தேவையானவை :-
கொண்டைக்கடலை – 2 கப், மைதா – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம்
– 1 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – கால் கப், வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்
, சீரகம், 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு
– 5 பல், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான
அளவு.
செய்முறை:-
வெள்ளைக் கொண்டைக் கடலையைக் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
நீரை வடித்து மிக்ஸியில் கொண்டைக் கடலை, மைதா, பெரிய வெங்காயம், கொத்துமல்லித் தழை,
சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய்த்தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.
வடைகளாகத் தட்டி வெள்ளை எள்ளில் புரட்டி வைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப்
பொரிக்கவும். மயோனிஸுடன் பரிமாறவும்.
கொண்டைக்கடலையில்
அதிக அளவு துத்தநாகம் இருக்கின்றது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கும் மூளை
வளர்ச்சிக்கும் உதவுது. பல்வேறு கனிமச் சத்துகளும் நார்ச்சத்துகளும்
அடங்கி உள்ளன.
தோல்
எடுக்காத முழு கொண்டைக்கடலையில் உடல் நலனுக்குத் தேவையான ஊட்டச்
சத்துகளும் நோய் எதிர்ப்புச் சக்தியும் அடங்கி உள்ளது. இரத்தத்தில்
சர்க்கரை அளவையும் ஹார்மோன்களின் செயல்பாட்டையும் கட்டுக்குள் வைக்குது.
இரத்த அழுத்தத்தையும் இரத்த சோகையையும் கட்டுப் படுத்துது.
இதில்
இருக்கும் மக்னீஷியம் ஃபோலேட் ஆகியன இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக்
கட்டுப்படுத்தி இதயக் குழாய்களை சீராக செயல்பட வைக்கின்றன. இதில்
அபரிமிதமாகக் காணப்படும் மாலிப்டினம் பற்சிதைவைத் தடுக்குது. சாப்போனின்
என்ற போட்டோ கெமிக்கல் ஆஸ்டியோ போராஸிஸ் மற்றும் கான்சர் ஆகியவற்றைத்
தடுக்குது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக