எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 மே, 2022

காலிதால் மாக்னி

காலிதால் மாக்னி



தேவையானவை:- கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப்ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்), பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்., இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்தக்காளி - 2 பொடியாக அரியவும்., பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைசிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-ராஜ்மாவையும் கறுப்பு உளுந்தம் பருப்பையும் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும்ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம்சீரகத்தைத் தாளிக்கவும்சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும்அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளிஉப்புசிவப்பு மிளகாய்த்தூள்மல்லித்தூள்போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் . 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும்நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கிப் பரிமாறவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...