1. சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்.
2. காப்பரிசி
3. வெள்ளை ரவை அடை
4. தினையரிசிக் கொழுக்கட்டை
5. மினி சீடைக்காய்
6. பழாப்பழ அடை.
7. கோதுமை சேமியா வெஜ் உப்புமா
8. தக்காளி ஊத்தப்பம்
9. ப்ரெட் பனீர் பகோடா
10 மனகோலம்.
தேவையானவை :-
பச்சரிசி
- 2 கப், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், நெய் - ஒரு
கப், பச்சைக்கற்பூரம்- ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, கிஸ்மிஸ்
,முந்திரி - தலா 10.
செய்முறை:-
பச்சரிசியையும்
பாசிப்பருப்பையும் லேசாக வறுத்து அதன் பின் களைந்து குக்கரில் 4 கப்
தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரைத்
திறந்தவுடன் கரண்டியால் நன்கு குழைத்தபடி சர்க்கரையைச் சேர்க்கவும்.
சர்க்கரை நன்கு சேர்ந்தவுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். இதில்
பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்கவும். முந்திரி கிஸ்மிஸை நெய்யில்
பொரித்துச் சேர்க்கவும்.
2. காப்பரிசி :-
தேவையானவை :-
பச்சரிசி
- 2 கப், வெல்லம் - 2 கப், நிலக்கடலை, பொட்டுக்கடலை - தலா 2 டேபிள்
ஸ்பூன், எள் - ஒரு டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் - 1
டேபிள் ஸ்பூன்,நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை. :-
அரிசியைக்
களைந்து காயவைக்கவும். நெய்யில் எள், கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை,
பொட்டுக்கடலையைப் போட்டுப் புரட்டவும்.வெல்லத்தைப் பாகாக வைத்து உலர்ந்த
அரிசியை போட்டுக் கிளறவும். மிச்ச நெய்யை ஊற்றி ஏலத்தூள், நிலக்கடலை,
பொட்டுக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் போட்டுப் புரட்டிப்
பொரிந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.