செவ்வாய், 29 மார்ச், 2011

BAROTTA .. பரோட்டா (முட்டைக்குருமா).


BAROTTA :-
NEEDED:-

WHITE FLOUR /MAIDA - 1/2 KG

SALT - 1 TSP.

SUGAR - 1 TSP

BAKING POWDER - 1 PINCH ( OPTIONAL)

EGG - 1 NO ( OPTIONAL)

BUTTER - 1 TBL ( OPTIONAL)

OIL - 200 ML.


METHOD:-

TAKE THE FLOUR IN A BOWL ADD SUGR AND SALT. BOTH ARE ENOUGH. BUT IF YOU DESIRE ADD THE BAKING POWDER., BUTTER AND EGG. ADD ENOUGH WATER AND KNEAD WELL AND MAKE INTO A SOFT DOUGH. KEEP ASIDE FOR ONE HOUR . THEN MAKE THEM INTO 16 EQUAL SIZE BALLS. ROLL THEM AND IMMERSE THEM IN OIL. KEEP COVERED. AFTER 6 HOURS REMOVE ALL THE OIL AND ROLL THEM INTO FLAT CHAPPATHIS AND HOLD THEM IN HAND TO SLIGHTLY HIT AND PULL THEM TO ENLARGE THE SIZE OF THEM . ROLL THEM AGAIN WITH FOLDINGS AND MADE BAROTTAS . HEAT TAWA AND FRY THE BAROTTAS . SERVE HOT WITH EGG KURMA OR CHICKEN KURMA OR VEG KURMA..


பரோட்டா..:-

தேவையானவை:-

மைதா - 1/2 கிலோ

உப்பு - 1 டீஸ்பூன்

சீனி - 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை ( விரும்பினால்)

முட்டை - 1 ( விரும்பினால்)

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்(விரும்பினால்)

எண்ணெய் - 200 மிலி.


செய்முறை:-

மைதாமாவில் உப்பும் சீனியும் சேர்க்கவும். முட்டை., வெண்ணெய்., பேக்கிங் பவுடர் விரும்பினால் சேர்க்கலாம் .. ஆனால் நன்கு பிசைந்து ஊற வைத்தால் அவசியமில்லை.. தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் எடுத்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் நன்கு ஊறப்போடவும். 6 மணி நேரம் கழித்து எண்ணெயை வடித்துவிட்டு சப்பாத்திகளைப் போல தேய்த்து பின் கையால் நன்கு பிடித்து சுத்தம் செய்த மேடையில் அல்லது பலகையில் நன்கு வீசவும். நன்கு பனியன் போல மெல்லிசாக வந்ததும் சுருக்கி. எண்ணெய் தடவி உருட்டி தட்டி தோசைக்கல்லில் சுடவும். சூடாக முட்டை குருமா., வெஜிடபிள் குருமா அல்லது சிக்கன் குருமாவோடு பரிமாறவும்.

செவ்வாய், 22 மார்ச், 2011

PUMPKIN TAMARIND GRAVY. பரங்கிக்காய் புளிக்குழம்பு.

PUMPKIN TAMARIND GRAVY:-
NEEDED :-
PUMPKIN - 1 SLICE
SMALL ONION - 10 NOS
GARLIC - 5 PODS
TOMATO - 1 NO
TAMARIND - 1 LEMON SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLY POWDER - 2 TSP
CORRIANDER POWDER - 1 TBL SPN
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
JEERA - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL / THUVAR DHAL - 1 TSP
ASAFOETIDA- 1/8 INCH PIECE
CURRY LEAVES - 1 ARK

METHOD :-
WASH AND CUT THE PUMPKIN INTO SMALL PIECES. PEEL THE ONION AND GARLIC. DICE THE TOMATO. SOAK TAMARIND AND SALT IN 3 CUPS OF WATER AND EXTRACT THE PULP. HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., CHANNA OR THUVAR DHAL . WHEN THEY BECOMES BROWN ADD JEERA AND ASAFOETIDA. THEN ADD CURRY LEAVES., HALVED ONION., GARLIC., TOMATO AND PUMPKIN PIECES.SAUTE FOR 2 MINUTES. ADD TURMERIC POWDER., CHILLI POWDER., CORRIANDER POWDER . ADD TAMARIND PULP AND BRING TO BOIL. THEN SIMMER FOR 20 MINUTES .COOK TILL PUMPKIN TENDERS. SERVE HOT WITH PLAIN RICE AND PAPADS WITH PARUPPU THUVAIYAL.


PN:- IF U WANT TO ADD TASTE ADD 1 TSP OF JAGGERY WHILE COOKING.



பரங்கிக்காய் புளிக்குழம்பு:-
தேவையானவை :-
பரங்கிக்காய் - 1 துண்டு
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப் பூண்டு - 5 பல்
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து _ 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கடலைப்பருப்பு/ துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.



செய்முறை:-
பரங்கிக்காயைக் கழுவி சிறுதுண்டுகள் செய்யவும். சின்ன வெங்காயம்., வெள்ளைப்பூண்டு தோலுரித்து இரண்டு துண்டாக நறுக்கவும். தக்காளியைக் கழுவி துண்டுகளாக்கவும். புளியையும் உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறெடுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து ., கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு போட்டு சிவந்ததும்., சீரகம் ., பெருங்காயம் போடவும். பின் வெங்காயம் ., பூண்டு., தக்காளி., பரங்கிக்காய் போட்டு நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள்., மல்லித்தூள்., மஞ்சள் தூள் போட்டு புளிச்சாறை ஊற்றவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 20 நிமிடம் வைக்கவும். பரங்கிக்காய்கள் மென்மையாய் வெந்தபின் சாதம்., அப்பளம்., பருப்புத்துவையலோடு பரிமாறவும்.

குறிப்பு:- சுவையை அதிகரிக்க கொதிக்கும்போது 1 டீஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.

திங்கள், 14 மார்ச், 2011

LADIES FINGER PACHADI. வெண்டைக்காய் பச்சடி.

LADIES FINGER PACHADI :-
NEEDED :-
LADIES FINGER - 250 GRAMS.
BOILED THUVAR DHAL - 1 CUP
BIG ONION - 1 NO CHOPPED
TOMATO - 1 NO CHOPPED.
GREEN CHILLIES - 2 NOS. SLIT OPEN
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
CHILLI POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
CURRY LEAVES - 1 ARK
OIL - 3 TSP.
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1/2 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.

METHOD :-
WASH AND CHOP THE LADIES FINGER. SOAK TAMARIND AND SALT IN ONE CUP WATER. HEAT OIL IN A PAN . ADD MUSTARD .,WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., JEERA., ASAFOETIDA. THEN ADD ONION., LADIES FINGER ., CURRY LEAVES AND SAUTE WELL. THEN ADD TOMATOES. TURMERIC POWDER., CHILLI POWDER., DHANIYA POWDER. SQUEEZE AND TAKE THE TAMARIND PULP AND ADD IT IN THE PAN. ADD ENOUGH WATER AND BRING TO BOIL. AFTER 5 MINUTES ADD THE BOILED THUVAR DHAL AND FURTHER COOK FOR 5 MINUTES. THEN REMOVE FROM FIRE AND SERVE HOT WITH PLAIN RICE ., SAMBAR RICE., CURD RICE., OR DOSAS OR IDDLIES.

வெண்டைக்காய் பச்சடி:-
தேவையானவை:-
வெண்டைக்காய் - 250
வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
தக்காளி - பொடியாக அரிந்தது.
பச்சை மிளகாய் - 2 இரண்டாக கீறியது
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை :-
வெண்டைக்காய்களை நன்கு கழுவி துடைத்து நறுக்கவும். புளியையும் உப்பையும் நீரில் ஊறப்போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து., சீரகம்., பெருங்காயம் போடவும். பின் வெங்காயம்., வெண்டைக்காய்., கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து., புளியை கரைத்து ஊற்றவும். மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு வெந்ததும் 5 நிமிடம் கழித்து இறக்கி சாதம்., சாம்பார் சாதம்., தயிர் சாதம்., அல்லது இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

புதன், 9 மார்ச், 2011

INDIAN PENNYWORT (VALLARAI ) SOUP.. வல்லாரை சூப்(பி)..


INDIAN PENNYWORT (VALLARAI) SOUP.:-
NEEDED:-
INDIAN PENNY WORT - 1 HANDFUL
ONION - 1 MEDIUM CHOPPED
TOMATO - 1 LARGE CHOPPED
GREEN CHILLY - 1 SLIT OPEN
BOILED THUVAR DHAL - 1 TBLSPN
TURMERIC POWDER - 1 PINCH.
SALT - 1 TSP
OIL - 2 TSP
ORID DHAL - 1/2 TSP
JEERA - 1/2 TSP
SOMPH - 1/2 TSP
PEPPER - 10 CORNS
CINNAMON - 1 INCH PIECE
CARDAMOM - 1 NO
BAY LEAF - 1 INCH PIECE
KALPASIP PUU - 1 INCH PIECE
CURRY AND CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.
MILK - 1 TBL SPN ( OPTIONAL)
MAGGI MASALA POWDER - 1 TSP ( OPTIONAL)

METHOD:-
WASH THE INDIN PENNYWORT AND KEEP ASIDE. HEAT OIL IN A PAN ADD ORID DHAL., JEERA., SOMPH., PEPPER CORNS., CINNAMON., BAY LEAF., CARDAMOM., KALPASIPPUU. THEN ADD THE ONION., TOMATO., CHILLY., CURRY AND CORRIANDER LEAVES., AND INDIAN PENNYWORT LEAVES. SAUTE FOR 1 MIN ADD THE SMASHED THUVAR DHAL ., TURMERIC POWDER., SALT. THEN ADD 3 CUPS OF WATER. BRING TO BOIL. SIMMER FOR 5 MINUTES.

IF DESIRES ADD MILK AND MAGGI MASALA POWDER.. IT ADDS THICKNESS AND AROMA. SERVE HOT WITH POTATO CHIPS.

PEOPLE OF CHETTINADU HAVE THIS SOUP AT 11 AM BEFORE MEALS.. THIS IS AN APPETISER TOO.. IT GIVES GOOD MEMORY POWER. ITS GOOD FOR CHILDREN., SICK PEOPLE AND AGED PEOPLE TOO.

வல்லாரை சூப்(பி):-
தேவையானவை:-
வல்லாரை - 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிர்ந்தது.
வேக வைத்த துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
பட்டை - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 1
இலை - 1 இன்ச் துண்டு
கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டு
கருவேப்பிலை கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.
பால் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
மாகி மசாலா பவுடர் - 1 டீஸ்பூன் (விரும்பினால்).

செய்முறை:-
வல்லாரையை நன்கு கழுவி வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., சோம்பு., மிளகு., பட்டை., ஏலக்காய்., இலை போடவும். பின்பு வெங்காயம்., தக்காளி., பச்சை மிளகாய்., கருவேப்பிலை கொத்துமல்லித்தழை., வல்லாரை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் பொடி ., உப்பு., மசித்த துவரம்பருப்பு போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றவும். கொதி வந்த பிறகு 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

விரும்பினால் பால் மற்றும் மாகி மசாலா பவுடர் சேர்க்கவும். இது திக்னெஸ் மற்றும் வாசனையை அதிகரிக்கும். உருளை சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.

செட்டிநாட்டு மக்கள் இதை பதினோரு மணிக்கு மதிய உணவுக்கு முன் அருந்துவார்கள். இது பசியை நன்கு தூண்டும். ஞாபகசக்திக்கும் நல்லது . இது குழந்தைகளுக்கும்., நோயாளிகளுக்கும்., வயதானோருக்கும் நல்லது.

புதன், 2 மார்ச், 2011

CURRY LEAVES GRAVY.. கருவேப்பிலைக் குழம்பு..


CURRY LEAVES GRAVY...
NEEDED :-
CURRY LEAVES - 1 BOWL
SMALL ONION - 10 NOS
GARLIC - 10 NOS
TOMATO - 1 NO
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
CHILLI POWDER - 1 TSP
DHANIYA POWDER - 1 TSP
TURMERICPOWDER - 1 PINCH.
SOMPH - 1/2 TSP
JEERA - 1/4 TSP
PEPPER - 5 NOS
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA - 1 SMALL PIECE.
METHOD :-
WASH THE CURRY LEAVES. GRIND CURRY LEAVES WITH SOMPH ., JEERA., PEPPER., SALT ., TAMARIND, CHILLI POWDER., DHANIYA POWDER., TURMERIC POWDER., TOGETHER TO A PASTE. PEEL AND CHOP SMALL ONION., GARLIC AND TOMATO. HEAT THE IOL IN A PAN ADD MUDTARD. WHEN OT SPLUTTERS ADD ORID DHAL AND ASAFOETIDA. WHEN IT BECOMES BROWN ADD ONION., GARLIC., TOMATO. SAUTE WELL. THEN ADD THE GROUND PASTE AND ADD ENOUGH WATER , BRING TO BOIL AND KEEP SIM FOR 20 MIN . , COVERED WITH LID., TILL OIL OOZES OUT. SERVE HOT WITH PLAIN RICE OR IDDLIES .
ITS A GOOD APPETISER AND THE IRON CONTENT IS HIGH ..
கருவேப்பிலை குழம்பு :-
தேவையானவை:-
கருவேப்பிலை - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப்பூண்டு - 10
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு .
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 5
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 துண்டு.
செய்முறை:-
கருவேப்பிலையை கழுவி அதோடு சோம்பு ., சீரகம்., மிளகு., மல்லிப் பொடி., மிளகாய்ப்பொடி., மஞ்சள் பொடி., உப்பு., புளி போட்டு நன்கு மைய அரைக்கவௌம். சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளியை தோலுரித்து பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் ., பெருங்காயம் போட்டு., பின் வெங்காயம்., பூண்டு ., தக்காளியைப் போடவும். நன்கு வதங்கியதும்., அரைத்த கலவையை ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சூடாக சாதம் அல்லது இட்லியுடன் பரிமாறவும். இது பசியை தூண்டும். மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

செவ்வாய், 1 மார்ச், 2011

CAPSICUM RICE.. குடை மிளகாய் சாதம்..

CAPSICUM RICE :-
COOKED RICE - 2 CUPS
CAPSICUM - 4 NOS (MEDIUM) CUT INTO THIN STRANDS.
BIG ONION - 3 NOS CUT INTO STRANDS.
ORID DHAL - 2 TSP
CHANNA DHAL - 2 TSP
RED CHILLIES - 4 NOS.
OIL - 1 TBLSPN. ( OR GHEE)
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
SALT - 1 TSP.

METHOD:-
HEAT OIL OR GHEE IN A PAN . ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION AND CAPSICUM AND SAUTE WELL. IN A SEPERATE PAN FRY CHILLIES., ORD DHAL., AND CHANNA DHAL. WHEN IT BECOMES A GOLDEN BROWN OFF THE GAS . , COOL AND GRIND IT TO A POWDER. ADD RICE., SALT AND THE POWDER IN THE PAN AND SITRR WELL TO MIX WITH ONION & CAPSICUM.

SERVE HOT WITH PAPADS., SALADS., AND RAITHAS.

குடைமிளகாய் சாதம் :-
தேவையானவை:-
சாதம் - 2 கப்
குடைமிளகாய் - 4 (மீடியம்) மெல்லிய குச்சியாக நறுக்கவும்.
பெரிய வெங்காயம் - 3 குச்சியாக நறுக்கவும்.
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் ( அல்லது நெய்)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:-
பானில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் போடவும். ஒரு தனி பானில் மிளகாய்., உளுந்து., கடலைப்பருப்பை வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். வதக்கிய வெங்காயம் ., குடைமிளகாயில் சாதம்., உப்பு., பொடி சேர்த்து நன்கு கிளறி அப்பளம்., சாலட்., ரெய்த்தாக்களுடன் பரிமாறவும்..