திங்கள், 29 நவம்பர், 2010

SUNDAIKKAI (TURKEY BERRY) PACHADI... சுண்டைக்காய் பச்சடி..

SUNDAIKKAI ( TURKEY BERRY ) PACHADI :-
NEEDED :-
SUNDAIKKAI - 1 CUP ( HALVED)
PARA BOIED THUVAR DHAL - 1/2 CUP
BIG ONION - 1 CHOPPED
TOMATO - 1 SQUARED
RED CHILL POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
ASAFOETIDA - 1 PINCH
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1/2 TSP
JEERA - 1/2 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 10 ML

METHOD :-
HEAT OIL IN A PAN. ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD URAD DHAL AND JEERA. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA., CURRY LEAVES ., CHOPPED ONION AND TOMATO. THEN ADD SUNDAIKKAI AND SAUTE WELL. IMMERSE TAMARIND IN ONE CUP WATER AND TAKE THE PULP. ADD IT TO THE ABOVE WITH SALT. ADD TURMERIC POWDER., CHILLI POWDER AND CORRIANDER POWDER.. BRING TO BOIL ., ADD THUVAR DHALL AND SIMMER FOR 10 MINUTES. COOK TILL SUNDAIKKAIS ARE TENDER. SERVE IT WITH PLAIN RICE WITH PEPPER PAPADS OR WITH CURD RICE AS A SIDE DISH .

SUNDAIKKAAY IS AN IRON CONTENT.

சுண்டைக்காய்ப் பச்சடி:-
தேவையானவை:-
சுண்டைக்காய் - 1 கப்( இரண்டாக நறுக்கியது)
பதமாக வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 துண்டுகளாக்கியது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 10 மிலி

செய்முறை:-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., சீரகம் போட்டு சிவந்ததும்., பெருங்காயம்., கருவேப்பிலை ., வெங்காயம்., தக்காளி., சுண்டைக்காய் போட்டு நன்கு வதக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து இதில் உப்பு சேர்த்து ஊற்றவும். மஞ்சள்பொடி., மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் வேகவிடவும். சுண்டைக்காய்கள் மென்மையானதும் சாதம் மிளகு அப்பளத்துடன் அல்லது தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளப் பரிமாறவும்.

சுண்டைக்காய் இரும்புச்சத்து நிறைந்தது.

6 கருத்துகள்:

  1. Never heard of a sundaikaai pachadi..sounds so good..thanks for sharing..

    (Have sent a mail couple of days ago. Please reply when you get time)

    பதிலளிநீக்கு
  2. அம்மா இதனை அடிக்கடி செய்வாங்க...எங்க வீட்டில் சுண்டைக்காய் செடி எல்லாம் வீட்டில் அம்மா வைத்து இருந்தாங்க...

    அதனால அடிக்கடி இதனை செய்வாங்க...எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...

    நியபகம் செய்து விட்டிங்க..ஆனா எனக்கு தான் அந்த காய் இங்கு கிடைக்காது...

    பதிலளிநீக்கு
  3. சமையல் எனக்கும் பிடித்த விடயம். இதை செய்து பார்க்கத்தான் நேரமில்லை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நிதுபாலா., பிரியா., கீதா., வரோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு