திங்கள், 6 செப்டம்பர், 2010

VADAI ... வடை

VADAI:- 

NEEDED :- URAD DHAL - 1 CUP GREEN CHILLY - 2 BIG ONION - 1 CHOPPED HAND FUL OF CHOPPED CURRY N CORRINDER LEAVES SALT - 1 TSP OIL - FOR FRYING .


 METHOD :- WASH N SOAK URAD DHAL FOR 2 HOURS. DRAIN THE WATER AND GRIND WELL WITH GREEN CHILLIES . ADD SALT ., CORRIANDER ., CURRY LEAVES., ONIONS .. MIX WELL . TAKE THE TOUGH IN HALF HAND FUL MAKE LIKE A BALL AND FLATTEN THEM AND MAKE A HOLE AT THE CENTRE ( U CAN DO IT WITH WET HANDS FOR NON STICKY ). FRY THEM IN OIL . U CAN GET 20 VADAS OUT OF IT . HAVE IT WITH COCONUT CHUTNEY ., SAMBAR ., THAKKALITH THUVAIYAL., OR PUTHINA THUVAIYAL OR KARIVEEPIILAI KOTHUMALLITH THUVAIYAL.. OR SAUCE OR WITH IDDLIE PODI ..

 வடை :-

 தேவையான பொருட்கள் :- வெள்ளை உளுந்து - 1 ஆழாக்கு. பச்சை மிளகாய் - 2 பெரியவெங்காயம் பொடியாக அரிந்தது - 1 கருவேப்பிலை கொத்துமல்லி பொடியாக அரிந்தது - 1 கைப்பிடி. உப்பு - 1 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. 

 செய்முறை :- உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து பச்சை மிளகாயோடு சேர்த்து அரைக்கவும். உப்பு., வெங்காயம் ., கறிவேப்பிலை ., கொத்துமல்லி போட்டு பிசையவும். தண்ணீரைத் தொட்டு அரைக்கையளவு மாவு எடுத்து உருண்டையாக்கி., பின் தட்டையாக்கி., நடுவில் கட்டை விரலால் துளை செய்து எண்ணெயில் பொறிக்கவும். இந்த அளவுக்கு 20 வடை வரும்.. சுட சுட எடுத்து தேங்காய் சட்னி., சாம்பார்., தக்காளித்துவையல்., புதினாத்துவையல்., கறிவேப்பிலை கொத்துமல்லித் துவையல்., அல்லது சாஸ் அல்லது இட்லிப் பொடியுடன் பரிமாறவும்.

 

8 கருத்துகள்:

  1. வடைன்னதும் வந்தேன்.

    நம்ம வீட்டில் வடை சரியா வர்றதில்லை.

    ஹனுமனுக்குக் கூட போண்டா மாலைதான்!!!

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா துளசி.. கலக்கிட்டேள் போங்கோ..:))

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. வடைமாவில் வேகவைத்த உருளை கிழங்கைச் சேர்த்தால் கொஞ்சம் மொறு மொறுப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு