வியாழன், 5 மே, 2011

SNAKE GOURD THUVATTAL. புடலங்காய்த் துவட்டல்.

SNAKE GOURD THUATTAL:-

NEEDED:-

SNAKE GOURD - 250 GMS (MEDIUM SIZE)

PARA BOILED THUVAR DHAL/MOONG DHAL - 1/2 CUP

GRATED COCONUT - 2 TSP ( OPTIONAL)

OIL - 2 TSP

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1

RED CHILLY - 2 NOS HALVED .,UNSEEDED

CURRY LEAVES- 1 ARK

SALT - 1/3 TSP.


METHOD :-

WASH CUT UNSEED AND CHOP THE SNAKE GOURD. HEAT OIL IN A PAN ADD MUSTARD, WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, HALVED CHILLIES., CURRY LEAVES., THEN CHOPPED SNAKE GOURD. SPRAY SOME WATER . SAUTEWELL SIMMER THE STOVE AND COVERED IT WITH A LID . AFTER 5 MINUTES STIRR WELL ADD THE PARA BOILED THUVAR DHAL AND SALT. STIRR WELL AND COVER . COOK FOR 3 MINUTES . REMOVE FROM FIRE AND ADD THE GRATED COCONUT AND SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAKKUZAMBU RICE OR PUZIK KUZAMBU RICE. YAMMY.. YOU WILL ASK FOR MORE..:)



புடலங்காய் துவட்டல்:-

தேவையானவை:-

புடலங்காய் - 250 கிராம் (மீடியம் சைஸ்)

பதமாக வெந்த துவரம் பருப்பு/பாசிப் பருப்பு - 1/2 கப்

துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன் ( விரும்பினால்)

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2 ரெண்டாக கிள்ளி விதையை உதிர்க்கவும்.

கருவேப்பிலை - 1 இணுக்கு

உப்பு - 1/3 டீஸ்பூன்.


செய்முறை:-

புடலங்காயைக் கழுவி இரண்டாக வெட்டி விதையை நீக்கி சின்னதாக அரியவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை., வரமிளகாய்., புடலைங்காய் போட்டு ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து கிளறி சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு மூடவும். 5 நிமிடம் வெந்தவுடன் திறந்து பருப்பை சேர்த்து., உப்பு போடவும். பின் கிளறி மூடி 3 நிமிடம் வெந்தவுடன் இறக்கவும். அதன்பின் தேங்காய்த்துருவல் போட்டு கிளறி சாம்பார் சாதம்., புளிக்குழம்பு சாதம்., வத்தக்குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளப் பரிமாறவும். இது டேஸ்டாக இருப்பதால் இன்னும் இன்னும் என கேட்டு வாங்கிச் சாப்பிடுவீர்கள்..:)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக