ஞாயிறு, 7 அக்டோபர், 2012

POTATO LEMON MASALA . உருளை எலுமிச்சை மசாலா

POTATO LEMON MASALA:-

NEEDED:-
POTATO - 2 NOS. BOILED PEELED & SMASHED.
BIG ONION - 1 NO. CHOPPED FINELY.
GREEN/RED CHILLIES - 3 NOS. CUT INTO 1 INCH PIECES
GINGER - 1 INCH PIECE ,CHOPPED
TURMERICPOWDER - 1 PINCH
LEMON JUICE - 1/2 TBLSPN
SALT - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
BAY LEAF - 1

METHOD:-

HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, WHEN IT BECOMES BROWN ADD CHANNA DHAL, ANISEEDS & BAY LEAF. THEN ADD GREEN CHILLIES, CURRY LEAVES, ONION, SAUTE FOR 2 MINUTES. ADD THE SMASHED POTATO WITH SALT, TURMERIC POWDER AND LEMON JUICE.POUR HALF CUP WATTER. COOK FOR 5 MINUTES AND SERVE HOT WITH CHAPPATHIS, NAANS, FULKAS.

உருளை எலுமிச்சை மசாலா:-

தேவையானவை:-
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்துத் தோலுரித்து மசிக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பச்சை/சிகப்பு மிளகாய் - 3, 1 இன்ச் துண்டாக நறுக்கவும்.
இஞ்சி - 1 இன்ச் துண்டு. பொடியாக நறுக்கவும்.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.
எலுமிச்சை ரசம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை இலை - 1

செய்முறை:- பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் கடலைப்பருப்பு, சோம்பு பட்டை இலை போடவும். இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு . மஞ்சள் தூளும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் வேகவைத்து சப்பாத்தி, நான், புல்காவோடு பரிமாறவும்.

3 கருத்துகள்:

  1. வழக்கம் போல் அருமை அக்கா.

    Participate in My First Event - Feast of Sacrifice Event
    http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஆசியா

    நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    பதிலளிநீக்கு