எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 ஜூலை, 2025

சோளக்கஞ்சி

சோளக்கஞ்சி



தேவையானவை:- சோளம் – 1 கப், தண்ணீர் – 6  கப், உப்பு – ஒரு சிட்டிகை., பால் – 2 கப், ஜீனி – 1 டேபிள் ஸ்பூன், நெய்  - 2 டீஸ்பூன்.

செய்முறை:- சோளத்தில் தண்ணீர் போட்டுப் பிசிறி சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் வைப் செய்யவும். சுளகில்/ தட்டில் போட்டு லேசாக உமிபோகப் புடைத்துத் திரும்பவும் தண்ணீர் தெளித்துப் பிசறி ஊறியதும் மிக்ஸியில் இரண்டாம் முறை லேசாக விப்பரில் போடவும். திரும்பவும் புடைத்து உமி நீக்கிக் கழுவி 6 கப் தண்ணீரில் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகப்போடவும். வெந்ததும் இறக்கி மசித்து உப்பு சேர்க்கவும். சாப்பிடும் சமயம் பால், ஜீனி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.

திங்கள், 14 ஜூலை, 2025

பச்சரிசிப் புட்டு

பச்சரிசிப் புட்டு



தேவையானவை:- பச்சரிசி  மாவு - 1 கப், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், சீனி - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:-  பச்சரிசி மாவை லேசாக வறுத்து உப்புத்தூவி தண்ணீர் தெளித்துப் பிசறவும். அது பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்கும்படியும் உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுவே பக்குவம். இதை இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்து சூட்டோடு சீனி தேங்காய், நெய் கலந்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.

திங்கள், 7 ஜூலை, 2025

சர்க்கரைச் சோறு

சர்க்கரைச் சோறு



தேவையானவை:- பச்சரிசி – 2 கப், வெல்லம்-கால் கிலோ, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, கடலைப்பருப்பு – 1 கைப்பிடி, தேங்காய் – 1 துண்டு பல்லுப் பல்லாக நறுக்கவும். பால் – அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து நீரை வடித்து வைக்கவும். குக்கரில் அரிசியுடன் பாசிப்பருப்பு கடலைப்பருப்புப் போட்டு அரை கப் பாலுடன் நாலு கப் நீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். வெல்லத்தைப் பாகு வைத்து வடிகட்டி வைக்கவும். குக்கரைத் திறந்து சாதத்தை மசித்து வெல்லப்பாகை ஊற்றவும். லேசாக சூடுபடுத்தி பொங்கல் ஒன்று சேர்ந்ததும் இறக்கி வைத்து ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காயையும் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.

புதன், 2 ஜூலை, 2025

நுங்கு சர்பத்

நுங்கு சர்பத்


தேவையானவை:- நுங்கு – 4, வெட்டிவேர் சர்பத் – 4 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை – 1, ஐஸ் கட்டிகள் – கொஞ்சம், தண்ணீர் – 4 டம்ளர்.

செய்முறை:- நுங்கைத் தோலுரித்து மிக்ஸியில் வெட்டிப் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும். அல்லது பொடியாகத் துண்டுகள் செய்யவும். நான்கு கண்ணாடி டம்ளர்களில் இதைப் பகிர்ந்து போட்டு வெட்டிவேர் சர்பத் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றவும். எலுமிச்சையை வெட்டி விதையை எடுத்துவிட்டுப் பிழியவும். ஐஸ் கட்டிகள் போட்டு நீரூற்றி ஸ்பூனால் கலக்கி அருந்தக் கொடுக்கவும்.

ஞாயிறு, 29 ஜூன், 2025

பருப்புப் பொங்கல்

பருப்புப் பொங்கல்



தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1 கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு, சீரகம், மிளகு  தலா 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 20, இஞ்சி – 2 இஞ்ச் துண்டு, பச்சைமிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சீரகம் போட்டு  நான்கு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உப்புப் போட்டு மசிக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் உளுந்து, மிளகு சீரகத்தைத் தாளித்து முந்திரிப் பருப்பையும், கருவேப்பிலையையும் போட்டு பெருங்காயத்தூள் தூவிப் பொரிந்ததும் பருப்புப் பொங்கலில் கொட்டிக் கிளறிவிட்டு நெய்யைக் காய்ச்சி மேலே ஊற்றி நிவேதிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...