வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

CHICKEN ONION GRAVY. சிக்கன் வெங்காய க்ரேவி.

CHICKEN ONION GRAVY. சிக்கன் ஆனியன் க்ரேவி.

CHICKEN ONION GRAVY:-
NEEDED:-
BONELESS CHICKEN - 250 GMS.
CURD - 1 CUP
GINGER GARLIC PASTE - 2 TSP
JEERA PEPPER POWDER - 2 TSP
CORN FLOUR - 1 TBLSPN
EGG- 1 NO
SALT - 1/2 TSP
OIL  FOR FRYING

FOR GRAVY:-
ONION - 4 NOS
CHILLI POWDER - 1 TBLSPN
DHANIYA POWDER - 1 TBLSPN
GARAM MASALA POWDER - 1 TSP
TOMATO PUREE - 1 TBLSPN
SOYA SAUCE - 1 TSP
CORN FLOUR - 1 TSP
SALT - 1 TSP
OIL  - 2 TBLSPN

METHOD:-
WASH THE CHICKEN WITH CURD . ADD GINGERGARLIC PASTE,  JEERA PEPPER POWDER, SALT, EGG AND CORN FLOUR.. MIX WELL & MARINATE FOR 2 HOURS. THEN FRY IT IN OIL AND KEEP ASIDE.

FOR GRAVY :-
HEAT 2 TBL SPN OIL IN A PAN. ADD CHOPPED ONION AND SAUTE WELL. ADD CHILLI POWDER, DHANIYA POWDER, GARAM MASALA POWDER, SALT, AND TOMATO PUREE , STIRR FOR 1 MINUTE. ADD SOYA SAUCE AND CORN FLOUR. ADD 2 CUPS OF WATER AND BRING TO BOIL.  ADD THE  FRIED CHICKEN AND KEEP THE STOVE IN SIM. COOK FOR 10 MINUTES AND SERVE HOT WITH SOME SAUTED ONION. 

சிக்கன் ஆனியன் க்ரேவி:-
தேவையானவை:-
எலும்பு நீக்கிய சிக்கன் - 250 கி
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகு சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

க்ரேவிக்காக :-
பெரிய வெங்காயம் - 4
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ் பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 செய்முறை:_
சிக்கனைத் தயிரில் போட்டு கழுவவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகு சீரகப் பொடி, சோளமாவு, உப்பு, முட்டை போட்டுப் பிசைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் எண்ணெயில் பொறித்து வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா பொடி, தக்காளி பேஸ்ட், போட்டு 1 நிமிடம் வதக்கவும். சோயா சாஸ், உப்பு சேர்த்து கார்ன் ஃப்ளோரை 2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கொதித்தபின் பொறித்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வேகவைத்து வதக்கிய வெங்காயத்தை மேலே தூவிப் பரிமாறவும். 

CHICKEN SOUP. சிக்கன் சூப்.

CHICKEN SOUP. சிக்கன் சூப்.

NEEDED:-
CHICKEN STOCK WITH SOME CHICKEN PIECES. - 3 CUP
TO GRIND:-
SMALL ONION - 10 NOS
JEERA - 1 TSP
POPPY SEEDS - 1 TSP
SALT - 1/2 TSP.
PEPPER POWDER - 1/4 TSP,

METHOD :-
GROUND SMALL ONION, JEERA, AND POPPY SEEDS WITH LITTLE WATER INTO A PASTE. ADD THIS THO THE BOILING CHICKEN STOCK AND ADD SALT.  COOK FOR 2 MINUTES AND REMOVE FROM FIRE. SPRAY PEPPER POWDER AND SERVE HOT WITH PAPADS.

சிக்கன் சூப்:-

தேவையானவை:-
சிக்கன் ஸ்டாக் ( சிக்கன் வேக வைத்த தண்ணீர்) + வெந்த சிக்கன் துண்டுகளோடு - 3 கப்
அரைக்க:-
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகுப் பொடி -  1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
சின்னவெங்காயம், சீரகம், கசகசாவை லேசாக தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். இதை கொதிக்கும் சிக்கன் ஸ்டாக்கில் ஊற்றி உப்பைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கி மிளகுத்தூளைத் தூவி பப்படம், சிப்ஸுடன் பரிமாறவும்.

CHICKEN BIRIYANI. சிக்கன் பிரியாணி

CHICKEN BIRIYANI. சிக்கன் பிரியாணி

CHICKEN BIRIYANI :-
NEEDED:-
CHICKEN - 1/2 KG
BASMATI RICE - 3 CUPS.
BIG ONION - 4 NOS.
GINGER GARLIC PASTE - 2 TBLSPN
TOMATO - 2 NOS.
GREEN CHILLIES - 3 NOS
RED CHILLI POWDER - 2 TSP
DHANIYA POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
MINT AND CORIANDER LEAVES -    3 TBLSPN CHOPPED.
LEMON JUICE - 1/2 TBLSPN
CURD - 1/2 CUP
SALT - 2 TSP.
OIL - 4 TBLSPN
BAY LEAVES - 1
CINNAMON - 4 INCH
CLOVES - 4 NOS
CARDAMOM - 4 NOS
KALPASIPPOO - SMALL

METHOD :-
WASH AND DRAIN THE CHICKEN. WASH AND FRY THE BASMATI RICE AND KEEP ASIDE. HEAT OIL IN THE PRESSURE COOKER. ADD BAY LEAF, CINNAMON, CARDAMOM, CLOVES, KALPASIPPOO . ADD THE FINELY CHOPPED ONION AND SAUTE WELL. TO THAT ADD THE GINGER GARLIC PASTE. SAUTE TILL OIL SEPERATES. ADD THE CHICKEN AND SAUTE FOR SOMETIME. WITH THAT ADD HALF CHOPPED TOMATO, CURD, GREEN CHILLIES, RED CHILLI POWDER, DHANIYA POWDER AND TUMERIC POWDER,  ADD  HALF MINT AND CORIANDER LEAVES. POUR HALF TUMBLER WATER AND PRESSURE COOK FOR 2 WHISTLES.

AFTER COOLING OPEN THE LID ADD THE BASMATI RICE, REST TOMATOS,  MINT, CORIANDER LEAVES . ADD SALT AND 5 CUPS OF WATER ( ALREADY THERE IS ONE CUP OF WATER WITH CURD ) . STIRR WELL. AND KEEP FOR ONE WHISTLE. REMOVE FROM FIRE . AND ADD THE LEMON JUICE. STIRR AND SERVE HOT. WITH POTATO CHIPS, AUBERGINE GRAVY AND ONION RAITHA. AND BOILED EGG.

சிக்கன் பிரியாணி.
தேவையானவை.:_
சிக்கன் - 1/2 கி
பாஸ்மதி அரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புதினா, கொத்துமல்லி - 3 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது.
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை இலை - 1
பட்டை - 4 இஞ்ச்
கிராம்பு  - 4
ஏலக்காய் - 4
கல்பாசிப்பூ - சிறிது.

செய்முறை:-
சிக்கனைக் கழுவி தண்ணீரை வடித்துப் பிழிந்து வைக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து வறுத்து வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ போடவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு தண்ணீராக வதக்கவும்.  அதில் இஞ்சி பூண்டு விழுதைப்  போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி சிக்கனைச் சேர்க்கவும். அதில் பாதி பொடியாக அரிந்த தக்காளி,தயிர், பச்சை மிளகாய், வரமிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் பொடி போட்டு, பாதி புதினா, கொத்துமல்லித்தழைகளைப் போட்டு வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றி  3 விசில் வரும்வரை ப்ரஷர் குக்கரில் வைக்கவும்.

ஆறியதும் திறந்து பாசுமதி அரிசி, மிச்ச  தக்காளி, புதினா, கொத்துமல்லித்தழைகளை போட்டு 5 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கிளறவும். ( ஏற்கனவே ஒரு கப் தண்ணீரும் தயிரும் இருப்பதால் 5 கப் போதும் . ). ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கிளறி சுடச் சுட உருளை சிப்ஸ், அவித்த முட்டை, கத்திரிக்காய் க்ரேவி, வெங்காயத் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

EGG KUZAMBU .முட்டைக் குழம்பு.

EGG KUZAMBU முட்டைக் குழம்பு.

EGG KUZAMBU :-


BOILED EGG - 4 NOS,
NEEDED :-
SMALL ONION - 10 NOS.
GARLIC - 8 NOS.
TOMATO - 1  NO.  LARGE,
RED CHILLI POWDER - 1 TBLSPN,
DHANIYA POWDER - 3 TBLSPN,
TUMERIC POWDER - 1 PINCH,
TAMARIND - 1 AMLA SIZE BALL,
SALT - 2 TSP.
OIL -  1 TBLSPN,
MUSTARD - 1 TSP,
ORID DHAL - 1 TSP ,
FENUGREEK - 1 /2 TSP,
CURRY LEAVES - 1 ARK.

METHOD:-

SOAK TAMARIND AND SALT IN 3 CUPS OF WATER. PEEL AND HALVE THE ONION AND GARLIC. CHOP TOMATO. HEAT OIL IN A PAN. ADD MUSTARD, ORID DHAL, FENUGREEK. WHEN MUSTARD SPLUTTERS AND ORID DHAL BECOMES BROWN ADD CURRY LEAVES, SMALL ONION, GARLIC, TOMATO. SAUTE WELL. SQUEEZE THE TAMARIND PULP. ADD CHILLI POWDER, DHANIYA POWDER , TURMERIC POWDER AND MIX WELL AND POUR THIS TO THE CONTENT IN THE TAWA.  BRING TO BOIL . PEEL AND SLIT OPEN THE EGGS ON BOTH SIDES AND ADD IT TO THE BOILING MIXTURE. WHEN OIL SEPERATES AT SIDES REMOVE FROM FIRE AND SERVE HOT WITH PLAIN RICE.

FOR ADDITIONAL GRAVY ADD 1 TBL SPN  COCONUT, BADAM GROUND PASTE.

முட்டைக் குழம்பு :-

தேவையானவை :-
அவித்த முட்டை - 4,
சின்ன வெங்காயம், 10,
பூண்டு - 8,
தக்காளி - 1 பெரிது,
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
தனியாத்தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
புளி - 1 நெல்லிக்காய் அளவு,
உப்பு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-

புளியையும் உப்பையும் 3 கப் தண்ணீரில்  ஊறவைக்கவும். வெங்காயம் பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெந்தயம் போட்டு கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். புளியைத் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டி அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். இதை கரைத்து வதக்கிய காயின் மேல் ஊற்றவும்.  கொதிக்க விடவும். முட்டையைத் தோலுரித்து இரண்டாக வகிர்ந்து அதில் போடவும். பக்கங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

குழம்பு அதிகம் வேண்டுமென்றால்  1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாதாம் அரைத்த கலவையை ஊற்றி இறக்கவும்.

CHETTINADU CHICKEN GRAVY. செட்டிநாடு சிக்கன் கிரேவி.

CHETTINADU CHICKEN GRAVY. செட்டிநாடு சிக்கன் கிரேவி.

CHETTINADU CHICKEN GRAVY:-

NEEDED :-

CHICKEN - 350 GMS
SMALL ONION - 15 NOS.
GARLICS - 10 PODS.
TOMATO - 2 NOS
{RED CHILLI POWDER - 1 TBLSPN
DHANIYA POWDER - 3 TBLSPN}  OR
FOR MASALA:-
(RED CHILLIES - 10 NOS
DHANIYA - 3 TBLSPN
JEERA - 1 TSP
SOMPH - 1 TSP
PEPPER - 1 TSP
FRY THEM WITHOUT OIL )
WITH THIS ADD TUMERIC POWDER  4 SMALL ONIONS AND 2 PODS OF GARLIC AND GROUND WELL. 
OIL - 3 TBLSPN
SALT - 2 TSP
BAY LEAF - 2 INCH
CINNAMON - 2 INCH
CLOVES - 2 NOS
CARDAMOM - 2 NOS
CURRY LEAVES - 1 ARK.

METHOD :-  .

WASH AND PRESSURE COOK THE CHICKEN FOR 2 WHISTLES.  GROUND THE MASALA WELL. HEAT OIL IN A PAN ADD BAY LEAF, CINNAMON, CARDAMOM, CLOVES , HALVED SMALL ONIONS AND GARLIC. CHOP THE TOMATO AND ADD IT . SAUTE WELL. ADD THE GROUND MASALA AND STIRR THE OIL SEPERATES AT THE SIDES. ADD CHICKEN AND SALT and 3 CUPS OF WATER AND COOK FOR 10 MINUTES.
FOR ADDITIONAL GRAVEY GROUND 2 TBLSPN OF GRATED COCONUT WITH 6 ALMONDS. IT WILL GIVE RICH LOOK AND TASTE. COOK TILL IOL SEPERATES AT THE SIDES. REMOVE FROM FIRE AND SERVE HOT WITH IDLI, DOSAS AND CHAPPATHI AND GULCHAS. AND PLAIN RICES.

 செட்டுநாடு சிக்கன் கிரேவி:-

தேவையானவை :-

சிக்கன் - 350 கி.
சின்ன வெங்காயம் - 15,
வெள்ளைப் பூண்டு - 10 பல்,
தக்காளி 2 ,
(சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
மல்லிப் பொடி - 3 டேபிள் ஸ்பூன்).அல்லது
மசாலாவுக்கு :-
சிவப்பு மிளகாய்  - 10,
மல்லி - 3 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன், )
இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். இதில் மஞ்சள் தூள், 4 சின்ன வெங்காயம்,  2 பூண்டுப் பல் போட்டு மைய அரைக்கவும்.
எண்ணெய் - 3
உப்பு - 2 டீஸ்பூன்,
பட்டை இலை - 2 இன்ச்,
பட்டை - 2 இன்ச்,
கிராம்பு  - 2,
 ஏலக்காய் - 2.
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-

கோழியைக் கழுவி ப்ரஷர் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிடவும். மசாலாவை மைய அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டைப் போட்டு  வதக்கவும். தக்காளியைப் பொடியாக அரிந்து போட்டு வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப்போட்டு வதக்கி எண்ணெய் பிரிந்ததும், வேக வைத்த சிக்கன், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

மேலும் சுவை கூட்ட மற்றும் அதிக கிரேவிக்கு 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை 6 பாதாம் பருப்புடன் அரைத்துச் சேர்க்கவும். பக்கங்களில் எண்ணெய் பிரியும் வரை  வைக்கவும். சூடாக இட்லி, தோசை, சப்பாத்தி, குல்சா, சாதத்தோடு பரிமாறவும்.

CHICKEN KHEEMA MASAL. சிக்கன் கீமா மசால்

CHICKEN KHEEMA  MASAL. சிக்கன் கீமா மசால்

NEEDED :-

CHICKEN - 350 GMS.
ONION - 4 NOS.
RED CHILLI POWDER - 3 TSP
GINGER GARLIC PASTE - 1 TSP
CORN FLOUR - 1 TBLSPN
EGG - 1 NO.
SALT - 1 TSP
OIL - FOR FRYING.

METHOD :-

WASH AND PRESSURE COOK CHIKEN FOR ONE WHISTLE.  AFTER COOLING REMOVE BONE AND SKIN. AND KEEP THE STOCK FOR SOUP . SHRED IT . ADD GINGER GARLIC PASTE, RED CHILLI POWDER, SALT, CORNFLOUR AND EGG. HEAT OIL IN A PAN AND FRY THE SHREDDED CHICKEN.

HEAT 1 TBLSPOON OIN IN A SEPERATE PAN . ADD CHOPPED ONIONS AND FRY WELL. ADD A PINCH OF SALT AND CHILLI POWDER . ADD THE FRIED CHICKEN AND STIRR WELL. REMOVE FROM FIRE AND SERVE HOT WITH CHAPPATI, ROTI OR RICES.

சிக்கன் கீமா மசால்

தேவையானவை:-

சிக்கன் - 350 கி
பெரிய வெங்காயம் - 4
சிவப்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு மசாலா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
சிக்கனை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் அளவு வேக விடவும். ஆறியதும் எலும்பு தோல் நீக்கி சதையை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சதையுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய்த்தூள், சோள மாவு, முட்டை சேர்த்து உதிரியாகப் பிசைந்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

இன்னொரு பானில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 4 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் பொன்னிறமாக வதக்கவும். ஒரு சிட்டிகை உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து அதில் சிக்கனையும் சேர்த்து வதக்கி சூடாக சப்பாத்தி, ரொட்டி, கலவை சாதங்களுடன் பரிமாறவும்.