எலுமிச்சைப் பானகம்
தேவையானவை:- எலுமிச்சம்பழம் – 1, வெல்லம் – இரண்டு அச்சு. சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்.
செய்முறை:- எலுமிச்சம்பழத்தைச் சாறு எடுத்து வைக்கவும். வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கரைத்துக் கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிடவும். இதில் சுக்குத்தூள், ஏலத்தூள் சேர்த்து ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கிப் பருகக் கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக