எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஜூன், 2016

ஆனித்திருமஞ்சன ரெசிப்பீஸ். AANITHTHIRUMANJANA RECIPES.


1. சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்.
2. காப்பரிசி
3. வெள்ளை ரவை அடை
4. தினையரிசிக் கொழுக்கட்டை
5. மினி சீடைக்காய்
6. பழாப்பழ அடை.
7. கோதுமை சேமியா வெஜ் உப்புமா
8. தக்காளி ஊத்தப்பம்
9. ப்ரெட் பனீர் பகோடா
10 மனகோலம்.



1.சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை :-
பச்சரிசி - 2 கப், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், நெய் - ஒரு கப், பச்சைக்கற்பூரம்- ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, கிஸ்மிஸ் ,முந்திரி - தலா 10.
செய்முறை:-
பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்து அதன் பின் களைந்து குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரைத் திறந்தவுடன் கரண்டியால் நன்கு குழைத்தபடி சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்கு சேர்ந்தவுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். இதில் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்கவும். முந்திரி கிஸ்மிஸை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

2. காப்பரிசி :-
தேவையானவை :-
பச்சரிசி - 2 கப், வெல்லம் - 2 கப், நிலக்கடலை, பொட்டுக்கடலை - தலா 2 டேபிள் ஸ்பூன், எள் - ஒரு டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்,நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை. :-
அரிசியைக் களைந்து காயவைக்கவும். நெய்யில் எள், கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை, பொட்டுக்கடலையைப் போட்டுப் புரட்டவும்.வெல்லத்தைப் பாகாக வைத்து உலர்ந்த அரிசியை போட்டுக் கிளறவும். மிச்ச நெய்யை ஊற்றி ஏலத்தூள், நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் போட்டுப் புரட்டிப் பொரிந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.

3. வெள்ளை ரவை அடை:-

செவ்வாய், 14 ஜூன், 2016

குழந்தைகள் ஸ்பெஷல் உணவு. KIDS SPECIAL RECIPES.

குழந்தைகள் ஸ்பெஷல் உணவு. :-

1.நூல் புட்டு
2.முளைவிட்ட கடலக்கறி.
3.பாபுட்டு
4.கலவைக் கூட்டு.
5.அரிசி ரொட்டி
6.ராஜ்மா
7.சிவப்புக் கொழுக்கட்டை
8.மல்லிக் கொழுக்கட்டை
9.இஞ்சிக் கொழுக்கட்டை
10.கதம்ப துவையல்
11.ரோஸ் மட்டையரிசிப் பாயாசம்.

திங்கள், 13 ஜூன், 2016

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ். HEALTHY FOOD RECIPES.

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ் :-
1.சாமை தயிர்சாதம்
2.
வெந்தய வரதோசை.
3.
பிரண்டைத் துவையல்.
4.
கருவேப்பிலை சட்னி
5.
வாழைப்பூ துவரன்.
6.பாகற்காய் பக்கோடா

7.காரட், தக்காளி சூப்.
8.பொன்னாங்கண்ணிக் கீரை மண்டி.
9.நெல்லிக்காய் ஊறுகாய்.
10.கருப்பட்டிப் பாயாசம்.

ஆயுள் ஆரோக்கிய ரெசிப்பீஸ் :-

1.சாமை தயிர்சாதம்:-
தேவையானவை :-சாமை 1 கப், பால்ஒரு கப், தயிர்அரை கப், கொத்துமல்லித்தழைசிறிது, மாதுளை முத்துக்கள்ஒரு கைப்பிடி, காரட் துருவியது – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சிஒரு இஞ்ச் துருவியது. பச்சைமிளகாய்பாதி பொடியாக அரிந்தது., கிஸ்மிஸ் – 20, உப்புகால் டீஸ்பூன்.  

செய்முறை :- சாமையைக் கழுவி மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் மூன்று விசில் வைத்து நன்கு வேகவிடவும். வெந்ததும் இறக்கி உப்பு சேர்த்து பாலை ஊற்றி நன்கு மசித்து ஆறவிடவும். ஆறியதும் மாதுளை முத்துக்கள், கொத்துமல்லித்தழை, காரட் , இஞ்சி, பச்சைமிளகாய், கிஸ்மிஸ் சேர்த்து தயிரையும் சேர்த்து நன்கு கலந்து நிவேதிக்கவும். இது உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.

வெள்ளி, 3 ஜூன், 2016

ப்ராகோலி சாப்பீஸ் :- கோகுலம், GOKULAM KIDS RECIPES.

ப்ராகோலி சாப்பீஸ் :-

தேவையானவை :-
ப்ராக்கோலி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன், மைதாமாவு , கடலை மாவு, சோளமாவு – தலா ஒரு டேபிள் ஸ்பூன்., உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

ப்ராக்கோலியைப் பூக்களாகப் பிரித்து உப்பு கலந்து வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு பிசறி லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு பானில் போட்டு மூடி வைத்து சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். தண்டுப் பாகம் ஓரளவு வெந்திருந்தால் எடுத்துவிடலாம். இல்லாவிட்டால் இன்னும் சிறிது நீர் தெளித்து தண்டுப்பாகம் அடிப்பக்கம் இருக்குமாறு வேகவிடவும்.

மைதாமாவு, கடலை மாவு, சோளமாவை உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்துக் கரைத்து வைக்கவும். இதில் வேகவைத்த ப்ராக்கோலிப் பூக்களை நனைத்தெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ப்ராகோலீஸ் சாப்பீஸை சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும். 

ப்ராக்கோலியில் உள்ள ஃபோலிக் அமிலம் பார்வைத் திறனை அதிகரிக்கும். காய்கறி வகை என்பதால் வயிறை நிரப்பும் என்பதோடு எடையும் கூடாது. நார்ச்சத்து நிரம்பியது. எளிதில் ஜீரணமாகும்.

100 கிராம் ப்ராகோலியில் தினப்படித் தேவையான அளவு விட்டமின் கே யும் விட்டமின் சி யும் விட்டமின் பி யும் மாங்கனீசும் கிடைக்கிறது.இதில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்து குறைவான அளவில் உள்ளது.

இதில் உள்ள சல்ஃபோ ப்ரொஃபைன் பொரித்தாலோ அவித்தாலோ வறுத்தாலோ மைக்ரோ வேவ் அடுப்பில் சமைத்தாலோ குறைவதில்லை. இதில் லூட்டீன் மற்றும் சியாக்ஸதீன் ஆகிய கார்டினாய்டுகள் உள்ளன. இவை குடலில் உருவாகும் பலவித புற்றுநோய்களையும் தடுக்கின்றன..

கார்ட்டினாய்டு ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படுவதால் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உருவாக்குது. ப்ராக்கோலியைக் குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வருவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

டிஸ்கி:- கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்பைப் பாராட்டிய நெய்வேலி வாசகி  எஸ். கே. ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள். :) 

வியாழன், 2 ஜூன், 2016

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப். - கோகுலம் GOKULAM KIDS RECIPES.

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா ிர் சூப்:-

தேவையானவை:-
(ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி. அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

செய்முறை:-
பெரிய வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு  நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும் வெங்காயமும் தக்காளியும் கரைந்து வரும்வரை இன்னும் அரை கப் தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரை கப் சூப்பில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

ரொம்ப எனர்ஜி தரும் வாசனையான சூப் இது. அசதி போக்கும். தூக்கம் போக்கி சுறுசுறுப்பை அளிக்கும். பசியைத் தூண்டும். வயிறு மந்தம், கண் பார்வை குறைபாடு ஆகியன போக்கும். கொழுப்புச் சத்தைக் கரைக்கும். சூப்பாக வேகவைத்துக் குடிப்பதால் கீரைகளின் உடனடிப் பயன் அப்படியே சிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச்சத்து அடங்கி உள்ளதால் தாகவிடாயைத் தீர்க்கும்.

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.அனீமியாவைப் போக்குகிறது. இதயம், ஈரல், செரிமானம், முடி வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவுகின்றது. பரிட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான எனர்ஜி சூப் என்றும் சொல்லலாம்.

கருவேப்பிலையில் விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம் தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும் , மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், க்ளோரின், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.

சிலண்ட்ரோ, சைனீஸ் பார்ஸ்லி என்றழைக்கப்படும் கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா - 6 ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.

விட்டமின் ஏ ,சி, ஃபோலேட், கால்சியம் பொட்டாசியம் மக்னீசியம்  அதிக அளவிலும் ஒமேகா 3 , 6 ஃபாட்டி ஆசிட்டுகள் சிறிய அளவிலும் காணப்படுகின்றன. 

உடல் எடையைக் குறைப்பதோடு தேவையான ஊக்கச் சத்தையும் வழங்கும் இந்த சூப்பை பரிட்சை நாட்களில் அருந்திவந்தால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பும் படிப்பில் உற்சாகமும் ஏற்படும்.

ுழந்தைகே சூப்பைக் குடிங்க. சூப்பாப் பிங்க. !



டிஸ்கி :- பரிட்சை ஒண்ணும் பூதம் இல்லை என்ற கவிதைக்கு வாசகர் கடிதம். ! நன்றி தேஜஸ்வி & கோகுலம். :) 



Related Posts Plugin for WordPress, Blogger...