ஞாயிறு, 17 அக்டோபர், 2010

VENDAIKKAAY ( LADIES FINGER ) MANDI.. வெண்டைக்காய் மண்டி..

VENDAIKKAAY MANDI..:-
NEEDED :-
VENDAIKKAAY ( LADIES FINGER ) - 250 GMS
GREEN CHILLIES - 10 NOS . HALVED
SMALL ONIONS - 15 NOS
GARLICS - 15 PODS.
RED CHILLIES - 2 NOS
RICE WASHED WATER - 4 CUPS.
TARMARIND - 1 LEMON SIZE BALL.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
FENUGREEK - 1/2 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1 TSP
OIL - 1 TBLSPN.

METHOD :-
WASH AND CLEAN THE LADIES FINGER AND CUT INTO I INCH PIECES.
PEEL AND HALVE ONIONS AND GARLICS. HALVE RED CHILLIES.
SOAK TARMARIND IN RICE WASHED WATER. HEAT OIL IN A PAN ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD URAD DHAL THEN ADD ASAFOETIDA., AND FENUGREEK., AND REDCHILLIES . ADD CURRY LEAVES.,GREE CHLLIIES AND SAUTE FOR 1 MIN AND ADD LADIES FINGER ., ONIONS AND GARLICS. SAUTE FO 2 MINUTES . TAKE THE TAMARIND PULP FROM RICE WATER AND ADD IT IN THE PAN . BRING TO BOIL. KEEP IN SIM AND COOK FOR 20 MIN TILL IT BECOMES THICK AND SERVE IT WITH PLAIN RICE OR CURD RICE.
NOTE;- IF U DONT HAVE THE RICE WASHED WATER THEN FRY 1/4 TBL SPN OF RAW RICE AND 1 TSP OF FENUGREEK AND 1/8 PINCH OF ASAFOETIDA AND POWDERED IT AND ADD IT TO THE TURMARIND PULP.

THIS IS A CHETTINADU SPL ITEM AND IT WILL BE PREPARED VENDAIKKAAY WITH BOILED MOCHAI., OR BOILED CHANNA AND MAVADU INJI ., CAPSICUM., AND WITH MIXED VEGETABLES TOO ..

வெண்டைக்காய் மண்டி :-
தேவையானவை:-
வெண்டைக்காய் - 250 கி்ராம்
பச்சை மிளகாய் - 10 ரெண்டாக வகிர்ந்தது..
சின்ன வெங்காயம் - 15
வெள்ளைப் பூண்டு - 15 பல்
வர மிளகாய் - 2
அரிசி களைந்த தண்ணீர் - 4 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
வெண்டைக்காய்களை கழுவி துடைத்து 1 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்.
சின்ன வெங்காயம்., பூண்டை தோல் உரித்து ரெண்டாக குறுக்கில் நறுக்கவும். வரமிளகாயை ரெண்டாக கிள்ளி வைக்கவும். புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊறப்போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய் ., கருவேப்பிலை போடவும்.. பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கி பின் வெண்டைக்காய்., சின்ன வெங்காயம் ., பூண்டு போடவும். 2 நிமிடம் நன்கு வதக்கி புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். கொதி வந்ததும் மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து கெட்டியானதும் இறக்கி சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..

குறிப்பு :- அரிசி களைந்த தண்ணீர் இல்லாவிட்டால் 1/4 டேபிள் ஸ்பூன் அரிசி., 1 டீஸ்பூன் வெந்தயம்., 1/8 இஞ்ச் பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து போடவும்.

இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம்.. இதை வெண்டைக்காய் மற்றும் வேகவைத்த மொச்சையுடன் அல்லது வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் மாவடு இஞ்சி ., குடை மிளகாயுடன் அல்லது பலகாய் மண்டியாக செய்யலாம்..

6 கருத்துகள்:

  1. ஆகா வெண்டைக்காய் மண்டி நன்றாக இருக்கும் போல் உள்ளதே. நாளைக்கே செய்ய வேண்டியதுதான்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மாவடு இஞ்சின்னா காயவைத்த இஞ்சியா அக்கா??

    பதிலளிநீக்கு
  3. நன்றீ நித்திலம். மேனகா.,

    மேனகா மாங்காய் இஞ்சிதான் அது..

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!

    பதிலளிநீக்கு
  5. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு