எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

பழக் கொழுக்கட்டை

பழக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப்பழக்கலவை – பொடியாக நறுக்கிய ஆப்பிள்சிறுமலைப்பழம்பலாச்சுளை – ஒரு கப்கிஸ்மிஸ் – 30, பேரீச்சை – 6, தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்.உப்பு – 1 சிட்டிகைசர்க்கரை – ஒரு சிட்டிகைநெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் குத்திக் கிளறி ஈரத்துணியால் மூடிவைக்கவும்ஆறியதும் நன்கு பிசைந்து கொழுக்கட்டை செய்ய உபயோகிக்கவும்பழக்கலவையோடு பொடியாக அரிந்த பேரீச்சைகிஸ்மிஸ்தேன் கலந்து நன்கு கையால் மசித்து உருட்டி வைக்கவும்கொழுக்கட்டை மாவில் சொப்பு செய்து இந்த பழக்கலவையை ஃபில்லிங்காக நிரப்பிக் கொழுக்கட்டையை மூடி ஆவியில் பத்துநிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

புதன், 27 ஆகஸ்ட், 2025

அஞ்சுமாக் கொழுக்கட்டை

அஞ்சுமாக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – கால் கப்புழுங்கரிசி மாவு – கால் கப்,சிவப்பரிசி மாவு – கால் கப் , கவுனரிசி மாவு – கால் கப் , கோதுமை மாவு – கால் கப் , துருவிய தேங்காய் – அரை கப்வெல்லம்கருப்பட்டி – 150 கிராம்ஏலப்பொடி – 1 சிட்டிகைஉப்பு – 1 சிட்டிகைவெந்நீர் – ஒண்ணேகால் கப்வறுத்த எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் பானில் மணல்போல வறுத்து ஒரு பௌலில் கொட்டவும்வெல்லத்தையும் கருப்பட்டியையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு இளம்பாகு வைத்து கரைத்து வடிகட்டவும்தேங்காய்த் துருவல் உப்பு ஏலப்பொடி எள் போட்டு மாவில் நன்கு கலந்து வெல்லக்கருப்பட்டிப் பாகு ஊற்றி நன்கு கிளறவும்மாவை நன்கு பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

கேப்பை புட்டுக் கொழுக்கட்டை


கேப்பை புட்டுக் கொழுக்கட்டை

தேவையானவை :- கேப்பை – 2 கப்தேங்காய்த் துருவல் – அரை கப்தூள் வெல்லம் – அரை கப்ஏலப்பொடி – ஒரு சிட்டிகைஉப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :- கேழ்வரகைக் களைந்து நீரை வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளவும்இதில் வெந்நீர் ஊற்றி லேசாகப் பிடித்துப் பிடித்துக் கிளறி பிடி பதம் வந்ததும் திரும்ப ஈரத்தோடு சலித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்இதைத் திரும்ப உதிர்த்து சூட்டோடு வெல்லம்தேங்காய்த்துருவல்உப்புஏலப்பொடி சேர்த்துப் பிசறி கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்

ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்


தேவையானவை:- பச்சரிசி ரவை – 2 கப்வெல்லத்தூள் – 1 1/2 கப்பேரீச்சை – 2, கிஸ்மிஸ் – 10, டூட்டி ப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி – 6, பாதாம் – 4., நெய் – ¼ கப்தேங்காய் துருவல் – ஒரு மூடிஏலக்காய் – 3.

செய்முறை:-  கடாயில்  நெய்யை ஊற்றி பச்சரிசி ரவையை வாசம் வரும்வரை வறுத்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகப்போடவும்.  உப்புமா போல உதிர்த்து அதில் ஏலத்தைப் பொடித்துப் போட்டுத் தேங்காய்த் துருவலுடன் கலக்கி வைத்துக் கொள்ளவும்வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கவைத்து ரவையில் சேர்க்கவும்இறுகியதும் இறக்கி டூட்டி ப்ரூட்டிபொடியாக நறுக்கிய பேரீச்சைகிஸ்மிஸ்வறுத்து ஒடித்த பாதாம் முந்திரிகலந்துமாவை நன்கு பிசறி நெய் தொட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை

வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை


தேவையானவை :- வரகரசி – 1 கப் , கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும்தண்ணீர் – 3 கப். ( பச்சைமிளகாய் – 1, காரட் – 1 பொடியாக துருவவும்தேங்காய்த் துருவல் – அரை கப் ) உப்பு – அரை டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்இதில் வரகரிசியையும் போட்டு லேசாக வறுத்து உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும்குக்கரில் முக்கால் பதம் வெந்திருக்கும்இறக்கி அதில் பச்சை மிளகாய்தேங்காய்த் துருவல்காரட் துருவல் கலந்து நன்கு பிசைந்து பிடிகொழுக்கட்டைகளாக ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

பாசிப்பயறு கொழுக்கட்டை

பாசிப்பயறு கொழுக்கட்டை


தேவையானவை:- கொழுக்கட்டை மாவு – 1 கப்உடைத்த பாசிப்பயறு  – அரை கப்தேங்காய்த்துருவல் – கால் கப்உப்பு – கால் டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்கொழுந்து கருவேப்பிலை – சிறிதுவரமிளகாய் – 1. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பயறை வேகவிடவும் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி அதில் கொழுக்கட்டை மாவுஉப்புதேங்காய்த்துருவலைப் போடவும்நெய்யில் சீரகம்பொடிதாக உடைத்த வரமிளகாய்கொழுந்து கருவேப்பிலை தாளித்து மாவில் போட்டு நன்கு கலந்து வெந்நீர் தெளித்துப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாக ஆவியில் வேகவைக்கவும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

அவல் வெல்லக் கொழுக்கட்டை

அவல் வெல்லக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப்பேப்பர் அவல் – அரை கப் , துருவிய தேங்காய் – அரை கப்தூள் வெல்லம் – அரை கப்ஏலப்பொடி – ஒரு சிட்டிகைஉப்பு – 1 சிட்டிகைநல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்வெந்நீர் – ஒண்ணேகால் கப்.

செய்முறை:- அவலைப் பொடித்து துருவிய தேங்காய் வெல்லம் ஏலப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்கொதிக்கும் வெந்நீரில் உப்புநல்லெண்ணெய் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துக் கிண்ணம் போல் செய்து அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

கோதுமைக் கொழுக்கட்டை

கோதுமைக் கொழுக்கட்டை


தேவையானவை :- கோதுமை மாவு - 2 கப்தேங்காய்த் துருவல் - 1/2 கப்உப்பு - 1 டீஸ்பூன்., சீரகம் - 1 டீஸ்பூன்தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:- வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு நன்கு மணலாக ஆகும்வரை  வறுக்கவும்அதில் உப்புத் தண்ணீர் தெளித்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து , சீரகம் போட்டு லேசாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்இதைத் தேங்காய்த் துவையலோடு பரிமாறவும்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

சீரகக் கொழுக்கட்டை

சீரகக் கொழுக்கட்டை


தேவையானவை :- புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவுஇடியாப்ப மாவு - 1 கப்சீரகம் - 1 டீஸ்பூன்உப்பு - 1/3 டீஸ்பூன்வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்), துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்), வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை:- சீரகம்வெங்காயம்தேங்காய்உப்பை மாவில் போடவும்தேவையான தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப்  பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிண்டினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.) 10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...