திங்கள், 5 மே, 2014

MARAKKARIKKAAY DOSAI. மரக்கறிக்காய் தோசை -- குங்குமம் தோழியில்.

MARAKKARIKKAAY DOSAI :-

NEEDED:-
RAW RICE - 1/4 CUP
BOILED RICE - 1/4 CUP
ORID DHAL - 1/4 CUP
MOONG DHAL - 14 CUP
THOOR DHAL - 1/2 CUP
CHANNA DHAL - 1/2 CUP
RED CHILLIES - 4 NOS
SOMPH - 1 TSP
JEERA - 1/4 TSP
PEPPER - 1/4 TSP
SALT - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
SMALL ONION - 1 CUP CHOPPED FINELY
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOAK THE RICE AND PULSES  SEPERATELY. GROUND COARSLY THE RICE AND DHALS WITH RED CHILLIES, SOMPH, JEERA, PEPPER, SALT. ADD TURMERIC POWDER. FRY CHOPPED SMALL ONION IN LITTLE OIL.ADD IT TO THE BATTER. MIX WELL AND PREPARE SMALL OOTHAPPAM SIZE DOSAS. HEAT OIL IN A SEPERATE PAN AND THEN FRY THEM & SERVE HOT WITH MILAGAI CHUTNEY.

மரக்கறிக்காய் தோசை :-

தேவையானவை :-

பச்சரிசி - 1/4 கப்
புழுங்கரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
சம்பா மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
சின்னவெங்காயம் - 1 கப் பொடியாக அரிந்தது.
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு.
செய்முறை:-
அரிசி வகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊறவைக்கவும். மிளகாய் சோம்பு சீரகம் மிளகைப் பொடித்து ஊறவைத்தவைகளைச் சேர்த்து உப்புப் போட்டுக் கரகரப்பாக அரைக்கவும். மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி மாவில் சேர்த்து குட்டி குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து மரக்கறிக்காய் தோசைகளைப் பொறித்தெடுத்துப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக