திங்கள், 1 ஆகஸ்ட், 2011

SEEPUCHEEDAIKKAAY. சீப்புச்சீடைக்காய்.

CHEEPUCHEEDAIKKAAY:-
NEEDED :-

RAW RICE - 4 CUPS

FRIED CHANNA DHAL - 1 CUP

COCONUT - 1

SALT - 3 TSP

OIL - FOR FRYING ( 350 GMS)


METHOD :-

SOAK THE RICE FOR A WHILE AND DRAIN IT. GRIND IT IN A MIXIE AND SIFT THE FLOUR. IN A DRY PAN FRY THE FLOUR WELL ( SHOULD BE AS NICE AS DESERT SAND)POWDER THE FRIED CHANNA DHAL TOO AND SIFT IT. GRATE THE COCONUT ., GRIND WELL ADD 2 CUPS OF WATER AND SQUEEZE THE COCONUT MILK OUT OF IT. HEAT THE COCONUT MILK IN A PAN AND ADD SALT. WHEN IT BECOMES WARM REMOVE FROM FIRE AND KEEP ASIDE . ADD THE WARM MILK INTO THE RICE + CHANNA DHAL FLOUR MIXTURE. ROLL INTO A SMOOTH DOUGH. KEEP COVERED WITH A WET TOWEL. HEAT OIL IN A PAN . MAKE A BALL FROM THE DOUGH AND PUT IT IN AN SEEPUCHEEDAIKKATTAI AND SQUEEZE THE DOUGH IN A PAPPER. CUT THEM INTO 3 INCH TAPES AND STICK THE TWO ENDS TOGETHER . MAKE THE WHOLE DOUGH LIKE THIS SEEPUCHEEDAI AND DEEP FRY IN OIL. SERVE HOT AS AN EVENING SNACKS.


THIS IS CHETTINADUS' SPECIAL SNACKS.:)


சீப்புச்சீடைக்காய்:-

தேவையானவை:-

பச்சரிசி - 4 கப்

பொட்டுக்கடலை - 1 கப்

தேங்காய் - 1 முழுதாக

உப்பு - 3 டீஸ்பூன்

எண்ணெய் - பொறிக்க ( 350 கிராம்)


செய்முறை:-

பச்சரிசியைச் சிறி்து நேரம் ஊறவைத்து வடிகட்டியில் போட்டு பின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். வெறும் வாணலியில் போட்டு மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையையும் பொடித்துச் சலிக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சூடாகும்போது உப்பு போட்டு இறக்கவும். திரிந்தது போல் இருக்கும். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது அரிசி., பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக்கட்டையில் உருண்டையாக் உருட்டிப்போட்டு மாவைப் பேப்பரில் பிழியவும். அதை 3 இன்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும். சூடாக மாலைப் பலகாரமாகப் பரிமாறவும்.


இது செட்டிநாட்டில் செய்யப்படும் ஸ்பெஷல் பலகாரமாகும்.

6 கருத்துகள்:

  1. பார்க்கவே அழகாக இருக்குது, அக்கா....

    பதிலளிநீக்கு
  2. எனக்கு ரொம்ப பிடித்த ஸ்நாக்...ரொம்ப சூப்ப்பர்ப்...

    பதிலளிநீக்கு
  3. எனக்கு ரொம்ப பிடித்தது..செய்முறை தேடிகிட்டு இருந்தேன்...எனக்காக சீப்பு சீடை அச்சு படம் போடுங்க அக்கா...

    பதிலளிநீக்கு
  4. next week end snacks engal veetil idhuthan....thanks thenammai mam...
    Santha

    பதிலளிநீக்கு
  5. நன்றி சித்து

    நன்றி கீதா

    நன்றி மேனகா

    நன்றி சாந்தா..:)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு