எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஸ்கந்தர் சஷ்டி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். SKANDAR SASHTI RECIPES.

ஸ்கந்தர்சஷ்டி ஸ்பெஷல் :-

1.மகிழம்பூ முறுக்கு.
2.சோள மாவு கேரமல் அல்வா,
3.கார் அரிசி காய்கறிப் புட்டு,
4.மேத்தி தேப்லா,
5.பாலக் கோஃப்தா,
6.முருங்கைக்கீரை ராகி அடை,
7.கருணை உருளை சாசேஜ்,
8.சுக்கு மல்லிக் காப்பி,
9.பப்பாளி பைனாப்பிள் ஸ்மூத்தி,
10.ப்ரெட் ஜாமூன் பாயாசம்.



1.மகிழம்பூ முறுக்கு. :-

தேவையானவை :-

பச்சரிசி – 4 கப், உளுந்தம்பருப்பு – 1 கப், வெண்ணெய் – 50 கிராம், எள் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – சிறிது, உப்பு – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை :-
பச்சரிசியைக் களைந்து காயவைக்கவும். உளுந்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வெதுப்பி வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து சலித்து பின் ஒரு பேசினில் போடவும். இதில் உப்பு வெண்ணெய், சீரகம், எள், பெருங்காயப்பொடி, பொடியாக அரிந்த கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். கடைசியில் சிறிது காய்ந்த எண்ணெய் ஊற்றிப் பிசைந்து மகிழம்பூ முறுக்கு அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பொரித்து எடுத்து நிவேதிக்கவும்.

2.சோள மாவு கேரமல் அல்வா:-

தேவையானவை :-

சோளமாவு – 1 கப், சீனி – 4 கப், நெய் – அரை கப், தண்ணீர் – இரண்டரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, சீனி – 4 டீஸ்பூன் ( கேரமல் செய்ய), முந்திரி – அரை கப்.

செய்முறை :-

சோளமாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும். சீனியை ஒன்றரை கப் தண்ணீரில் போட்டு பாகு காய்ச்சி வடிகட்டி வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். அந்த நெய்யை முந்திரி இல்லாமல் சோளமாவில் ஊற்றிக் கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். லேசாக ஒட்டாமல் வெந்து கண்ணாடிப் பதம் வந்ததும் அதில் சீனிப்பாகை ஊற்றவும். கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து நன்கு கிளறவும். இன்னொரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு வறுக்கவும். அது ப்ரவுன் கலரில் வந்ததும் சிறிது தண்ணீர் சேர்த்து இறக்கி வைக்கவும். கால் மணி நேரம் நன்கு கிளறி வெந்து சுருண்டு வரும்போது கேரமலை ஊற்றவும். வறுத்த முந்திரியை நெய்யோடு சேர்த்து நன்கு ஒட்டாமல் நெய் பிரிந்து வந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.

3.கார் அரிசி காய்கறிப் புட்டு:-

தேவையானவை :-

வெள்ளைக் கார் அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, காய்கறிக் கலவை பொடியாக அரிந்தது – 1 கப் ( பீன்ஸ், கேரட்,), பச்சைப் பட்டாணி – 1 கைபிடி, உப்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும், பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, தேங்காய்த் துருவல் – 1 கைப்பிடி, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

செய்முறை:-

வெள்ளைக் கார் அரிசியையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். தேவையான தண்ணீர் ஊற்றிப் பிசைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். பாதி வேகும்போது காய்கறிக் கலவையையும் அதன் மேல் பரப்பி வேகவைக்கவும். இறக்கும் சமயம் தேங்காய்த் துருவலையும் தூவி இரு நிமிடம் வேகவைத்து இறக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பொடியாக அரிந்த பெரியவெங்காயம் போட்டு நன்கு தண்ணீர் போல வதங்கியதும் உப்பு சேர்த்து உதிர்த்த புட்டையும் சேர்த்துக் கலக்கி நிவேதிக்கவும்.

4.மேத்தி தேப்லா:-

தேவையானவை :-

ஆட்டா – 2 கப், கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், வெந்தயக் கீரை – இரண்டு கைப்பிடி, அல்லது ( காய்ந்த வெந்தயக் கீரை ) கசூரி மேத்தி – 2 டீஸ்பூன், ஓமம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 கப்

செய்முறை :-

ஆட்டாவில் கடலைமாவு, வெந்தயக் கீரை, ஓமம் சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து அரை கப் எண்ணெய் ஊற்றி நன்கு பிசறவும். அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவுபோல் நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊறவிடவும். ஊறியதும் பெரிய உருண்டைகளாக எடுத்து நன்கு கனமான சப்பாத்திகளாகத் தேய்த்து சுற்றிலும் நன்கு எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும் . இது கசூரி மேத்தி சேர்த்துச் செய்தால் இரண்டு நாட்களுக்குக் கெட்டுப் போகாது.  


5.பாலக் கோஃப்தா :-

தேவையானவை:-
பாலக் கீரை - 1 கட்டு,  உருளைக்கிழங்கு – 1,  ப்ரெட் - 2 ஸ்லைஸ்,  பெரியவெங்காயம் – 1,  துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்,  மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் – 1,  கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்,  உப்பு -  1/2 டீஸ்பூன்ரஸ்க் தூள் - 1 கப்,  பொட்டுக் கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் ( தேவைப்பட்டால்),  நெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
பாலக்கை வேகவைத்து அரைக்கவும். உருளையை வேக வைத்து மசிக்கவும். இது இரண்டையும் கலந்து அதில் ஒரு ( ஓரங்கள் நீக்கிய) ஒரு ப்ரெட்டை சேர்க்கவும். உப்பு, மிளகாய்ப் பொடி, பச்சை மிளகாய், கரம் மசாலா பொடி, பெரிய வெங்காயம் பொடியாகஅரிந்து, துருவிய சீஸ் ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து பிசையவும். திக் ஆகவில்லைஎன்றால்  பொட்டுக்கடலையைப் பொடி செய்து சேர்த்து கோப்தாக்களாத் தட்டி ரஸ்க் தூளில் பிரட்டி தோசைக் கல், நான் ஸ்டிக்
தவாவில் லேசாக நெய், எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்

6.கருணை உருளை சாசேஜ்:-

தேவையானவை :-

கருணைக்கிழங்கு – 4, உருளைக்கிழங்கு – 2, ப்ரெட் – 4 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். பச்சைமிளகாய் – 2 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி பொடியாக அரிந்தது. மிளகுப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – சிலதுளிகள், ப்ரெட் க்ரம்ஸ் – ரெண்டு டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

கருணைக்கிழங்கையும் உருளைக்கிழங்கையும் வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசிக்கவும். அதில் ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி சேர்க்கவும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, மிளகுப் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாகப் பிசையவும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாசேஜ்கள் போல நீளமாக உருட்டி ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி வைக்கவும். நான் ஸ்டிக் பானில் லேசாக எண்ணெய் விட்டு சுற்றிலும் திருப்பி விட்டு நன்கு மொறுமொறுப்பானதும் எடுக்கவும். இதில் சோயா சங்க்ஸ், பன்னீர் விரும்பினால் சேர்க்கலாம்.



7.பப்பாளி பைனாப்பிள் ஸ்மூத்தி,

தேவையானவை :-

பப்பாளி – 1 கப், பைனாப்பிள் – 1 கப் ( அலங்கரிக்க தனியாக பைனாப்பிள் + பப்பாளித் துண்டுகள் – ஒரு டேபிள் ஸ்பூன், ). பைனாப்பிள் ஜூஸ் – 1 கப், ஐஸ் துண்டுகள் – 1 கப், வனிலா எசன்ஸ் – சில துளிகள்.

செய்முறை :-

தோல் நீக்கிய பைனாப்பிள் பப்பாளித் துண்டுகளை ஐஸ் கட்டிகளோடு போட்டு ப்ளெண்டரில் நன்கு விப் செய்யவும். பைனாப்பிள் ஜூசும் வனிலா எசன்ஸூம் சேர்த்து திரும்ப விப் செய்து க்ளாஸ்களில் ஊற்றி பொடியாக அரிந்த பப்பாளி பைனாப்பிள் துண்டுகள் தூவி சர்வ் செய்யவும்.

8.ப்ரெட் ஜாமூன் பாயாசம்.

தேவையானவை :-

ப்ரெட் – 2 ஸ்லைஸ், பால் பவுடர் – 50 கி, பால் – 4 கப், சீனி – அரை கப், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், நெய் – பொரிக்கத் தேவையான அளவு.  

செய்முறை:-

ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து பால் தெளித்து மென்மையாகப் பிசந்து குன்றி மணி அளவு ஜாமூன்களாக உருட்டி நெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து சிறிது குறுகியதும் இறக்கி ஜாமூன்களை ஊறவிடவும். ரோஸ் எசன்ஸ் சேர்த்து குளிர்வித்து பரிமாறவும்.

குறிப்பு :- ஜாமூன்களை 6 கப்களில் போட்டு ரோஸ் எசன்ஸ் சீனி சேர்த்த சூடான பாலை ஊற்றவும். ஒரே பாத்திரத்தில் போட்டு ஊறவைத்தால் தனித்தனியா எடுக்கும்போது கரைந்துவிடும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் & கோலங்கள் நவம்பர் 20, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 



ிஸ்கி :- நத்ிரி ஸ்பல் ரெசிபி & கோலங்கைப் பாரட்டியஞ்சிபுரம் சூர்யஸ்ரீுக்கு நன்றி. :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...