புதன், 18 மே, 2011

KUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ்.

KUMMAAYAM:-

NEEDED:-

KUMMAAYAM FLOUR( 1CUP RAW RICE., 1 CUP MOONG DHAL., 1 CUP ORID DHAL - FRY THEM WITHOUT OIL AND POWDER , SIFT THEM . ) FROM THIS FLOUR TAKE ONLY 1 CUP - 1 CUP..200GMS

JAGGERY ( VELLAM +PANAIVELLAM) - 1 1/2 CUP 200GMS

GHEE+ SEASOME OIL - 100+50 GMS.

WATER - 4 CUPS.


METHOD:-

HEAT 50 GMS SEASOME OIL WITH 50 GMS GHEE IN A KADAI. FRY THE FLOUR FOR A MINUTE, KEEP ASIDE. ADD JAGGERY IN 4 CUPS OF WATER AND HEAT THE PAN TILL ALL THE JAGGERY MELTS. STIR OCCASIONALLY. REMOVE FROM FIRE AND STRAIN THE JAGGERY WATER IN THE FLOUR AND MIX THEM WITHOUT FORMING LUMPS. PLACE THE PAN IN THE STOVE AND STIR WELL. COOK TILL IT IS NOT STICKS TO HAND . WHEN IT BECOMES GLASSY ADD THE REST OF THE GHEE AND SERVE HOT.



ITS A SPECIAL ITEM OF CHETTINADU AND WE SERVED IT IN OUR MARRIAGES AT THE END OF THE FUNCTION.


THIS IS MY 100 THS POST..:))


கும்மாயம்/ஆடிக்கூழ்:-

தேவையானவை:-

கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.

கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்

நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.

தண்ணீர் - 4 கப்


செய்முறை:-

பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.


இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம். திருமணம் அல்லது விஷேஷம் முடிந்தவுடன் மாலைப்பலகாரத்தில் பரிமாறுவார்கள். சொல்லிக்கிற பலகாரம் என்று இதற்குப் பேர்..:)


இது எனது 100வது பதிவு..:))

8 கருத்துகள்:

  1. 100th post - ஸ்வீட் எடு - கொண்டாடு! Congrats!

    அக்கா, பார்க்க இந்த ஐட்டம் - ஹல்வா மாதிரியே இருக்குது.

    பதிலளிநீக்கு
  2. superb ah irukku parkka ..try panidavendiyathu than pola nga...

    பதிலளிநீக்கு
  3. நூறாவது கொலை முயற்சி..........வாழ்த்துக்கள்....இனிமை.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் தேனம்மை - நூறாவது இடுகையா - பலே பலே ! கும்மாயம் கிண்டறீங்களா .... ம்ம்ம் - நம்ம் பக்கத்து ஆடிக்கூழுக்கு ஈடு இணையே கிடையாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. இப்போதான் கும்மாயம் பெயரே கேள்விபடுகிறேன்..நல்லாயிருக்கு அக்கா..100க்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் தேனம்மை .

    பதிலளிநீக்கு
  7. நன்றி சித்து

    நன்றி ஷம்மி

    நன்றி ஜெரி

    நன்றி சீனா சார்

    நன்றி மேனகா..

    நன்றி மஹி

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.1

    பதிலளிநீக்கு