செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

VEG PIRATTAL.. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்....குங்குமம் தோழியில்.

VEG PIRATTAL.. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்....

 VEG PIRATTAL :-
NEEDED :-
CARROT - 2 NOS
BEANS - 15 NOS
POTATO - 2 NOS
(CAULIFLOWER - 6 PIECES ..)
(GREEN PEAS - 1/2 CUP)
(PANEER., BABYCORN., BUTTERBEANS., CAPSICUM., SOYA CHUNGS OPTIONAL).
BIG ONION - 1 NOS
TOMATO - 1 NO
GARLIC - 4 PODS.
SALT - 1/2 TSP

TO GRIND :-
RED CHILLIES - 4 NOS
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
COCONUT - 2 INCH PIECE
FRIED CHANNA DHAL - 1 TSP
SMALL ONION - 2 NO
GARLIC - 1 NO

FOR FRYING :-
URAD DHAL - 1/2 TSP
SOMPH - 1/4 TSP
KALPASIP PUU - 1 INCH PIECE
CINNAMON - 1 INCH PIECE.
CURRY LEAVES - 1 ARK.
OIL - 1 TBLSPN

METHOD :-
WASH PEEL AND DICE ALL THE VEGETABLES AND PARABOIL THEM. CHOP ONION AND TAMATO. GROUND THE MASALA WELL. HEAT OIL ADD URAD DHAL, SOMPH., KALPASIPPUU., CINNAMON AND CURRY LEAVES. ADD ONION., TOMATO ., GARLIC AND SAUTE WELL. ADD THE GROUND MASALA AND SAUTE TILL OIL SEPERATES AT THE SIEDS. ADD SALT AND THE PARABOILED VEGETABLES AND STIRR WELL.. COOK FOR 10 MINUTES IN SIM AND SERVE IT WITH SAMBAR RICE., CURD RICE ., CHAPPATHIS AND PHULKAS.

THIS ENGLISH VEG PIRATTAL IS CHETTINAD SPECIAL ONE..

இங்கிலீஷ் காய்கறி பிரட்டல் :-
தேவையானவை :-
காரட் - 2
பீன்ஸ் - 15
உருளைக்கிழங்கு - 2
(காலிஃப்ளவர் - 6 துண்டு)
(பட்டாணி - 1/2 கப்)
(பனீர்., பேபிகார்ன்., பட்டர் பீன்ஸ்., குடைமிளகாய்., சோயா( மீல்மேக்கர்) விரும்பினால்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வெள்ளைப் பூண்டு - 4 பல்
உப்பு - 1/2 டீஸ்பூன்

அரைக்க :-
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 இஞ்ச் துண்டு
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

தாளிக்க :-
உளுந்து - 1/ டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டு
பட்டை - 1 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு.
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :-
காய்கறிகளை கழுவி தோல் சீவி சதுரங்களாக வெட்டி அரை வேக்காடாய் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம்., தக்காளி பூண்டை உரித்து நறுக்கிக் கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சோம்பு., பட்டை., கல்பாசிப்பூ தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு வதக்கவும். மசாலாவைப் போட்டு பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு போடவும். வெந்த காய்களைப் போட்டு மசாலா சேரும்வரை கலக்கவும் . 10 நிமிடங்கள் சிம்மில் வேகவைத்து இறக்கவும். சாம்பார் சாதம்., தயிர் சாதம்., சப்பாத்தி., புல்காவுடன் பரிமாறவும்.

இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக