எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2022

பாசிப்பருப்பு மசியல்:-

பாசிப்பருப்பு மசியல்:-


தேவையானவை:- பாசிப்பருப்பு – ஒரு கப், சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 2 பல், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – அரை டீஸ்பூன், தாளிக்க:- உளுந்து, சீரகம் தலா கால் டீஸ்பூன், வரமிளகாய் – 1.

செய்முறை:- பாசிப்பருப்பில் அரை கப் நீரூற்றி, சீரகம் மஞ்சள்தூள் சேர்த்துப் பூண்டைத் தட்டிப் போட்டு குக்கரில் ஒரு விசில் வேகவைத்து இறக்கவும். எண்ணெயில் உளுந்து சீரகம் கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துப் பருப்பில் கொட்டி உப்பு சேர்த்து மசிக்கவும். சாதத்தில் இந்த மசித்த பருப்பைப் போட்டு நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

 

வியாழன், 27 அக்டோபர், 2022

பொட்டுக்கடலை மாவுருண்டை:-

பொட்டுக்கடலை மாவுருண்டை:-


தேவையானவை:- பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும். நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும்.

 

புதன், 26 அக்டோபர், 2022

முந்திரி உருண்டை. :-

முந்திரி உருண்டை. :-


தேவையானவை:- முந்திரி – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலை மாவு – கால் கப், நெய் – கால் கப், சர்க்கரை – அரை கப்

செய்முறை:- முந்திரியை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும். நெய்யில் முதலில் கடலைமாவைப் போட்டு நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை மிதமான தீயில் வறுக்கவும். அதில் பொடித்த முந்திரி, பயத்த மாவு, சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலக்கி சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.

 

திங்கள், 24 அக்டோபர், 2022

கடலைப்பருப்பு கூட்டு:-

கடலைப்பருப்பு கூட்டு:-


தேவையானவை;- கடலைப்பருப்பு – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தேங்காய்த்துருவல் -1 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கடலைப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். அரைக் கப் நீரூற்றி குக்கரில் ஒரு விசில் வேகப்போடவும். வெந்ததும் திறந்து பொடியாக அரிந்த வெங்காயம், சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் உப்பு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை பெருங்காயப்பொடி தாளித்துக் கொட்டித் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

 

வியாழன், 20 அக்டோபர், 2022

உக்காரை:-

உக்காரை:-


தேவையானவை:-,பாசிப் பரு‌ப்பு - 1 க‌ப், சீனி  - 1 க‌ப், இடியாப்ப மாவு – 1 டேபிள் ஸ்பூன், தே‌ங்கா‌ய் துருவ‌ல் - 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், மு‌ந்‌தி‌ரி – 15, ஏல‌க்கா‌ய் - 2

செ‌ய்முறை:- பாசிப்பருப்பைக் கழுவி வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரிலேயே சிறிது நெய்யில் வறுத்த இடியாப்பமாவைப் போடவும். நன்கு கிளறி பருப்பும் மாவும் சேர்ந்து வெந்து வந்ததும் சீனியைப் போடவும். சீனி கரைந்து வரும்போது தேங்காய்த் துருவலும் சேர்க்கவும். நன்கு கிளறி கெட்டியாகும்போது நெய்யில் முந்திரி பொரித்துப் போடவும். ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.

 

புதன், 19 அக்டோபர், 2022

துவரம்பருப்பு சட்னி:-

துவரம்பருப்பு சட்னி:-



தேவையானவை:- வரமிளகாய் – 3, துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1/10இஞ்ச் துண்டு, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, புளி - 1 சுளை, உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்,கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- வெறும் பானில் எண்ணெயில்லாமல் வரமிளகாய்., துவரம்பருப்பு., பச்சரிசி., வெந்தயம்., பெருங்காயம் போட்டு வறுத்து பொடிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து எடுத்து உப்பு சேர்க்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயிக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., வெங்காயம் ., தக்காளி., கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். உப்பும் மசாலா பொடியும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து சூடாக இட்லி., தோசையுடன் பரிமாறவும்..

 

செவ்வாய், 18 அக்டோபர், 2022

பேசன் லட்டு

பேசன் லட்டு



தேவையானவை :- கடலை மாவு – 2 கப், நெய் – ½ கப், போரா ( பொடித்த சீனி ) – 1 கப், கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4 பொடிக்கவும். ( முந்திரி பாதாம் அக்ரூட் விரும்பினால் சேர்க்கலாம் )

செய்முறை:- கடலை மாவை வெறும் வாணலில் மிதமான தீயில் 10 நிமிடம் வறுக்கவும். நிறம் மாறி வறுபட்ட வாசனை வந்ததும் நெய்யை உருக்கி ஊற்றிக் கை விடாமல் 5 நிமிடம் திரும்ப வறுக்கவும். நல்ல மணமும் நிறமும் வந்தபின் கடாயைக் கீழிறக்கி வைத்து போராவைச் சேர்க்கவும். கட்டிபடாமல் கிளறி ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிஸ்மிஸைச் சேர்த்து நன்கு கிளறி ஆறவைத்து முந்திரி பாதாம் அக்ரூட்டை சேர்த்து மென்மையான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.



 

சனி, 15 அக்டோபர், 2022

பலம் சேர்க்கும் பருப்பு வகைகள்.

 பலம் சேர்க்கும் பருப்பு வகைகள்.



வியாழன், 13 அக்டோபர், 2022

20. கேரட் பாயாசம்

20. கேரட் பாயாசம்


 

தேவையானவை:- காரட் – 2, பால் – 3 கப் ஜீனி – ½ கப், மில்க்மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 8


 

செய்முறை:- நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுக்கவும். காரட்டைத் தோலுரித்து ஸ்லைசுகளாக நறுக்கிக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் அரைத்துக் கொதிக்கும் பாலில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து ஜீனி சேர்த்துக் கரைந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து இறக்கவும். வறுத்த முந்திரி தூவி குளிர்வித்துப் பரிமாறவும்.

 

புதன், 12 அக்டோபர், 2022

19. மாவடு இஞ்சி மண்டி

19. மாவடு இஞ்சி மண்டி.


 

தேவையானவை:- மாவடு இஞ்சி - 100 கிராம்சிவெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 15, பச்சை மிளகாய் - 6, திக்கான அரிசி களைந்த தண்ணீர் - 2 கப்புளி - நெல்லி அளவுஉப்பு - அரை டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து . வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்பெருங்காயம்ஒரு துண்டுகருவேப்பிலை -  1 இணுக்கு.


 

செய்முறை:- மாவடு இஞ்சியைத் தோல் சீவி நைசாக அரிந்து வைக்கவும்வெங்காயம் பூண்டு பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்அரிசி களைந்த தண்ணீரில் உப்புப் புளியைப் போட்டுக் கரைத்துச் சாறெடுத்து வைக்கவும்எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து வெந்தயம் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம்பூண்டுபச்சை மிளகாய்மாவடு இஞ்சி போட்டு லேசாக வதக்கவும்இதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும்அரிசி களைந்த தண்ணீர் திக்காக இல்லை என்றால் ஒரு டீஸ்பூன் பச்சரிசிஒரு துண்டு பெருங்காயம்கால் டீஸ்பூன் வெந்தயத்தைப் பொடித்துப் போடவும்மண்டி சுண்டியதும் இறக்கவும்இது தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

திங்கள், 10 அக்டோபர், 2022

18. பச்சை மஞ்சள் குழம்பு

18. பச்சை மஞ்சள் குழம்பு.


 

தேவையானவை:- பச்சை மஞ்சள் கிழங்கு – 10, பெரிய வெங்காயம் – 1, பூண்டு - 8 பல், தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு உளுந்து சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – 2 டீஸ்பூன்.  


 

செய்முறை:- பச்சை மஞ்சளைத் தோலுரித்துத் துண்டுகளாக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம் தாளிக்கவும். இதில் வெங்காயம், பூண்டு தக்காளி போட்டு வதக்கி உப்பு சாம்பார் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நன்கு குழைந்ததும் இரண்டு கப் நீரூற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும்போது மஞ்சளைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

சனி, 8 அக்டோபர், 2022

17. இனிப்பு உருளை தோசை

17. இனிப்பு உருளை தோசை.


 

தேவையானவை:- மைதா – 1 கப், பெரிய உருளைக்கிழங்கு – 1, சீனி – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி- 1 சிட்டிகை, நெய்+ எண்ணெய் – 30 மிலி.


 

செய்முறை:- உருளைக்கிழங்கைத் தோல்சீவித் துருவி மைதாவில் போடவும். உப்பு, சீனி, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து ஒரு கப் நீரூற்றி நன்கு கலக்கிப் பத்து நிமிடம் வைக்கவும். நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் தடவித் தோசைகளாகச் சுட்டு எடுத்து தக்காளி கெட்சப்புடன் பரிமாறவும்.

 

வியாழன், 6 அக்டோபர், 2022

16. ஆரோ ரூட் கஞ்சி

16. ஆரோ ரூட் கஞ்சி..


 

தேவையானவை:- ஆரோரூட் மாவு – 1 டேபிள் ஸ்பூன்,  தண்ணீர்- 2 டம்ளர், மோர் – அரை கப், சீரகத்தூள் அல்லது ஓமத்தூள் – கால்டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.


 

செய்முறை:-ஆரோரூட் மாவில் வெதுவெதுப்பான நீரைக் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். கொதித்துக் கண்ணாடி போல் திக்காக ஆனவுடன் சீரகத்தூள் அல்லது ஓமத்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளும், உப்பும் சேர்த்துக் கலந்து நன்கு ஆறவிடவும். ஆறியதும் மோர் ஊற்றிக் கரைத்துப் பகல் நேரத்தில் அருந்தவும்.

 

புதன், 5 அக்டோபர், 2022

15. சிறு கிழங்கு பெப்பர் ஃப்ரை

15. சிறு கிழங்கு பெப்பர் ஃப்ரை.


 

தேவையானவை:- சிறுகிழங்கு – கால்கிலோ, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.


 

செய்முறை:- சிறுகிழங்கை ஒரு துணி அல்லது சாக்குப் பையில் போட்டு அடித்தால் தோல் கழண்டுவிடும். அதைச் சுரண்டி இரண்டாக வெட்டி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துக் கிழங்கைப் போட்டு நன்கு வறுக்கவும். ரோஸ்ட் ஆனவுடன் உப்பு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

 

சனி, 1 அக்டோபர், 2022

14. சிவப்பு முள்ளங்கிப் பச்சடி

14. சிவப்பு முள்ளங்கிப் பச்சடி.

 

தேவையானவை:- சிவப்பு முள்ளங்கி - 200 கிராம்பதமாக வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்பெரிய வெங்காயம் - 1 (பொடியாக அரியவும்), தக்காளி - 1 ( பொடியாக அரியவும்), மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்மல்லிப்பொடி - 2 டீஸ்பூன்புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்., எண்ணெய் - 3 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்சீரகம்- 1/2 டீஸ்பூன்பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.


 

 

செய்முறை:- சிவப்பு முள்ளங்கிகளைக் கழுவித் துண்டுகளாக்கவும்பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்ஜீரகம்., பெருங்காயம் போடவும்வெங்காயம் முள்ளங்கி போட்டு 2 நிமிடம் வதக்க தக்காளி போடவும்புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து உப்பு., மஞ்சள்தூள்., மிளகாய்த்தூள்., மல்லித்தூள் போடவும்இந்தக் கலவையை காயில் கொட்டி கொதிவந்ததும் சிம்மில் வைத்து மூடி போட்டு முள்ளங்கி மென்மையாகும்வரை வேகவிடவும்பருப்பை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...