17.தால் தட்கா
தேவையானவை:- துவரம்பருப்பு - 1 கப், பெரிய வெங்காயம் - 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 1, பச்சைமிளகாய் - 2, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் -1 சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை - சிறிது. கொத்துமல்லி – சிறிது, எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்.
செய்முறை:-துவரம்பருப்பைக் கழுவிக் குக்கரிப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெங்காயத்தைப் பொடியாக அரியவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி சீரகம், வரமிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதில் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய், இஞ்சி ,பூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வதக்கவும். உப்பையும் போட்டுமசிந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போட்டு எண்ணெய் பிரிந்ததும் வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து ஊற்றவும். கொதித்ததும் காய்ந்த வெந்தயக் கீரை, கொத்துமல்லித்தழை தூவிஎலுமிச்சைச்சாறுசேர்த்து இறக்கவும்.சப்பாத்தி, சாதம், மேத்தி பரோட்டா , நான் , ருமாலி ரொட்டி ஆகியவற்றோடு இது நன்றாக இருக்கும்.