வெள்ளைரவைப் பாயாசம்
தேவையானவை :- வெள்ளை ரவை – கால் கப், பால் – 2 கப், தண்ணீர் – 1 கப், ஜீனி – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை., ஏலக்காய் – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், கிஸ்மிஸ் – 10, பேரீச்சை – 2.
செய்முறை:- வெள்ளை ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஒரு டம்ளர் கொதிக்கும் நீரைச்சேர்க்கவும். வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும். நன்கு கிளறி கொதிக்கும் பாலையும் ஜீனியையும் சேர்க்கவும். ஜீனி கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும். பேரீச்சையை விதை நீக்கிப் பொடியாக அரியவும். பேரீச்சையையும் கிஸ்மிஸையும் நெய்யில் பொறித்துப் போட்டுப் பரிமாறவும்.