விநாயகர் ரெசிப்பீஸ் :-
1.எருக்கலங்கொழுக்கட்டை
– தேங்காய் வெல்லப்பூரணம்
2.எருக்கலங்கொழுக்கட்டை
– எள்ளு கருப்பட்டிப் பூரணம்
3.எருக்கலங்கொழுக்கட்டை
– பருப்பு சர்க்கரைப் பூரணம்.
4 எருக்கலங்கொழுக்கட்டை
– உளுந்துப் பூரணம்
5. எருக்கலங்கொழுக்கட்டை
– காய்கறிப் பூரணம்.
6. அரிசி பருப்பு
உருண்டைக் கொழுக்கட்டை.
7. ரவை சுகியன்.
8.கருப்பட்டி
மோதகம்
9.கோதுமை அப்பம்.
10.சோள வடை
11.ஃப்ரூட்
வெர்மிசெல்லி கீர்.
1.எருக்கலங்கொழுக்கட்டை
– தேங்காய் வெல்லப் பூரணம்.
தேவையானவை
:- பச்சரிசி – 2 கப், தேங்காய் – 1, வெல்லம் – அரை கப், ஏலக்காய் – 1சிட்டிகை. நல்லெண்ணெய்
– 2 டீஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை. நெய்- 2 டீஸ்பூன், ஒடித்த முந்திரி – 10.
செய்முறை:-
மேல்மாவு தயாரிக்க:- பச்சரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து
நைஸாக சிறிது தளர அரைக்கவும். பானில் நல்லெண்ணெயைக் காயவைத்து இந்த மாவைக் கொட்டி ஒட்டாத
பதம் வரும் வரை சுருளக் கிளறவும். இறக்கி ஆறவிடவும். பூரணம் செய்ய :- தேங்காயைத் துருவி
வெல்லம் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் நெய்யில் முந்திரியைப் பொரித்துப் பூரணத்தில்
போட்டு அதை நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்யவும். மேல்மாவில் எலுமிச்சை
அளவில் உருண்டைகள் எடுத்து சொப்பு செய்து இந்தப் பூரணத்தை உள்ளே வைத்து மூடி இட்லி
பாத்திரத்திலோ அல்லது குக்கரில் வெயிட் போடாமலோ 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும். நிவேதிக்கவும்.
2.எருக்கலங்கொழுக்கட்டை
– எள்ளு கருப்பட்டிப் பூரணம்.
தேவையானவை.
:- பச்சரிசி – 2 கப், கறுப்பு எள்ளு – 1 கப், கருப்பட்டி – கால் கப், வெல்லம் – கால்
கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.