சனி, 27 அக்டோபர், 2012

GARLIC PICKLE.வெள்ளைப்பூண்டு ஊறுகாய்

GARLIC PICKLE.வெள்ளைப்பூண்டு ஊறுகாய்.

GARLIC PICKLE.:_
NEEDED:-
PEELED GALRIC - 2 CUPS
LEMON JUICE - 1 CUP
TILL OIL - 1 CUP
MUSTARD - 1 TSP
RED CHILLI POWDER - 1/2 CUP
SALT - 1/4 CUP
DHANIYA - 1/3 CUP
JEERA - 1/3 CUP
FENUGREEK - 1/8 CUP
JAGGERY - 1 NO.

METHOD:-
FRY THE DHANIYA, JEERA, FENUGREEK SEPERATELY IN A DRIED PAN WITHOUT OIL. POWDER THEM . HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD GARLIC. KEEP STIRRING IN A MEDIUM FIRE. AFTER HALF COOKING ADD THE CHILLI POWDER, DHANIYA POWDER, JEERA POWDER, FENUGREEK POWDER AND SALT. FRY FOR A MINUTE AND ADD THE LEMON JUICE. COOK FOR 2 MINUTES AND ADD THE CRUSHED JAGGERY. REMOVE FROM FIRE . KEEP ASIDE FOR COOLING. AFTER COOLING FILLED IT IN AIR TIGHT CONTAINERS AND KEEP REFRIDGERATED. TAKE SMALL  QUANTITIES WHEN NEEDED. SERVE IT WITH CURD RICE OR CHAPPATHIS.

வெள்ளைப்பூண்டு ஊறுகாய்.:-
தேவையானவை:-
தோலுரித்த பூண்டு - 2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எள் எண்ணெய் - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/2 கப்
உப்பு - 1/4 கப்
வர மல்லி - 1/3 கப்
ஜீரகம் - 1/3 கப்
வெந்தயம் - 1/8 கப்
வெல்லம் - 1 அச்சு.

செய்முறை:-
வர மல்லி, ஜீரகம், வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்ததும் பூண்டைப்
போட்டு வதக்கவும். நடுத்தரமான தீயில் பாதி வேகும் வரை கிண்டவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி, வெந்தயப் பொடி, மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது வதக்கி எலுமிச்சைச் சாறை ஊற்றவும். 2 நிமிடம்
வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு இறக்கவும். ஆறவைத்து பாட்டில்களில் அடைத்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும், தேவையான போது சிறிய அளவில் எடுத்து உபயோகிக்கவும். தயிர்சாதம், சப்பாத்தியோடு பரிமாறலாம்.

TOMATO OOTHAPPAM.தக்காளி ஊத்தப்பம்

TOMATO OOTHAPPAM.தக்காளி ஊத்தப்பம்.

TOMATO OOTHAPPAM:-
NEEDED:-
DOSA FLOUR - 2 LADLETOMATO - 1 NO SLICED
SALT AND PEPPER - 1/4 TSP
OIL - 2 TSP

METHOD :-
POUR DOSA FLOUR IN DOSA PAN AND DONT SPREAD THIS WITH LADLE. PLACE THE TOMATOS ON TOP OF IT. SPRINKLE THE SALT AND PEPPER. POUR OIL AROUND THE OOTHAPPAM. TURN AROUND AND COOK THE OTHER SIDE TILL GOLDEN BROWN OR DONE. SERVE HOT WITH SAMBAR AND CHUTNEYS.

தக்காளிம் ஊத்தப்பம்:-
தேவையானவை :-
தோசை மாவு - 2 கரண்டி,
தக்காளி - 1 வட்ட துண்டங்களாக்கவும்.
உப்பு & மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
தோசை மாவை தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றவும். தடவ வேண்டாம். அதில் தக்காளித்  துண்டங்களை அடுக்கவும். உப்பு மிளகுத்தூளைத் தூவவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு  மொறுமொறுப்பாக வேகவிடவும். திருப்பி போட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும். சாம்பார் சட்னிகளோடு பரிமாறவும்.

புதன், 17 அக்டோபர், 2012

PLANTAIN FLOWER PAAL KOOTU. வாழைப்பூ பால் கூட்டு

PLANTAIN FLOWER PAAL KOOTU.

NEEDED:-
PLANTAIN FLOWER - HALF ( INNER TENDER PART)
THUVAR DHAL/MOONG DHAL - 50 GMS
BIG ONION - 1 CHOPPED
GREEN CHILLIE - 1 SLIT OPEN
SAMBAR POWDER - 1/4 TSP
SALT - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
COCONUT MILK OR MILK - 1/4 CUP

METHOD:-

CLEAN THE VEINS AND CHOP THE FLOWER. BOIL THUVAR DHAL. ADD PLANTAIN FLOWER, ONION, GREEN CHILLIE, SAMBAR POWDER WITH ENOUGHWATER. COOK TILL DONE. ADD SALT AND COOK FOR 2 MORE MINUTES. TOSS IT WITH THE MUSTARD, ORID DHAL, CURRY LEAVES. ADD COCONUT MILK OR MILK AND SERVE HOT WITH VATHAK KULAMBU RICE.

வாழைப்பூ பால் கூட்டு:-

தேவையானவை:-
வாழைப்பூ - பாதி ( உள்ளிருக்கும் தளிர் பகுதி)
துவரம் பருப்பு /பாசிப்பருப்பு - 50 கி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் அல்லது பால் - 1/4 கப்

செய்முறை:-

வாழைப்பூவின் நரம்புகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை வேக வைக்கவும். அதில் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை வேக வைக்கவும். உப்பு சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் வேக விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். தேங்காய்ப் பால் அல்லது பாலைச் சேர்த்து சூடாக வத்தக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

POTATO PODIMASS. உருளைக்கிழங்குப் பொடிமாஸ்.

 POTATO PODIMASS.

NEEDED:-
POTATO - 250 GMS
RED CHILLI POWDER - 2 TSP
SALT - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
SOMPH - 1/2 TSP OR ASAFOETIDA - 1 PINCH.
CURRY LEAVES - 1 ARK
OIL - 1TBLSPN.

METHOD:-
WASH, BOIL, PEEL AND DICE THE POTATO. ADD SALT AND RED CHILLI POWDER , STIRR WELL. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. ADD SOMPH OR ASAFOETIDA POWDER THEN THE POTATO. FRY FOR 10 MINUTES IN A MEDIUM FIRE. SERVE HOT WITH CURD RICE OR CHAPPATHIS.

உருளைக்கிழங்குப் பொடிமாஸ்.

தேவையானவை:-
உருளைக்கிழங்கு - 250 கி
சிவப்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன் அல்லது
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை.
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
உருளைக்கிழங்குகளைக் கழுவி வேகவைத்துத் தோலுரித்து சதுரத் துண்டுகளாக நறுக்கவும். உப்பும் மிளகாய்ப் பொடியும் போட்டு நன்கு பிசிறி வைக்கவும். ஒரு பானில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். அது வெடித்ததும் உளுந்து போடவும். அது சிவந்ததும் சோம்பு அல்லது பெருங்காயப்பொடி போட்டு உருளைக்கிழங்குகளையும் போடவும். பத்து நிமிஷம் மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து தயிர் சாதத்துடன் அல்லது சப்பாதிகளுடன் பரிமாறவும்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

POTATO LEMON MASALA . உருளை எலுமிச்சை மசாலா

POTATO LEMON MASALA:-

NEEDED:-
POTATO - 2 NOS. BOILED PEELED & SMASHED.
BIG ONION - 1 NO. CHOPPED FINELY.
GREEN/RED CHILLIES - 3 NOS. CUT INTO 1 INCH PIECES
GINGER - 1 INCH PIECE ,CHOPPED
TURMERICPOWDER - 1 PINCH
LEMON JUICE - 1/2 TBLSPN
SALT - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
BAY LEAF - 1

METHOD:-

HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, WHEN IT BECOMES BROWN ADD CHANNA DHAL, ANISEEDS & BAY LEAF. THEN ADD GREEN CHILLIES, CURRY LEAVES, ONION, SAUTE FOR 2 MINUTES. ADD THE SMASHED POTATO WITH SALT, TURMERIC POWDER AND LEMON JUICE.POUR HALF CUP WATTER. COOK FOR 5 MINUTES AND SERVE HOT WITH CHAPPATHIS, NAANS, FULKAS.

உருளை எலுமிச்சை மசாலா:-

தேவையானவை:-
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்துத் தோலுரித்து மசிக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பச்சை/சிகப்பு மிளகாய் - 3, 1 இன்ச் துண்டாக நறுக்கவும்.
இஞ்சி - 1 இன்ச் துண்டு. பொடியாக நறுக்கவும்.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.
எலுமிச்சை ரசம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை இலை - 1

செய்முறை:- பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் கடலைப்பருப்பு, சோம்பு பட்டை இலை போடவும். இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு . மஞ்சள் தூளும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் வேகவைத்து சப்பாத்தி, நான், புல்காவோடு பரிமாறவும்.

EGG TOMATO OMLETTE முட்டை தக்காளி ஆம்லெட்.

EGG TOMATO OMLETTE:-

NEEDED:-
EGG - 2 NOS.
CHOPPED ONION - 1 TBLSPN
CHOPPED TOMATO - 1TBLSPN
GREEN CHILLIE - 1 NO.CHOPPED
JEERA PEPPER POWDER - 1/2 TSP
RED CHILLI POWDER - 1/2 TSP
SALT - 1/3 TSP
OIL - 2 TSP

METHOD:-
ADD ALL THE INGREDIENTS WITH THE EGGS IN A BOWL . ( EXPECT OIL). BEAT WELL WITH A FORK. PREPARE OMLETTES WITH OIL. FRY BOTH SIDES AND SERVE HOT THE FLUFFY OMLETTES WITH SAUCES.

முட்டை தக்காளி ஆம்லெட் :-

தேவையானவை.
முட்டை - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக அரிந்த தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கவும்.
மிளகு சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். ( எண்ணெய் தவிர). முள் கரண்டி கொண்டு நன்கு அடிக்கவும். தோசைக்கல்லில் ஆம்லெட்டுகளாக சுடவும். சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு சூடா சாஸ்களோடு பரிமாறவும்.

சனி, 6 அக்டோபர், 2012

NEEM FLOWER LEMON RASAM .வேப்பம்பூ எலுமிச்சை ரசம்.

NEEM FLOWER LEMON RASAM.

NEEDED:-
NEEM FLOWER DRIED - 1 HANDFUL
TAMARIND - 3 PODS
SALT - 1 TSP
LEMON JUICE - 1 TBLSPN
JEERA PEPPER POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
RED CHILLY - 1 NO HALVED
OIL/GHEE  - 2 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
FENUGREEK - 1/3 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH

METHOD:-
 SOAK TAMARIND AND SALT IN 2 CUPS OF WATER AND SQUEEZE THE JUICE OUT. ADD JEERA PEPPER POWDER,TURMERIC POWDER AND KEEP ASIDE . HEAT OIL IN A PAN ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD JEERA, FENUGREEK,ASAFOETIDA POWDER AND HALVED CHILLY. ADD DRIED NEEM FLOWER AND SAUTE FOR A MINUTE.POUR THE TAMARIND JUICE IN IT AND BRING TO BOIL. AT THE TIME OF BOILING REMOVE FROM FIRE AND ADD LEMON JUICE. SERVE HOT WITH RICE AND PAPPDS.

வேப்பம்பூ எலுமிச்சை ரசம்.
தேவையானவை:-
வேப்பம்பூ காயவைத்தது - 1 கைப்பிடி
புளி - 2 சுளை
உப்பு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ரசம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.
வர மிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளவும்.
எண்ணெய்/நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
புளியை உப்புடன் இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகு சீரகப் பொடி,மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். அது வெடித்ததும் சீரகம், வெந்தயம், பெருங்காயம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் போடவும். காய்ந்த வேப்பம் பூக்களைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும். கொதி வரும் சமயம் இறக்கி எலுமிச்சை ரசத்தை சேர்த்து சூடான சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.