திங்கள், 11 ஏப்ரல், 2011

THUVAR DHAL CHUTNEY.. துவரம்பருப்பு சட்னி...


THUVAR DHAL CHUTNEY:-

NEEDED :-

RED CHILLIES - 3 NOS.

THUVAR DHAL - 1 TBLSPN

RAW RICE - 2 TSP

FENUGREEK - 1/2 TSP

ASAFOETIDA - 1/10 INCH PIECE

BIG ONION - 1 NO

TOMATO - 1 NO

TAMARIND - 1 POD

SALT - 1 TSP

OIL - 2 TSP

MUSTARD- 1TSP

ORID DHAL - 1 TSP.

CURRY LEAVES - 1 ARK


METHOD :-

FRY REDCHILLIES., THUVAR DHAL., RAWRICE., ASAFOETIDA., AND FENUGREEK WITHOUT OIL IN A PAN. POWDER THEM. CHOP ONION AND TOMATO . SOAK TAMARIND IN 3 CUPS OF WATER AND TAKE THE PULP OUT OF IT AND ADD SALT. HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION., TOMATO AND CURRY LEAVES. SAUTE WELL ADD THE TAMARIND WATER WITH SALT AND ADD THE POWDERED MASALA. BRING TO BOIL. COOK FOR 10 MINUTES AND SERVE HOT WITH IDDLIES OR DOSAS..


THIS IS CHETTINADU SPECIAL..:))


துவரம்பருப்பு சட்னி:-

தேவையானவை:-

வரமிளகாய் - 3

துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பச்சரிசி - 2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/10இஞ்ச் துண்டு

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

புளி - 1 சுளை

உப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 இணுக்கு.


செய்முறை :-

வெறும் பானில் எண்ணெயில்லாமல் வரமிளகாய்., துவரம்பருப்பு., பச்சரிசி., வெந்தயம்., பெருங்காயம் போட்டு வறுத்து பொடிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து எடுத்து உப்பு சேர்க்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயிக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., வெங்காயம் ., தக்காளி., கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். உப்பும் மசாலா பொடியும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து சூடாக இட்லி., தோசையுடன் பரிமாறவும்..


இது செட்டிநாடு ஸ்பெஷல் ..:))

10 கருத்துகள்:

  1. விதவிதமா சட்னி செய்து சாப்பிட பிடிக்கும்,இதுவரை இந்த சட்னி செய்ததில்லை.நிச்சயம் செய்து பார்க்கிறேன் அக்கா..

    பதிலளிநீக்கு
  2. நீங்க டாக்டரா? சைடுல ஒரே ஆரோக்ய டிப்ஸா இருக்கே?

    பதிலளிநீக்கு
  3. புதுசாக இருக்கே...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. pls collect ur award from my blog http://sashiga.blogspot.com/2011/04/easy-chutney.html

    பதிலளிநீக்கு
  5. நன்றி மேனகா.,

    நன்றி செந்தில்குமார்.:-))

    நன்றி சித்து.,

    நன்றி விஜி.,

    நன்றி கீது.,

    நன்றி மேனகா..:))

    மேனகா கலெக்ட் பண்ண முடியலை.. ப்ளீஸ் செண்ட் பண்ணுங்க மெயில் ஐடிக்கு..:)

    பதிலளிநீக்கு
  6. இப்போதான் உங்க பதிலை பார்த்தேன்,மெயில் ஐடிக்கு அனுப்புகிறேன்..

    அக்கா பிஸியா இருக்கீங்களா,2 நாட்களா தொடர்புகொள்கிறேன்,முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  7. நன்றிடா மேனகா..

    இல்லையே என் நம்பர் சரியா இருக்கா உன்னிடம்..

    பதிலளிநீக்கு