எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2024

புத்தாண்டு ரெசிப்பீஸ் - சர்வதேச இனிப்புகள்


 ////”இனிப்பைச் சாப்பிட்டு இனிப்பாகப் பேசுங்கள்” என்பது ஒரு துருக்கியப் பழமொழி . கடந்த ஐந்தாண்டுகளாக ஜெர்மனியின் கொலோன் நகரத்தில் வசிக்கும் நான் குமுதம் சிநேகிதிக்காக ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பல்கேரிய, எகிப்து, ஒட்டாமான், ஐரிஷ், டர்க்கிஷ் இனிப்பு வகைகளை (சிலவற்றை டெஸர்ட் என்றும் சொல்லலாம்) அனுப்பி உள்ளேன். கேக் வகையறாக்கள் ஜெர்மனியில் பிரசித்தம், ப்ளாக் ஃபாரஸ்ட் என்பது ஜெர்மனியில் இருக்கும் ஒரு இடம். துருக்கிய இனிப்புக்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி, சீனிப்பாகு அதிகம். ஆரோக்கியத்துக்கும் ஏற்றவை. எனவே இந்த இனிப்புகளைச் செய்து சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

நன்றி

அன்னபூரணி சபாரெத்தினம்

ஜெர்மனி.////

 



1.பஹ்க்லாவாஹ்
2.குனாஃபா
3.பாலக் லசான்யா
4.பிசி பிசி
5.ஃப்ரெஞ்ச் மக்ரூன்
6.ஆப்பிள்குக்
7.ஜெர்மன் பெர்லினர் டோநட்ஸ்
8.பேகட் ரஸ்க் சாக்லேட் & நட்ஸ்
9.துலும்பா
10.கசாந்திபி
11.பிஸ்மானியி
12.லோகும்
13.ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்
14.மார்ஸிபான்
15.டெமிர் டாட்லிஸி
16.ஹனிம் கோபெகி
17.கோஸ்மெரிம்
18.பபெக்யுரா
19.ஸெர்டி
20.ப்ளம் கேலேட்


டிஸ்கி:- இந்த இனிப்புகள் 16.12.2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

புதன், 27 மார்ச், 2024

25.ஸ்வீட் கார்ன் மிக்ஸ்

25.ஸ்வீட் கார்ன்  மிக்ஸ்


 

தேவையானவை:- வேகவைத்த ஸ்வீட் கார்ன் – 2 கப், வெங்காயம் பொடியாக அரிந்தது – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி பொடியாக அரிந்தது – 1 டேபிள்ஸ்பூன், கேரட் பொடியாக அரிந்தது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கருப்பட்டிப் பாகு – 2 டீஸ்பூன், பேரீச்சை ஜாம் – 2 டீஸ்பூன். தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன் பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழை – சிறிது. உப்பு – கால் டீஸ்பூன்.  

 

செய்முறை :- இவை அனைத்தையும் கலந்து பரிமாறவும். தேவைப்பட்டால் ஓமப்பொடி, பொரி சேர்த்துக் கொள்ளலாம்.

திங்கள், 25 மார்ச், 2024

24.நெல்லிக்காய் ஸ்வீட் தொக்கு

24.நெல்லிக்காய் ஸ்வீட் தொக்கு


 

தேவையானவை:- முழு நெல்லிக்காய் – 30, வெல்லம் – 2 அச்சு, தேன் – கால் கப், உப்பு – 1 சிட்டிகை.

 

செய்முறை:- நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொட்டை நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து மசித்து வைக்கவும். இதில் துருவிய வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். நன்கு இறுகி வரும்போது இறக்கி நன்கு ஆறவிட்டுத் தேன் சேர்க்கவும்.

வெள்ளி, 22 மார்ச், 2024

23.இனிப்பு உருளை ஃபிங்கர் சிப்ஸ்

23.இனிப்பு உருளை ஃபிங்கர் சிப்ஸ்


 

தேவையானவை:- இனிப்பு உருளை – கால் கிலோ, ஜீனி – 1 கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 2. நெய் – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- இனிப்பு உருளையைத் தோல் சீவி குச்சிகளாகச் சீய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். முந்திரி கிஸ்மிசை நெய்யில் பொன்னிறமாக வறுத்து பொரித்த உருளையில் சேர்க்கவும். ஜீனியை முத்துப் பாகு வைத்து அதில் உருளைச் சிப்ஸைப் போட்டு நன்கு புரட்டி வைக்கவும். ஜீனிக்குப் பதில் வெல்லமும் பயன்படுத்தலாம்.

வியாழன், 21 மார்ச், 2024

21.சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

21.சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்


 

தேவையானவை:- சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம், பச்சரிசி பாசிப்பருப்பு – தலா இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 1 அச்சு, நெய் – 2 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 8.

 

செய்முறை:- சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்துத் தோலுரித்து மசித்து வைக்கவும். பச்சரிசி பாசிப்பருப்பை லேசாக வெதுப்பித் தூளாக அரைத்து இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வேக விடவும். நன்கு வெந்ததும் மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெல்லத்தூளைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தேங்காயை அரைத்து ஊற்றி இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்து ஏலப்பொடியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

செவ்வாய், 19 மார்ச், 2024

20.பலாக்கொட்டை சுகியன்

20.பலாக்கொட்டை சுகியன்


 

தேவையானவை :- பலாவிதை – 30, தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 2 அச்சு, புதிதாக அரைத்த இட்லிமாவு – 1 கப், ஏலப்பொடி- 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- பலாவிதைகளைத் தோலுரித்து ப்ரவுன் தோலையும் சீவி நன்கு கழுவி வேகவைத்து நீரை வடிக்கவும். இதை மிக்ஸியில் அரைத்து இத்துடன் தேங்காய்த்துருவல், வெல்லம்சேர்த்துக் கிளறி ஏலப்பொடி போட்டு வைக்கவும். இதில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கெட்டியான இட்லி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வியாழன், 14 மார்ச், 2024

19.பாகற்காய் ஸ்வீட் பச்சடி

19.பாகற்காய் ஸ்வீட் பச்சடி


 

தேவையானவை - பாகற்காய் – கால் கிலோ, வெல்லம் – 1 அச்சு, தக்காளி – 1, புளி – 2 சுளை, உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை:- பாகற்காயை விதை நீக்கிப் பொடியாக நறுக்கவும். தக்காளியைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பாகற்காயை வதக்கித் தக்காளியைப் போட்டு உப்புப் புளியை அரை கப் நீரில் கரைத்து ஊற்றி மிளகாய்ப்பொடியைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் வெல்லத்தைத் தூள் செய்து போட்டுக் கரைந்ததும் கடுகு தாளித்து இறக்கவும். பச்சடி நீர்த்து இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவைக் கரைத்து ஊற்றவும்.  

திங்கள், 11 மார்ச், 2024

18.செவ்வாழை புட்டிங்

18.செவ்வாழை புட்டிங்

 

தேவையானவை:- செவ்வாழை – 2, தேங்காய்த்துருவல்- 2 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்போடி -1 சிட்டிகை.

 

செய்முறை:- செவ்வாழையைத் தோலுரித்து ஸ்லைசுகளாக நறுக்கி வட்டமாக அடுக்கவும். இதில் தேங்காய்த் துருவலைத் தூவித் தேன் ஊற்றி ஏலப்பொடியையும் தூவிப் பரிமாறவும்.

வெள்ளி, 8 மார்ச், 2024

17.புதினா சர்பத்

17.புதினா சர்பத்


 

தேவையானவை:- புதினா இலைகள் – ஒரு கப், ஜீனி அல்லது வெல்லம் – கால் கப், பச்சை எலுமிச்சங்காய் தோலுடன் – கால் பாகம், கறுப்பு உப்பு – 1 சிட்டிகை, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – சிறு துண்டு, வறுத்த சீரகப் பொடி – கால் டீஸ்பூன், ஐஸ் துண்டுகள் – 10

 

செய்முறை:- ஐந்து ஐஸ் துண்டங்களோடுஇவை அனைத்தையும் ப்ளெண்டரில் போட்டு நன்கு அடித்து வடிகட்டி தேவையான நீர் சேர்த்து மிச்ச ஐஸ் துண்டுகளைப் போட்டுப் பரிமாறவும்.

புதன், 6 மார்ச், 2024

16.மேங்கோ பன்னா

16.மேங்கோ பன்னா



 

தேவையானவை:- மாங்காய் – 2, ஜீனி – மாங்காயின் சதைப்பகுதி அளவில் இரண்டு மடங்கு, ஏலப்பொடி – கால் டீஸ்பூன் , வறுத்த சீரகப் பொடி – அரை டீஸ்பூன், மிளகுப்பொடி – கால் சிட்டிகை, கறுப்பு உப்பு அல்லது சாதாரண உப்பு – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- மாங்காய்களைக் கழுவி ஒரு பிரஷர் குக்கரில் இரண்டு கப் நீரூற்றி முழுதாக வேகவிடவும். வெந்தநீரை வடித்து வைத்துக் கொள்ளவும். இது ஜூஸ் தயாரிக்கும்போது உதவும். மாங்காயின் சதைப்பகுதியைத் தோலுரித்து, கொட்டை எடுத்து நன்குவழித்து எடுத்து மசிக்கவும். வழித்து எடுத்த சதைப் பகுதியைப் போல இரண்டு மடங்கு ஜீனி, ஏலப்பொடி, வறுத்த சீரகப் பொடி, மிளகுப்பொடி, கறுப்பு உப்பு சேர்த்து நன்கு கரைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஜூஸ் தயாரிக்கும்போது  இதில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூனை ஒரு க்ளாஸில் போட்டு மாங்காய் வேகவைத்த தண்ணீரைக் கலந்து பரிமாறவும். 

சனி, 2 மார்ச், 2024

15.நாட்டு வாழைக்காய் ஸ்வீட் போண்டா

15.நாட்டு வாழைக்காய் ஸ்வீட் போண்டா




 தேவையானவை:- நன்கு பழுத்த நாட்டு வாழைக்காய் – 2, கோதுமைமாவு – 1 டேபிள் ஸ்பூன், மைதா – ஒரு டேபிள் ஸ்பூன், ரவா – 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- நன்கு பழுத்த நாட்டு வாழைக்காய்களைத்தோலுரித்து உப்பு, வெல்லத்தோடு போட்டு நன்கு பிசையவும். மிக்ஸியில் போட்டுக் கூழாக்கவும் செய்யலாம். இதில் ஏலப்பொடி, ரவா, மைதா, கோதுமை மாவைச் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் பிசைந்து சில நிமிடம் ஊற வைக்கவும். இறுக்கமாக இருந்தால் சிறிது பால் தெளித்துப் பிசையலாம். எண்ணெயைக் காயவைத்துப் போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுத்துப் பேரீட்சை ஜாமுடன் பரிமாறவும்.  

வெள்ளி, 1 மார்ச், 2024

14.பலாக்காய் சுக்குவரட்டி

14.பலாக்காய் சுக்குவரட்டி


 

தேவையானவை:- லேசாகப் பழுக்க ஆரம்பிக்கும் பலாச்சுளைகள் – 15, வெல்லம் – 1 கப், ஏலப்பொடி, சுக்குப் பொடி – தலா 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

 

செய்முறை:- பலாச்சுளைகளைக் கொட்டை நீக்கி நான்காகப் பிரித்து வைக்கவும். வெல்லத்தில் சிறிது நீர் தெளித்து முத்துப் பாகு வைத்து ஏலப்பொடி, சுக்குப்பொடி போட்டுக் கலந்து வைக்கவும். எண்ணெயில் பலாச்சுளைகளைப் பொரித்தெடுத்து வெல்லப்பாகில் போட்டு உடனே புரட்டி ஒரு தட்டில் எடுத்து ஆறவிடவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...