கிச்சன்
கில்லாடி:-
சமைக்கிறது
ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை. அது மிக மிக எளிமையான ஒரு ப்ராக்டிகல்தான். ஒரு சில
தியரிகளை ..ஒரு சில டிப்ஸ்களைப் பின்பற்றினால் நீங்களும் கிச்சன் கில்லாடிதான்.
1.ப்ளெயின்
பொரியல் :- எல்லாக் காய்கறிகளையும் ஆவியில் வேகவைத்துவிட்டுப் பொரித்தால் நிறம் மணம்
சுவை மாறாது. அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு உளுந்து வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து
உப்பு, தேங்காய் போட்டுக் கலக்கி …. படாஃபட் இறக்கவேண்டியதுதான்.
2. காரப்
பொரியல் :- உருளை, வாழை, வெண்டி, கத்திரி இவற்றை கடுகு உளுந்து தாளித்து ( பிடித்தால்
சோம்பு போடலாம் ) இரண்டு நிமிடம் வதக்கி உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்து சிம்மில் போட்டு
5 – 7 நிமிடம் கிளறி இறக்க வேண்டியதுதான். சேனை, சேம்பு போன்றவற்றை வேகவைத்து இதே முறையில்
செய்யணும்.
3. ஃப்ரூட்
சாலட்களில் ஜீனிக்கு பதிலாக தேனும் பேரீச்சையும் உபயோகிக்க வேண்டும்.
4. குளிர்காலத்தில்
ஒரு ரசம் நல்லது. தூதுவளை, பைனாப்பிள், வெற்றிலை, கற்பூரவல்லி இலை, துளசி, இளநீர்,
ரோஜாப்பூ, வேப்பம்பூ ஆகியவற்றில் ரசம் வைக்கலாம்.
5. ஆப்பிள்
பைனாப்பிள், தக்காளி, கோளா உருண்டை ஆகியவற்றிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.
6. தீயை
மிதமாகவே வைத்து சமைப்பது நல்லது ( பாத்திரம் கழுவுபவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான்
. ;) ஃப்ரைட் ரைஸ் செய்யும்போதுதான் தீயை ஹை
ஃப்ளேமில் வைக்கணும்.
7. கொத்துமல்லி,
புதினா, கொழுந்து கருவேப்பிலை உபயோகித்து வெரைட்டி தோசைகளும், வெரைட்டி ரைஸஸும் செய்யலாம்.
8. ஆலிவ்
ஆயிலை சாலட், நூடுல்ஸ் போன்றவற்றில் ஸ்ப்ரே செய்துதான் உபயோகிக்கணும். சூடுபடுத்தக்
கூடாது.
9. அரிசி
களைந்த தண்ணீரில் மணத்தக்காளி/பொன்னாங்கண்ணிக்கீரை சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்து
வேகவைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் வாய்ப்புண் ஆறும்.
10.
கடுகு உளுந்து எண்ணெயில் தாளித்து ஒரு பாட்டிலிலும், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி,
மஞ்சப் பொடி பாக்கெட்டுகளிலும் புளி உப்பு சிறிதும் அரிசி கொஞ்சமும் ஒரு குட்டி ரைஸ்
குக்கரும் டூர் போகும் ஊர்களுக்குக் கொண்டு சென்றால் விருந்தே சாப்பிட்டு விடலாம்.
ஒரு 3 கப் டிபன் டப்பா இருந்தால் நலம்.
ரைஸ்
குக்கரில் தண்ணீர் ஊற்றி தேவையான காய்கறிகளை வேகப்போட்டு முக்கால் பதம் வெந்ததும் உப்பு
மிளகாய்ப் பொடி போட்டு இரு நிமிடம் கழித்து கடுகு உளுந்து எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக்
கிளறி இறக்கினால் காரப் பொரியல் ரெடி.
வெங்காயம்
தக்காளி, பூண்டு காய்களைக் கட் செய்து உப்புப் புளித் தண்ணீரில் போட்டு ( சீரகம், துண்டு
பெருங்காயம் இருந்தால் பச்சையாகப்போடலாம் ) சாம்பார் பொடி போட்டுக் பத்து நிமிடம் கொதித்ததும்
கடுகு உளுந்து எண்ணெயை ஒரு ஸ்பூன் விட்டு இறக்கினால் குழம்பு ரெடி.
பாசிப்பருப்பு
சீரகம் காய் அல்லது கீரையை உப்புப் போட்டு வேகவைத்து இறக்கினால் கூட்டு ரெடி.
சாதம்
வைத்து சிப்ஸ், தயிர் வாங்கி ஜமாய்க்க வேண்டியதுதான். போற ஊர்ல எல்லாம் சமைக்க முடியுமா
என்று கேக்கிறீங்களா.. வயிறு ரொம்பப் படுத்தினா என்ன செய்றது. வெளிய விக்கிற சோறு ஒத்துக்காட்டா
அவதிப்படப் போறது நாமதானே.
என்
ஃப்ரெண்ட் குடும்பம் ஒருத்தங்க வெளிநாட்டு டூருக்கே ரைஸ் குக்கரோட போனாங்க. ஆனா என்ன
யோகர்ட் வாங்கி பிக்கிள்ஸ் அல்லது சாலட்டோட சாப்பிட்டாங்களாம்.
சில ஹோட்டல்களில் மினி ஃப்ரிட்ஜ் இருக்கும். வீட்டிலிருந்து தக்காளித் தொக்கு, கருவேப்பிலைக் குழம்பு, புளிக்காய்ச்சல் எடுத்துட்டுப் போனா அதுல வைச்சு சாப்பிடும்போது தண்ணீல சூடு பண்ணி 3 நாளைக்கு சமாளிக்கலாம்.
ஒரு
வாய் சோறு சாப்பிடாட்டா நமக்கு என்னவோ போலிருக்கும்தானே. அதுனால நார்த் இண்டியா போறதுன்னா
எது எடுத்துக்கிறமோ இல்லையோ ஒரு குட்டி எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் கொஞ்சம் அரிசியும்
எடுத்துட்டுப் போயிடுறது வழக்கம். காலையிலயும் நைட்லயும் சப்பாத்தி சாப்பிட்ட வாய்க்கு
தயிரும் ஊறுகாயுமே அமிர்தமா இருக்கும் . ட்ரை பண்ணிப்பாருங்க. J