PREPARATION:-
GRIND ALL THE INGREDIENTS TOGETHER . CLEAN AND WASH THE CHICKEN . HEAT OIL IN A KADAAI , ADD THE CHICKEN & SAUTE FOR 2 MINUTES. ADD THE GROUND MASALA AND SAUTE WELL FOR 5 MINUTES. ADD TURMERIC POWDER, CHILLI POWDER, CORRIANDER POWDER, SALT AND ADD LITTLE WATER. KEEP COVERED AND COOK. STIRR OCCASSIONALLY. COOK TILL DONE( MAY BE 20 MINUTES...TILL THE OIL SEPERATES AT THE SIDES). SERVE HOT WITH RICE OR CHAPPATHI.
கடாய் சிக்கன்:-
தேவையானவை:-
எலும்புடன் சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
அரைக்க:-
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1 சிறியது
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 8 பல்
மிளகு - 1/2 டேபிள்ஸ்பூன்
ஜீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை இலை - 1 இன்ச் துண்டு
பட்டை - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு 2
எண்ணெய் 75 கிராம்.
செய்முறை:-
அரைக்க கொடுத்துள்ளவைகளை நன்கு அரைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை 2 நிமிடம் வதக்கவும். அதில் அரைத்த மசாலாவைப் போட்டு 5 நிமிடம் வதக்கவும். மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு போட்டு வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும். மூடி வைத்து அவ்வப்போது கிளறி வேகவிடவும். ( 20 நிமிடம் ஆகும். ) ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம் /சப்பாத்தியுடன் பரிமாறவும்.