கோதுமை மாவிளக்கு
தேவையானவை:- சம்பா கோதுமை – 1 கப், நெய் – கால் கப், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- சம்பா கோதுமையைப் பொரியரிசி போலப் பொன்னிறமாக வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் முக்கால் பங்கு நெய்யை ஊற்றிச் சர்க்கரை சேர்த்துத் தேவையான தண்ணீர் தெளித்து மாவாகப் பிசைந்து தீபங்கள் செய்யவும். தீபத்தில் மிச்ச நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரிப் போட்டுக் மஞ்சள், குங்குமம் வைத்து விளக்கேற்றவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக