எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 மார்ச், 2011

CURRY LEAVES GRAVY.. கருவேப்பிலைக் குழம்பு..


CURRY LEAVES GRAVY...
NEEDED :-
CURRY LEAVES - 1 BOWL
SMALL ONION - 10 NOS
GARLIC - 10 NOS
TOMATO - 1 NO
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
CHILLI POWDER - 1 TSP
DHANIYA POWDER - 1 TSP
TURMERICPOWDER - 1 PINCH.
SOMPH - 1/2 TSP
JEERA - 1/4 TSP
PEPPER - 5 NOS
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA - 1 SMALL PIECE.
METHOD :-
WASH THE CURRY LEAVES. GRIND CURRY LEAVES WITH SOMPH ., JEERA., PEPPER., SALT ., TAMARIND, CHILLI POWDER., DHANIYA POWDER., TURMERIC POWDER., TOGETHER TO A PASTE. PEEL AND CHOP SMALL ONION., GARLIC AND TOMATO. HEAT THE IOL IN A PAN ADD MUDTARD. WHEN OT SPLUTTERS ADD ORID DHAL AND ASAFOETIDA. WHEN IT BECOMES BROWN ADD ONION., GARLIC., TOMATO. SAUTE WELL. THEN ADD THE GROUND PASTE AND ADD ENOUGH WATER , BRING TO BOIL AND KEEP SIM FOR 20 MIN . , COVERED WITH LID., TILL OIL OOZES OUT. SERVE HOT WITH PLAIN RICE OR IDDLIES .
ITS A GOOD APPETISER AND THE IRON CONTENT IS HIGH ..
கருவேப்பிலை குழம்பு :-
தேவையானவை:-
கருவேப்பிலை - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப்பூண்டு - 10
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு .
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 5
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 துண்டு.
செய்முறை:-
கருவேப்பிலையை கழுவி அதோடு சோம்பு ., சீரகம்., மிளகு., மல்லிப் பொடி., மிளகாய்ப்பொடி., மஞ்சள் பொடி., உப்பு., புளி போட்டு நன்கு மைய அரைக்கவௌம். சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளியை தோலுரித்து பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் ., பெருங்காயம் போட்டு., பின் வெங்காயம்., பூண்டு ., தக்காளியைப் போடவும். நன்கு வதங்கியதும்., அரைத்த கலவையை ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சூடாக சாதம் அல்லது இட்லியுடன் பரிமாறவும். இது பசியை தூண்டும். மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

8 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி..
    ஆனால் நான் ரிக்ஸ் எடுக்க தயாராக இல்லை..
    ஏன்ன இப்பத்தான் நான் கவிதை எழுததை நாலு பேர் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க..
    அதே ரூட்ல போரேன்..

    பதிலளிநீக்கு
  2. அந்த கடிகாரம் எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க மேடம்..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் செய்முறை வித்தியாசமா நல்லாயிருக்கு அக்கா!!

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஹெல்தி+உடம்பிற்க்கு ஏற்ற குழம்பு. என் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. நான் வெங்காயம் சேர்க்காமல் செய்வேன். இந்த குழம்பு ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் தேனு..

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா சௌந்தர்.. எங்களுக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி..

    இந்த கடிகாரம் ., கையெழுத்து எல்லாம் நாங்க வந்தேமாதரம் ப்லாக் பார்த்துதான் கத்துக்கிட்டோம் சௌந்தர்..

    எல்லாப் புகழும் சகோ சசிகுமாருக்கே..:)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. நல்ல ஹெல்தி யான குழம்பு

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...