ஞாயிறு, 23 ஜனவரி, 2011

IDDLIE --AVIAL.. இட்லி-- அவியல்..

AVIAL..:-
NEEDED :-
POTATO LARGE - 1 NO
BRINJAL./ ( EGG PLANT ..)/( AUBERGINE) - 3 NOS.
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
CURRY LEAVES - 1 ARK

TO GRIND :-
GREEN CHILLIES - 4 NOS
CRATED COCONUT - 1 CUP
FRIED CHANNA DHAL - 1 TBLSPN.
SOMPH - 1 TSP
JEERA - /2 TSP
PEPPERCORNS - 5 NOS.
SMALL ONION - 2 NOS
GARLIC - 2 PODS

SALT - 1 TSP
OIL - 3 TSP FOR FRYING.

METHOD:-
GRIND ALL THE INGREDIENTS. WASH PEEL AND DICE ONION., TOMATO., AUBERGINE AND POTATO. HEAT OIL IN A PAN . FRY ALL THE VEGETABLES AND CURRY LEAVES. SAUTE WELL ADD THE GROUND MASLA AND SAUTE FOR 1 MINUTE . ADD SALT AND 4 CUPS OF WATER. BRING TO BOIL AND SIMMER FOR 10 MINUTES . COOK TILL VEGETABLES ARE TENDER AND SERVE HOT WITH IDDLIES OR DOSAS..

ITS A CHETTINADU SPECIAL AND SERVED IT WITH MORNING TIFFINS.

அவியல்:-
தேவையானவை:-
பெரிய உருளைக்கிழங்கு - 1
கத்திரிக்காய் - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

அரைக்க:-
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவியது - 1 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்

உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:-
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்கு மைய அரைக்கவும். காய்கறிகளைத் தோல் சீவி சதுரங்களாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம்., தக்காளி., உருளை., கத்திரியை வதக்கவும் . கருவேப்பி்லை சேர்க்கவும். அரைத்த கலவையை ஊற்றி 1 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். காய்கள் மென்மையாகும் வரை வேகவைத்து சூடாக இட்லியுடன்., தோசையுடன் பரிமாறவும்..

இது செட்டிநாட்டில் காலைப் பலகாரத்துக்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் குருமா வகையைப் போன்றது.

5 கருத்துகள்: