எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 அக்டோபர், 2025

ஹரி சன்னா க்ரேவி

ஹரி சன்னா க்ரேவி

தேவையானவை :- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, வெள்ளைப் பூண்டு - 4 பல், இஞ்சி – 2 இன்ச் துண்டு, தக்காளி 1 , சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்,சீரகப் பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச்,, கிராம்பு  - 1, ஏலக்காய் - 1., சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை உரித்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை மைய அரைக்கவும். வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டை வதக்கவும். அது சிவந்ததும் அரைத்த தக்காளி மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்ததும் பச்சைக் கொண்டைக் கடலை, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். இறக்கி பட்டுராவுடன் பரிமாறவும்.

சனி, 18 அக்டோபர், 2025

சுக்கா பிண்டி சப்ஜி

சுக்கா பிண்டி சப்ஜி


தேவையானவை :- சின்ன வெண்டைக்காய் - 250 கி, வர மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1சிட்டிகை, கரம் மசாலா – அரை டீஸ்பூன், ஆம்சூர் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன் ( 5 மிலி), சீரகம் – ½ டீஸ்பூன்

செய்முறை:- வெண்டைக்காய்களைக் கழுவித் துடைத்து நீளவாக்கில் கீறவும். மிளகாய்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா, ஆம்சூர், மல்லித்தூள் ஆகியவற்றைக் கலந்து கீறிய வெண்டைக்காயினுள் திணிக்கவும்.  ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போட்டுப் பொரிந்ததும் வெண்டைக்காய்களைப் போட்டு வதக்கவும். வெண்டைக்காய் பொன்னிறமானதும் இறக்கி சப்பாத்தி அல்லது தயிர்சாதத்துடன் பரிமாறவும்.

செவ்வாய், 14 அக்டோபர், 2025

.தக்காளி கிரேவி

.தக்காளி கிரேவி


தேவையானவை.:- தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 2, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்.

செய்முறை :- தக்காளி வெங்காயத்தைச் சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயை ஊற்றிக் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து போட்டு சிவந்ததும், அரைத்த கலவையை ஊற்றி உப்பு, மிளகாய்ப்பொடி போடவும்.இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். சூடாக சப்பாத்தி, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடியுடன் பரிமாறவும்.

வியாழன், 9 அக்டோபர், 2025

பைங்கன் பர்த்தா

பைங்கன் பர்த்தா


தேவையானவை:- பெரிய கத்திரிக்காய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலா – அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:- கத்திரிக்காயை அங்கங்கே கீறி அதில் பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சொருகி அடுப்பில் ஒரு ஸ்டாண்டில் வைத்து வாட்டவும். பக்கத்திலேயே பெரிய வெங்காயம், தக்காளியையும் வாட்டவும். ஆறியதும் அனைத்தையும் தோலுரித்து மசிக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போட்டுப் பொரிந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புப் போட்டு மசித்த கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறவும். நன்கு சேர்ந்து வெந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சப்பாத்தி ஃபுல்காவோடு பரிமாறவும்.


திங்கள், 6 அக்டோபர், 2025

க்ரேவி & சப்ஜி ரெஸிப்பீஸ்

க்ரேவி சப்ஜி ரெஸிப்பீஸ்





1.மஷ்ரூம் க்ரேவி

2.தக்காளி க்ரேவி

3.மட்டர் பனீர் க்ரேவி

4.ஹரி சன்னா க்ரேவி

5.ஆலுகோபி சுக்கா சப்ஜி

6.மூங்க்தால் சப்ஜி

7.அம்ருத் சப்ஜி

8.கருப்பு உளுந்து சப்ஜி

9.கடுகுக் கீரை சப்ஜி

10.உருளை எலுமிச்சை சப்ஜி சுக்கா

11.ஷாஹி பனீர்

12.பனீர் கேப்ஸிகம் சப்ஜி சுக்கா

13.லோபியா க்ரேவி

14.கருப்புக் கொண்டைக்கடலை மசாலா

15.ஆலு டமாட்டர்

16.ஆலு மேத்தி

17.குல்தி கி டால்

18.தால் ஃப்ரை

19.பாலக் பனீர்

20.மொச்சை சப்ஜி

21.ராஜ்மா

22.பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா

23.சுக்கா பிண்டி சப்ஜி

24.கரேலா சப்ஜி

25.பைங்கன் பர்த்தா

Related Posts Plugin for WordPress, Blogger...