புதன், 24 ஏப்ரல், 2013

TURKEYBERRY THUVAIYAL.சுண்டைக்காய்த் துவையல்

TURKEYBERRY THUVAIYAL.சுண்டைக்காய்த் துவையல்.

TURKEYBERRY THUVAIYAL

NEEDED:-

TURKEYBERRY - 1/2 CUP
GREEN CHILLIES - 4 NOS
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO ( SMALL)
GRATED COCONUT - 1 TBLSPN
ASAFOETIDA - 1 PEPPER SIZE
SALT - 1/2 TSP
TAMARIND - 3 PODS.
OIL - 2 TSP
MUSTARD - 1/2 TSP
ORID DHAL - 2 TSP

METHOD:-

WASH AND CUT THE TURKEYBERRIES INTO TWO AND IMMERSE THEM IN WATER. PEEL AND CHOP THE CHILLIES, ONION AND TOMATO. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL AND ASAFOETIDA. WHEN IT BECOMES BROWN ADD GREEN CHILLIES, AND HALVED TURKEYBERRIES. SAUTE FOR 2 MINUTES AND ADD ONION & TOMATO. SAUTE FOR A MINUTE THEN ADD SALT, TAMARIND AND GRATED COCONUT. STIRR WELL AND REMOVE FROM FIRE. AFTER COOLING GRIND COARSLY AND SERVE IT WITH IDDLIS OR WITH PLAIN RICE AND GHEE.

சுண்டைக்காய்த் துவையல்:-

தேவையானவை:-

சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 ( சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 3 சுளை
பெருங்காயம் - 1 மிளகு அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை:-

சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து, பெருங்காயம் போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும் வெங்காயம், தக்காளியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். உப்பு, புளி, தேங்காய் சேர்த்து இன்னும் நன்கு வதக்கி ஆறவைத்து அரைக்கவும். இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்  அல்லது நெய் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

5 கருத்துகள்:

  1. நன்றி லெக்ஷ்மி

    நன்றி தனபால்..ஆம்

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு