எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2025

அரிசிப் பாயாசம்

அரிசிப் பாயாசம்



தேவையானவை :- பச்சரிசி – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – 2 கப். ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 20, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை.:- பச்சரிசியை ஊறவைத்துத் தேங்காயோடு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் தேவையான தண்ணீர் ( 4 கப் ) சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாகப் பொரித்துப் போடவும். 

செவ்வாய், 28 ஜனவரி, 2025

ஆக்ரா ஸ்வீட்

ஆக்ரா ஸ்வீட்


தேவையானவை:- பூசணி – 2 கீற்று, சுண்ணாம்பு – ½ டீஸ்பூன், சீனி – 1 1/2 கப், ஏலக்காய் – 3, தாழம்பூ எசன்ஸ் – சில துளிகள், குங்குமப்பூ – 1சிட்டிகை.

 

செய்முறை:- பூசணியைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகளாக்கவும். 3 கப் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து அதில் பூசணித்துண்டுகளை 24 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் நன்கு அலசிக் கழுவி எடுத்து நீரில் 1 நிமிடம் வேகவைத்து வடித்து வைக்கவும். சீனியுடன் ஏலக்காய்த்தூள்,குங்குமப்பூ சேர்த்துக் கால் கப் நீரூற்றி அடுப்பில் வைக்கவும். சீனி கரைந்ததும் பூசணித்துண்டுகளைச் சேர்த்து நீர் வற்றியதும் இறக்கி தாழம்பூ எசன்ஸை ஸ்பிரே செய்து ஆறவிடவும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2025

இனிப்பு இடியாப்பம்

இனிப்பு இடியாப்பம்


தேவையானவை :- இடியாப்ப மாவு - 2 கப் ( அல்லது இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி இடித்து சலிக்கவும். இதை இடியாப்பம் செய்ய உபயோகிக்கவும்). கொதி நீர் - 2 கப், துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1/2 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 3 ( பொடித்தது)

செய்முறை :- இடியாப்பத்தில் கொதி நீரை ஊற்றி நன்கு பிசையவும். இடியாப்ப அச்சில் போட்டு இட்லி குக்கரில் வேக வைத்து உதிர்க்கவும். ஒரு பௌலில் போட்டு சர்க்கரை., துருவிய தேங்காய்., நெய்., ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

சனி, 18 ஜனவரி, 2025

கல்கண்டுப் பொங்கல்

கல்கண்டுப் பொங்கல்


தேவையானவை:- பச்சரிசி - 1 கப், கல்கண்டு பொடித்தது - 1 1/2 கப் அல்லது ஜீனி, பால் - 2 கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை, நெய்/டால்டா - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10

செய்முறை:- பச்சரியை ஒரு வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பை சேர்க்கவும் . நன்கு களைந்து பால் 2 கப் தண்ணீர் 2 கப் சேர்த்துக் குக்கரில் 2 விசில் வேகவிடவும். வெந்தவுடன் நன்கு குழைத்து மசிக்கவும். அதில் ஜீனி /கல்கண்டுப் பொடி சேர்த்து மசிக்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யில் முந்திரியை வறுத்து போடவும். சூடாக பரிமாறவும்

புதன், 15 ஜனவரி, 2025

தேங்காய்ப்பால் கஞ்சி

தேங்காய்ப்பால் கஞ்சி


தேவையானவை :- பச்சரிசி - 1 கப், தேங்காய்ப்பால் - திக் - 1 கப், தேங்காய்ப்பால் - தண்ணீர் கலந்தது - 2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 10 பல், உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி வெந்தயம், பூண்டைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிழிந்த தேங்காய்ப் பால் 2 கப் ஊற்றி 3 விசில் சத்தம் வரும்வரை வைக்கவும். பிரஷர் போனதும் திறந்து நன்கு மசித்து உப்பும் முதல் தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.

வெள்ளி, 10 ஜனவரி, 2025

பாலாடைப் பிரதமன்

பாலாடைப் பிரதமன்


தேவையானவை:- ரெடிமேட் அடை – ஒரு பாக்கெட், பால் – 1 லி, மில்க் மெய்ட் – 200 கி, சீனி – 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை, குங்குமப்பூ – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 15, திராக்ஷை- 15.

செய்முறை:- அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவிப் பின்பு வேகவைக்கவும். பாலைக் காய்ச்சி அதில் அடையை சேர்த்து வற்றவிடவும். சுண்டி வரும்போது மில்க மெயிடையும் சீனியையும் சேர்க்கவும். இறக்கி ஏலப்பொடி, குங்குமப்பூ ( சூடான பாலில் கரைத்து ஊற்றவும். ) போட்டு நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி


தேவையானவை:- தேங்காய் – 1, ஜீனி – 1 கப், நெய் -1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.

 

செய்முறை:-. தேங்காயைத் தூளாகத் துருவி வைக்கவும். ஒரு ட்ரேயில் ஒரு டீஸ்பூன் நெய்யைத் தடவி வைக்கவும். அடி கனமான பானில்   தேங்காய்த்துருவலைப் போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். பச்சை வாசம் போனவுடன் ஜீனியைச் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். ஒரு சின்ன பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரியை வதக்கி சேர்க்கவும். நன்கு கிளறி பக்கங்களில் ஒட்டாமல் இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டுகள் போடவும். 

வெள்ளி, 3 ஜனவரி, 2025

அவல் உருண்டை

அவல் உருண்டை


தேவையானவை :- வெள்ளை அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், பொடித்த சீனி போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...