்போட்டா - 4 பழம் ( விதை தோல் எடுத்தது )
பால் - 2 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம்  - 1 டீஸ்பூன்

செய்முறை :-
மூன்றையும் மிக்ஸியில் போட்டு ஐஸ்துண்டங்களோடு அடித்து ஃப்ரெஷ் க்ரீமும் போட்டு அடித்து குவளைகளில் ஊற்றி  கொடுக்கவும்.

5. பனானா மில்க் ஷேக் :-

தேவையானவை :-
வாழைப்பழம் - 2
பால் - 4 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்
வனிலா எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை :-
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஐஸ் துண்டங்களும் போட்டு அடித்துக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்கவும்.

6. பைனாப்பிள் மில்க் ஷேக்:-

தேவையானவை :-
பைனாப்பிள் - 2 கப் ( தோல் முள் நீக்கியது )
பால் - 1/2 கப்
தயிர் - 1 டீஸ்பூன்
ஜீனி - 4 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன்.
யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
அலங்கரிக்க - பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் , டூட்டி ஃப்ரூட்டி துண்டுகள். - 2 டீஸ்பூன்.

செய்முறை :-
அனைத்தையு மிக்ஸியில் 4 ஐஸ்துண்டங்களோடு போட்டு அடித்து பைனாப்பிள், டூட்டி ஃப்ரூட்டி துண்டுகள் போட்டுக் கொடுக்கவும்.

7. ரோஸ் மில்க் :-

தேவையானவை :-
பால் - 1/2 லிட்டர்
ஜீனி - 6 ஸ்பூன்
ரோஸ் கலர் - 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :-
காய்ச்சி ஆறிய பாலில் ஜீனி ரோஸ் கலர், ரோஸ் எசன்ஸ், ஃப்ரெஷ் க்ரீம் போட்டு 4 ஐஸ்துண்டங்கள் போட்டு மிக்ஸியில் நன்கு அடித்துக்கொடுக்கவும்.


1.. வெள்ளரிக்காய் , வாழைத்தண்டு ஜூஸ் :-

தேவையானவை :-
வெள்ளரிக்காய் - 1 ( தோலுரித்து துண்டுகளாக்கவும். )
வாழைத்தண்டு - 1 துண்டு.
உப்பு - 1 /3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 சிட்டிகை.
கொத்துமல்லி - சில இலைகள்.

செய்முறை :-
வெள்ளரிக்காய் வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து வடிகட்டி உப்பு. மிளகுத்தூள், கொத்துமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.

2. காரட் ஆரஞ்ச் ஜூஸ்.

தேவையானவை :-
காரட் - 1
ஆரஞ்ச் - 2
ஜீனி - 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4
தண்ணீர் - 2 கப்

செய்முறை:-



காரட்டைத் தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும். ஆரஞ்சைத் தோலுரித்து விதை நீக்கவும். காரட், ஆரஞ்ச், ஜீனி, ஐஸ்துண்டுகள், தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து ஜூசர் மிக்சரில் போட்டு ஜூசை வடிகட்டவும். மிச்சமிருக்கும் சக்கையில் இன்னும் சிறிது நீர் ஊற்றி அரைத்து மிச்ச ஜூசையும் வடிகட்டி கண்ணாடி டம்ளர் அல்லது சில்வர் டம்ளர்களில் பரிமாறவும்.

 3. கருவேப்பிலை கொத்து மல்லி புதினா  எலுமிச்சை ஜூஸ் :-

தேவையானவை :-
கொழுந்து கருவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்துமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா இலை - 1 கைப்பிடி
எலுமிச்சை ஜூஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
காலா நமக் ( ராக் சால்ட் ) - இந்துப்பு - 1 சிட்டிகை
சாட் மசாலா - 1 சிட்டிகை.

செய்முறை :-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்து அரைத்து  வடிகட்டி 4 கப் தண்ணீர் சேர்த்து எலுமிச்சை ஜூஸ், இந்துப்பு, சாட் மசாலா தூவிக் கலந்து கொடுக்கவும்.

4. நெல்லிக்காய் மோர்.

தேவையானவை :-
முழு நெல்லிக்காய் -2
தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - பாதி
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :-
நெல்லிக்காயின் கொட்டை நீக்கி துண்டுகளாக்கி சிறிது தயிர் மிளகாய் உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். மீதி தயிரைக் கடைந்து ஊற்றி 4 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கவும்.


5. நாவல்பழம் பீட்ரூட் ஜூஸ்.

தேவையானவை :-
நாவல் பழம் - 10
பீட்ரூட் - சிறியது - 1
வெல்லம் - ஒரு அச்சு.
ஏலப்பொடி - 1 சிட்டிகை
சுக்குப் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
நாவல்பழத்தின் சதைப் பகுதியை எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டைத் தோல் சீவி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நாவல் பழ சதையையும் அரைத்து வடிகட்டவும். வெல்லத்தைத் தூள் செய்து கலந்து ஏலப்பொடி, சுக்குப் பொடி தூவிக் கொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...