காய்கறிக் கதம்பச் சாதம்
தேவையானவை :- அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, காரட், பீட்ரூட், பீன்ஸ் , பட்டாணி, பட்டர் பீன்ஸ் ). வெங்காயம் – 1 பொடியாக அரியவும், தக்காளி – 1 பொடியாக அரியவும். அரைக்க :- பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். மல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை :- அரிசியைக் களைந்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் தக்காளியை வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி அதன் பின் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும். அரிசியையும் போட்டு உப்பைச் சேர்த்துத் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியபின் திறந்து மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக