தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோ, துவரம்பருப்பு – வேகவைத்தது ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, சீரகம், உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, எண்ணெய் – 3 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோ, துவரம்பருப்பு – வேகவைத்தது ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, சீரகம், உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, எண்ணெய் – 3 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
2. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்.
தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, சோளமாவு - 1டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை, எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை :- உருளையைத் தோல்சீவிக் கழுவி விரல் அளவு துண்டங்கள் செய்யவும். இஞ்சி பூண்டு விழுது., மிளகாய்ப்பொடி., சோளமாவு., உப்பு., ஃபுட்கலர்.,சேர்த்து நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும். மாலை நேர சிற்றுண்டியாக டீயுடன் சர்வ் செய்யவும்.
1.கருணை சாஸேஜ்
தேவையானவை:- வேகவைத்த கருணைக்கிழங்கு – 1, வேகவைத்த உருளைக்கிழங்கு – 1, ப்ரெட் – 2 ஸ்லைஸ், வறுத்த சோம்பு, சீரகம், மல்லி – தலா கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், வெங்காயம் பொடியாக அரிந்தது – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு துருவியது – அரைடீஸ்பூன் தலா. சீஸ் துருவியது – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன். தக்காளி சாஸ் – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பூண்டு, வெங்காயத்தை வதக்கி ஆறவிடவும். இதில் வேகவைத்த கருணை, உருளை, ஓரம் நீக்கிய ப்ரெட்ஸ்லைஸ் சேர்க்கவும். சோம்பு, சீரகம் மல்லி, மிளகை வறுத்துப் பொடி செய்து உப்போடு போடவும். தக்காளிசாஸ், துருவிய சீஸ் சேர்த்து சாசேஜ்களாக உருட்டவும். தட்டையான பேனில் எண்ணெய் ஊற்றிப் பிடிகருணைபோல் உருட்டி வேகவைத்துப் பொரித்தெடுக்கவும்.
வகைவகையான கிழங்குகளில் வாய்க்கு ருசியான ரெஸிப்பீஸ்
கிழங்கு வகைகளில் முழுமைச் சமையல்
1. கருணைக்கிழங்கு சாஸேஜ்
2. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
3. சேனைக்கிழங்கு கூட்டு
4. சேப்பங்கிழங்கு சாப்ஸ்
5. வள்ளிக்கிழங்கு பொரியல்
6. சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொடிமாஸ்
7. மரவள்ளிக்கிழங்கு புட்டிங்
8. ஒடியல் கூழ்
9. பீட்ரூட் கோளா
10. பிடிகருணை மசியல்
11. ஆலு புஜியா
12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்
13. வெள்ளை முள்ளங்கிச் சட்னி
14. சிவப்பு முள்ளங்கிப் பச்சடி
15. சிறு கிழங்கு பெப்பர் ஃப்ரை
16. ஆரோ ரூட் கஞ்சி
17. இனிப்பு உருளை தோசை
18. பச்சை மஞ்சள் குழம்பு
19. மாவடு இஞ்சி மண்டி
20. கேரட் பாயாசம்
இந்த ரெஸிப்பீஸ் 30.12. 2021 குமுதம் சிநேகிதியில் வெளியானவை.
வாழை இலை அல்வா
தேவையானவை:- வாழை இலை – 1, கார்ன் ஃப்ளோர் – அரை கப், சீனி – அரை கப், நெய் – கால் கப், சர்க்கரை – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி – 10
செய்முறை:- வாழை இலையைத் தளிராகப் பார்த்து வாங்கித் தண்டு நீக்கித் துண்டுகளாக்கி அரைத்து ஒரு கப் நீரில் போட்டுக் கலக்கி வடிகட்டவும். இதில் கார்ன் ஃப்ளோரைப் போட்டுக் கலக்கி வைக்கவும். ஒரு பானில் நெய்யைக் காயவைத்து முந்திரியைப் பொரித்து எடுக்கவும். வாழை இலை கார்ன் ஃப்ளோர் கலவையை ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் திக் ஆனதும் சீனி சேர்த்து நன்கு கிளறவும். நெய் பக்கங்களில் பிரியத் தொடங்கும்போது ஏலப்பொடி முந்திரி சேர்த்து இறக்கவும்.
நார்த்த இலை உருண்டை
தேவையானவை:- நரம்பு நீக்கிய நாரத்தை இலை – 1 கப், எலுமிச்சை இலை – 1கப், புளியந்துளிர் – 1 கப், விளாங்கொழுந்து இலை -1 கப். வரமிளகாய் – 10, மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, புளி – 4 சுளை, உப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை:- புளியை எண்ணெய் விடாமல் வறுத்து எடுக்கவும். வரமிளகாயையும் அதில் போட்டு சூடுபடுத்தி உப்பைச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கவும். இலைவகைகளை நன்கு பொடியாக நறுக்கி மஞ்சள் தூளுடன் போட்டு மிக்ஸியில் நன்றாகச் சுற்றி எடுத்து உருண்டையாக உருட்டி வைக்கவும். இது தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.
கடுகுக்கீரை சப்ஜி
தேவையானவை:- கடுகுக்கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி - 2 , உப்பு - 1 டீஸ்பூன், ஆம்சூர் பொடி - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன், வர மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:- கீரையைப் பொடியாக அரிந்து குக்கரில் வேகவைக்கவும். அதில் பொடியாக அரிந்த தக்காளி, பெரிய வெங்காயம், உப்பு, ஆம்சூர் பொடி, கரம் மசால் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வேகவைத்து நன்கு மசிக்கவும். எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டி உபயோகப்படுத்தவும். சோளமாவு ரொட்டிக்கு இது நல்ல காம்பினேஷன்.
முள்ளங்கிக் கீரை துவட்டல்
தேவையானவை:- முள்ளங்கிக்கீரை - 1 கட்டு, தண்டு நீக்கிப் பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம்- 10, , வரமிளகாய் – 1, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். ஊறவைத்த பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :- பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு ,உளுந்து போடவும். அதன் பின் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் போடவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் முள்ளங்கிக் கீரையை சேர்க்கவும். கீரையை நன்கு வதக்கியபின், வெந்த பாசிப்பருப்புச் சேர்க்கவும். கால் கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைத்து உப்பு, தேங்காய் சேர்த்து இறக்கவும்.