வியாழன், 16 செப்டம்பர், 2010

BROAD BEANS PORIYAL.. அவரைக்காய் பொரியல்..


BROAD BEANS PORIYAL..:-
NEEDED :-
BROAD BEANS - 200 GMS.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
RED CHILLI HALVED - 1
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/3 TSP
OIL - 2 TSP.
PARA BOILED DHAL OR CRATED COCONUT - 1 TBL SPN ( OPTIONAL.)

METHOD :-
WASH AND CHOP BROAD BEANS.
HEAT OIL IN A KADAI ADD MUSTARD.
WHEN IT SPLUTTERS ADD URAD DHAL .
WHEN IT BROWNS ADD RED CHILLI AND CURRY LEAVES.
THEN ADD BROAD BEANS .
ADD SALT N SAUTE WELL.
SPRAY SOME WATER .,COVER IT N COOK WELL FOR 5 MIN IN SIM.
IF DESIRES ADD PARABOILED DHALL OR CRATED COCONUT AND OFF THE GAS .
ITS A SIDE DISH FOR SAMBAR SATHAM AND VATHAK KUZAMBU SATHAM OR MILAKUK KUZAMBU SATHAM OR THAKKAAlIK KUZAMBU SATHAM.

அவரைக்காய் பொரியல் :-
தேவையானவை :-
அவரைக்காய் - 200 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய் - 1
கருவேப்பிலை - 1 ஆர்க்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பதமாக வேகவைக்கப் பட்ட பருப்பு அல்லது துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்).

செய்முறை :-
அவரைக்காய்களை கழுவி பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போடவும். உளுந்து சிவந்ததும் மிளகாய் ., கருவேப்பிலை சேர்க்கவும். பின் அவரைக்காய்களை சேர்த்து வதக்கி., உப்பு போட்டுத் தண்ணீர் ஊற்றவும்.
மூடி போட்டு சிம்மில் 5 நிமிடங்கள் வேக விடவும். இறக்கும் முன் விரும்பினால் பதமாக வேகவைத்த பருப்பு அல்லது துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கவும்.
இது சாம்பார் சாதம்., வத்தக் குழம்பு சாதம்., மிளகுக் குழம்பு சாதம் ., தக்காளிக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற பொரியல்.

5 கருத்துகள்:

  1. சூப்பர்ர் பொரியல்...பட்ட பருப்புன்னா என்ன பருப்புக்கா??

    பதிலளிநீக்கு
  2. இல்லைடா மேனகா .. பதமாக வேக வைக்கப்பட்ட பருப்புடா..:)) அது கடலைப் பருப்பு அல்லது பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பாக இருக்கலாம்.. ஆனா குழையக்கூடாது..

    பதிலளிநீக்கு
  3. தேனக்க்கா உங்கள் சமையல் இப்ப தான் பார்க்கிறேன். வந்ததும் வரவேற்பு பசுமையாக இருக்கும்,இப்ப ஊருக்கு போயிருந்த போது அம்மா செய்து கொடுத்த் அவரைக்காய் பொரியலும் கிளிக் செய்து வந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

    பதிலளிநீக்கு