1.கடலை எள்ளு சிக்கி
2.கோதுமைச் சீயம்
3.சிவப்பரிசிக் கொழுக்கட்டை
4.துவரம்பருப்புத் துவையல்.
5.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்.
6.மல்லாட்டைச் சட்னி.
7.மைதா முள்ளு முறுக்கு.
8.சாமை தயிர்சாதம்
9.மாவற்றல் குழம்பு
10.சர்க்கரை வள்ளிக்கிழங்குப் பாயாசம்.
1.கடலை எள்ளு சிக்கி :-
தேவையானவை :- வேர்க்கடலை - 1 கப், வெள்ளை எள் – அரை கப், நெய் – ஒரு டேபிள்
ஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலப் பொடி – கால் டீஸ்பூன்
செய்முறை:- வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நெய்யைத் தடவி வைக்கவும். ஒரு பானில் மிச்ச நெய்யைக் காயவைத்து சர்க்கரையைப்
போட்டு உருகவிடவும். லேசாக உருகி வரும்போது வேர்க்கடலை, எள்ளைப் போட்டு ஏலப் பொடியையும்
போட்டு நன்கு கிளறி லேசாக இளக்கமாக இருக்கும்போதே நெய் தடவிய தட்டில் கொட்டி சப்பாத்திக்
கட்டையால் சமப்படுத்தவும். முழுதாய்ப் பெரிய வட்டமாகவோ அல்லது சதுரத் துண்டுகள் போட்டு
நிவேதிக்கவும்.