திங்கள், 28 ஜூன், 2010

ONION GARLIC KUZAMBU...வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு..

INGREDIENTS:-
SMALL ONION..:- 50 GMS
GARLIC :- 50 GMS.
TOMATO :- 1 LARGE
SAMBAR POWDER :- 3 TBL SPNS
TURMERIC PWDR :- 1/4 TSP
TAMARAIND..:- A LEMON SIZE BALL
SALT :- 2 TSP.
OIL FOR FRYING.
MUSTARD.:- 1 TSP
URAD DAL:- 1TSP
ASAFOETIDA :- 1 PINCH
JEERA :- 1/2 TSP
FENUGREEK :- 1/2 TSP
SOMPH :- 1/2 TSP
CURRY LEAVES...1:- 1 ARK
WATER :- 3 CUPS
PREPARATION:-
IN A FRYING PAN POUR OIL AND ADD MUSTARD ..WHEN IR SPLUTTERS ADD ASAFOETIDA., URAD DAL., JEERA., SOMPH N FENUGREEK..
WHEN THEY BECOME GOLDEN BROWN ADD CLEANED AND HALVED ONION ., GARLIC., TOMATOES .AND CURRY LEAVES..SAUTE FOR SOMETIME TILL OIL SEPERATES.
ADD SAMBAR PWDR., TURMERIC PWDR .
MAKE A TAMARIND PUREE WITH WATER AND ADD IT ALONG WITH SALT .
BRING TO BOIL N SIMMER FOR 10 MIN TILL GARLIC TENDER..
HAVE UR KUZAMBU WITH RICE N APPALAM.
=========================================
வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு:
************************************************
தேவையானவை.:-
சின்ன வெங்காயம்..:- 50 கி
வெள்ளைப்பூண்டு:- 50 கி
தக்காளி..:- 1 பெரியது
சாம்பார் பொடி :- 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி :- 1/4 டீ ஸ்பூன்
புளி :- எலுமிச்சை அளவு..
உப்பு :- 2 டீஸ்பூன்
எண்ணெய்:- தாளிக்கத்தேவையான அளவு
1 டேபிள்ஸ்பூன் இருக்கலாம்.
கடுகு :- 1 டீஸ்பூன்
உளுந்து :- 1 டீஸ்பூன்
பெருங்காயம்:- ஒரு துண்டு
சீரகம் :-1/2 டீஸ்பூன்
வெந்தயம்:- 1/2 டீஸ்பூன்
சோம்பு:- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை .:- 1 இணுக்கு
தண்ணீர் :- 3 கப்
செய்முறை:-
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும்., பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும்., உளுந்து., சீரகம்., சோம்பு.,வெந்தயம் போட்டுப் பொன்னிறமானதும்., சுத்தம் செய்து இரண்டாக நறுக்கப்பட்ட வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
சாம்பார்பொடி., மஞ்சள் பொடி போட்டு உப்பும் புளியும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்கு கொதித்து வந்தவுடன்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்..10 நிமிடம் கழித்து பூண்டு வெந்திருக்கிறதா எனப் பார்த்து இறக்கவும்.
இந்தக் குழம்பும் அப்பளமும் சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது

3 கருத்துகள்:

  1. வெங்காய வெள்ளைப்பூண்டு குழம்பு பார்க்கும்போதே சாப்பிடத்தூண்டுகிறது! புகைப்படமுமும் அழகு!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு