எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜனவரி, 2012

MASALA PAPPADS. மசாலா அப்பளம்.


MASALA APPALAM.:-
NEEDED :-
FRIED PAPPADS - 6 PIECES
CHOPPED ONION - 1 TBL SPN
CHOPPED TOMATO - 1/2 TBLSPN
CORRIANDER LEAVES - 1 /3 TBLSPN
PEPPER JEERA POWDER - 1/2 TSP

METHOD:-
ARRANGE THE PAPPADS IN A PLATE. SPRINKLE CHOPPED ONION, TOMATO, CORRIANDER LEAVES AND SPRAY PEPPER JEERA POWDER. HAVE IT AS AN EVENING SNACK WITH TEA OR COFFEE.

மசாலா அப்பளம்-
தேவையானவை:-
பொரித்த அப்பளங்கள் - 6 துண்டு
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக அரிந்த தக்காளி - 1/2 டேபிள் ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்துமல்லி - 1/3 டேபிள் ஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
பொரித்த அப்பளங்களை ஒரு தட்டில் அடுக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித்தழை மற்றும் மிளகு ஜீரகப் பொடி தூவி மாலை நேர சிற்றுண்டியாக டீ அல்லது காஃபியுடன் பரிமாறவும்.

SMALL ONION CHUTNEY. சின்ன வெங்காயச் சட்னி.


SMALL ONION CHUTNEY:-
NEEDED:-
SMALL ONION - 20 NOS.
SMALL TOMATO - 1 NO
RED CHILLY - 1 OR 2 NOS
SALT - 1/3 TSP
ASAFOETIDA - 1 PINCH
TAMARIND - 2 PODS.
OIL - 1 TSP
MUSTARD - 1/2 TSP
ORID DHAL - 1/2 TSP

METHOD:-
PEEL AND WASH ONION. CUT THE TOMATO AND ONIONS. PUT ALL THE INGREDIENTS IN A MIXIE JAR. RUN COARSLY OR SMOOTHLY AS U DESIRE. HEAT OIL IN A PAN. ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. POUR THIS INTO THE CHUTNEY AND SERVE IT WITH IDDLIES OR DOSAS.


சின்ன வெங்காயச் சட்னி:-
**************************
தேவையானவை:-
சின்ன வெங்காயம் - 20
சின்னத் தக்காளி - 1
சிகப்பு மிளகாய் - 1 அல்லது 2
உப்பு - 1/3 டீஸ்பூன்
புளி - 2 சுளை
பெருங்காய்த்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:-
சின்ன வெங்காயத்தை உரித்துக் கழுவவும். தக்காளியைக் கழுவித் துண்டு செய்து வெங்காயங்களையும் இரண்டாக நறுக்கவும். எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைசாகவோ கொரகொரப்பாகவோ விருப்பபடி அரைக்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சட்னியில் கொட்டி கலக்கி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ALOO BAROTTA. ஆலு பரோட்டா.



ALOO BAROTTA :-
NEEDED :-
ATTA - 2 CUPS
BOILED POTATO - 2 NOS
CHOPPED ONION - 1 TBL SPN
RED CHILLI POWDER - 1/3 TSP
GARAM MASALA - 1 PINCH
SALT - 1/2 TSP
OIL, WATER NEEDED.
BUTTER OR GHEE OPTIONAL.

METHOD:-
POUR 1 CUP WATER IN ATTA. ADD SALT, 1 TBL SPN OIL AND MAKE A SMOOTH DOUGH. KEEP ASIDE. PEEL AND SMASH POTATO WITH CHOPPED ONION, GARAM MASALA CHILLI PWDR AND SALT. DIVIDE THE DOUGH INTO 12 EQUAL PARTS AND THE ALOO MASALA ALSO INTO 12 EQUAL BALLS. ROLL AND FLATTEN THE DOUGH AND STUFF THE ALOO MASALA IN IT. SPREAD IT INTO THICK CHAPPATHIS . HEAT TAWA AND TOAST IT WITH OIL OR GHEE OR BUTTER. SERVE HOT WITH ACHAR AND DAHI.

ஆலு பரோட்டா:-
தேவையானவை:-
கோதுமை மாவு - 2 கப்
அவித்த உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 1/3 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர், எண்ணெய் தேவையான அளவு.
நெய்/வெண்ணை விரும்பினால் சேர்க்கலாம்.

செய்முறை:-
கோதுமை மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு , 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து மூடி வைக்கவும். உருளையை உரித்து அதில் உப்பு மிளகாய்த்தூள், பெரிய வெங்காயம், கரம் மசாலாதூள், போட்டு 12 சம பாகங்களாக உருட்டவும். மாவையும் 12 சம பாகங்களாக உருட்டவும். ஒவ்வொரு மாவு உருண்டையையும் தட்டையாக்கி அதில் உருளை மசாலாவை ஸ்டஃப் செய்து மூடி திரும்ப உருண்டைகளை உருட்டி கனமான சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் வெண்ணை, நெய் அல்லது எண்ணெய் விட்டு சுடவும். ஊறுகாய், தயிருடன் சூடாக பரிமாறவும்.

திங்கள், 2 ஜனவரி, 2012

CAKE EGG GRAVY. கேக் முட்டைக் குழம்பு.


CAKE EGG GRAVY:-
NEEDED:-

FOR MAKING CAKE :-
EGG - 6 NOS
BIG ONION - 1 NO. CHOPPED FINELY
GREEN CHILLY - 2 NOS . CHOPPED FINELY.
PEPPER JEERA POWDER - 1/2 TSP
SALT - 1/4 TSP

BEAT THE EGGS WELL ADD THE OTHER INGREDIENTS AND MIX WELL. POUR INTO A OILED VESSEL AND STEAM COOK FOR 10 MINUTES. REMOVE, COOL AND CUT THEM INTO DIAMOND OR SQUARE SHAPES. KEEP ASIDE.

FOR GRAVY :-
SMALL ONIONS - 10 NOS
GARLIC - 7 PODS
TOMATO - 2 NOS
RED CHILLY POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 3 TSP
TURMERIC POWDER - 1 PINCH
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 1/2 TSP
COCONUT - 1 TBLSPN ( GROUND)
OIL - 1 TBL SPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/3 TSP
CURRY LEAVES - 1 ARK.

PREPARATION:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, JEERA, CURRY LEAVES. ADD THE WASHED AND PEELED ONION, GARLIC , TOMATO. SAUTE WELL. SOAK THE TAMARIND IN 3 CUPS OF WATER . SQUEEZE THE PULP OUT OF IT. ADD SALT , CHILLI PWDR, CORRIANDER PWDR AND TURMERIC PWDR. POUR THIS INTO THE PAN. BRING TO BOIL. THEN ADD THE GROUND COCONUT PASTE. ADD SOME MORE WATER. WHEN ITS BOILING ADD THE EGG CAKES COOK FOR 4 MINUTES. REMOVE FROM FIRE AND SERVE HOT WITH PLAIN RICE OR DOSAS.

கேக் முட்டைக் குழம்பு:-
தேவையானவை:-

கேக் துண்டுகள் செய்ய:-
முட்டை - 6
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்
ஜீரகம் மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேடவிடவும். அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். ஆறியவுடன் சதுரமாகவோ, டைமண்ட் ஷேப்பிலோ துண்டுகள் செய்யவும்.

குழம்புக்கு :-
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப் பூண்டு - 7
தக்காளி - 2
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( அரைத்தது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-
ஒரு பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போடவும். போட்டு வெடித்தவுடன் உளுந்து ஜீரகம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். உப்பு , புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைப் போடவும். இந்தக் கலவையை பானில் ஊற்றி கொதிவர செய்யவும். இதில் அரைத்த தேங்காயை சேர்க்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைத்துண்டுகளைப் போடவும். 4 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடாக சாததோடு அல்லது தோசைகளோடு பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...