எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 18 ஜூலை, 2018

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.

தேவையானவை :-

சர்க்கரை வள்ளிக்கிழங்கு-  4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன்,  தாளிக்க - எண்ணெய் - 2 டீஸ்பூன். கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரிக்கவும். புட்டுபோல உதிர்த்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் கருவேப்பிலையைத் தாளிக்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கையும் உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கலக்கி கிளறி இறக்கி வெண்டைக்காய் புளிக்குழம்பு  வைத்து சூடான சாதத்தோடு பரிமாறவும். :)  உங்களுக்கே இல்லாத அளவு கிண்ணம் காலியாகிவிடும். :)
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...